யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/11/16

கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

சென்னை: தமிழக அரசின், கணினி தமிழ் விருது பெற, டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ் மொழி வளர்ச்சியை, கம்ப்யூட்டரின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது, ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் உடையது. 2013 முதல் 2015க்குள், மென்பொருள் தயாரித்தோர், இந்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, தமிழ் வளர்ச்சி துறையின் இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு, டிச., 31க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால், மதிப்பெண் பட்டியலில், அந்த எண் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை, தேர்வுத்துறை சேகரித்தது. மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் தனியாக, 14 இலக்க நிரந்தர பதிவெண் வழங்கப்பட்டது. இந்த பதிவெண், கல்லுாரிகளில் மாணவர்கள் சேரும் போதும் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்கள் பெறப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது, மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இணைக்கப்படுமா என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர். 

அடுத்த ஆண்டும் பழைய 'சிலபஸ்' பிளஸ் 2 மாணவர்கள் ஏமாற்றம்

நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பிளஸ் 2 முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வு, இந்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லுாரி இடங்களுக்கும் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நீட்' தேர்வில், தமிழக மாணவர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேர்வதற்கான, ஜே.இ.இ., தேர்வை சந்திக்கும் வகையிலும் இல்லை என, கல்வியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர். தமிழகத்தில், 2006ல், அறிமுகமான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால், பெற்றோரும், மாணவர்களும் கவலையில் உள்ளனர். வரும் கல்வியாண்டிலாவது, புதிய பாடத்திட்டம் அமலாகும் என, எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், 'அடுத்த கல்வி ஆண்டிலும், பழைய பாடத்திட்டமே செயல்பாட்டில் இருக்கும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலுக்காக, புதிய பாடத்திட்டம் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளதால், மாணவர்கள், பெற்றோர் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

டி.இ.ஓ.,தேர்வு முடிவு

சென்னை: பள்ளி கல்வித்துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015, ஆகஸ்டில், முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், 2,432 பேர் பங்கேற்றனர். இவர்களில், 35 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றதாக, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது.
இவர்களுக்கு, நவ., 21ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. இதேபோல், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 காலியிடங்களுக்கான, 'குரூப் - 3 ஏ' எழுத்துத் தேர்வு, 2013 ஆகஸ்டில் நடந்தது. இதில், 46 ஆயிரத்து, 797 பேர் பங்கேற்றனர் இவர்களில், 843 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, நவ., 25 முதல் டிச., 2 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோரின் விபரம், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இனி கார்டு வேண்டாம்... அலைபேசி போதும் : ரேஷன் பொருட்கள் வாங்க புதிய வசதி அறிமுகம்

தேனி: ரேஷன் கடைக்கு கார்டு இல்லாமலேயே, அலைபேசியுடன் சென்று பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக அடுத்தாண்டு 'ஸ்மார்ட் கார்டு' வழங்க ஏற்பாடு நடக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளில் கார்டு தாரர் அலைபேசி, ஆதார் எண்கள் பதிவு செய்யப்படுகிறது. இப்பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
தற்போது ரேஷன் கடைகளிலும் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொருள் வாங்கியவுடன் கார்டுதாரர் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., செல்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு, விற்பனை விபரம் உடனுக்குடன் 'ஆன்லைனில்' உணவு வழங்கல் துறைக்கு செல்கிறது. இந்த நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் முறைகேடு மற்றும் போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டு வருகிறது.புதிய வசதி: ரேஷன் கார்டு இல்லாமலே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் புதிய வசதியினை உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கார்டு தாரர் அல்லது குடும்ப உறுப்பினர்கள், ரேஷன் கார்டு இன்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று ஏற்கனவே பதிவு செய்துள்ள அலைபேசி எண் தெரிவித்தால் போதும். அலைபேசி எண் விபரம் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பதிவு செய்தவுடன் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வேர்ட்) மூலம் குறிப்பிட்ட அலைபேசிக்கு அது குறித்த எஸ்.எம்.எஸ்., வரும். இத்தகவல் மூலம் சம்பந்தப்பட்டவர்தானா என உறுதி செய்து கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதவிர 'ஆதார்' எண்ணை ரேஷன் கார்டில் இணைத்திருந்தால் அந்த எண்'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பதிவு செய்யப்படும். அப்போது கார்டுதாரர்களின் முழுவிபரம் தெரிந்து விடும். இதன் அடிப்படையிலும் தேவையான ரேஷன் பொருட்கள் பெறலாம். மாநிலம் முழுவதும் இவ் வசதி நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்டுதாரர்கள் பழைய அலைபேசி எண்ணிற்கு பதிலாக புதிய அலைபேசி எண் பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது, என, வழங்கல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா?

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், 'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2012ல் அறிமுகமான, 'டெட்' தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் பணிக்கு தகுதி என, அறிவிக்கப்பட்டது. அதாவது, 'டெட்' தேர்வு மதிப்பெண், 60 சதவீதமாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்ட படிப்புகளின் மதிப்பெண்கள், 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்ணாகவும் மாற்றப்பட்டு, தேர்ச்சி நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இதன்படி, பல ஆயிரம் பேர் பணியில் நியமிக்கப்பட்டனர்.இதன்பின், 2013ல் நடத்தப்பட்ட இரண்டாவது தேர்வில், இந்த விதியில் மாற்றம் வந்தது. முன்னேறிய வகுப்பினர் தவிர மற்றவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்ணில், 85 மதிப்பெண் எடுத்தால் போதும் என்றும், இட ஒதுக்கீடு விதிப்படி, ஐந்து மதிப்பெண் தளர்வும் அளிக்கப்பட்டது.அதனால், 'டெட்' தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தும், இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணால், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மதிப்பெண் தளர்வுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை, இரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், 'மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.தமிழக அரசின், வெயிட்டேஜ் முறை தொடர்ந்தால், 10 ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தோருக்கு வேலை வாய்ப்பு சிக்கலாகும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், தாராளமான மதிப்பெண் முறை கிடையாது. தற்போதுள்ளது போல், 'ப்ளூ பிரிண்ட்' முறையோ, புத்தகத்தில் பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என்ற முறையோ கிடையாது. அதனால், 10ம் வகுப்பில், 400 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 1,000 மதிப்பெண்கள் எடுப்பதும் குதிரைக்கொம்பாக இருந்தது. சமீப காலமாக, பொதுத்தேர்வுகளில் தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் போது, 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு மிக குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும் என்பதால், அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. 

பள்ளி கல்வி முன்னேற்றம் குறித்து தமிழகம் - கொரியா ஆலோசனை

சென்னை: தமிழகத்தில், பள்ளி கல்வியை முன்னேற்றுவது குறித்து, கொரியா மற்றும் தமிழக கல்வி அதிகாரிகள் கருத்துக்களை பரிமாறினர்.தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்,
சென்னையில் கருத்து பரிமாற்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், கொரியன் குடியரசு துாதர் கியுங்சோ கிம் பேசுகையில், ''தமிழக மாணவர்கள், உயர் கல்விக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும், கொரியாவுக்கு வரலாம். அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க தயார்,'' என்றார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் பங்கேற்று, தமிழக பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர்.

அரசு அங்காடி, மருந்தகம்: குவிந்து வரும் கூட்டம்

கூட்டுறவு பல்பொருள் அங்காடி, மருந்தகங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதால், பலரும் குவிந்து வருகின்றனர். தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள், காமதேனு, சிந்தாமணி உட்பட, சில பெயர்களில், பல்பொருள் அங்காடி, மருந்தகம், பெட்ரோல் பங்க், அம்மா என்ற பெயரில் மருந்தகங்களை நடத்தி வருகின்றன.
மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என, அறிவித்தது. அதேசமயம், அந்த நோட்டுகளை, கூட்டுறவு அங்காடிகளில் மாற்றி கொள்ளலாம் என, தெரிவித்தது. சென்னை உள்ளிட்ட இடங்களில், தனியார் பல்பொருள் அங்காடி, மருந்தகங்களில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை. இதனால், அந்த நோட்டுகளை மாற்ற பலரும், கூட்டுறவு அங்காடிகளில், பொருட்கள் வாங்க குவிந்து வருகின்றனர்.

பொம்மை' நோட்டு போல் '2 கே' : பாதுகாப்பு அம்சங்களில் 'பக்கா'

புதிதாக வெளியிடப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டு, பார்ப்பதற்கு, 'பொம்மை' நோட்டு போல உள்ளதாக கூறப்பட்டாலும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய, 2,000 ரூபாய் நோட்டு, பழைய, 500, 1,000, 100 ரூபாய் நோட்டுகளை விட அகலத்தில் குறைவாக உள்ளது. அதை, முதல் முறையாக பார்த்த பலர், 'குழந்தைகள் விளையாடும் போலி நோட்டு போல தோற்றம் அளிக்கிறது' என, நகைச்சுவையாக கூறினர்.
ஆனால், இந்த மெல்லிய காகிதம், கள்ள நோட்டு தயாரிப்பாளர்களுக்கு, சிம்மசொப்பனமாக விளங்கும் என, உளவுத்துறையினர் வியக்கின்றனர். புதிய நோட்டில், பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன், 'மஜந்தா' நிறமே விசேஷம். பேச்சு வழக்கில், ஆங்கிலத்தில், 1,000 ரூபாயை, 'கே' என, குறிப்பிடுவதைப் போல, 2,000 ரூபாயை, விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால், முன்புற, இடது ஓரத்தில், '2 கே' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. மேலும், இரவிலும், ஒளிரும் வகையில், 2,000 என்ற எழுத்து, 'புளோரசென்ட்' நிறத்தில் அச்சாகியுள்ளது. 'துாய்மை இந்தியா' திட்ட சின்னமான, காந்தியின் மூக்கு கண்ணாடி, பின்புறத்தில் இடம் பிடித்துள்ளது. காந்தி படம், நோட்டின் மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. நோட்டின் வரிசை எண்களின் அளவு, ஏறு வரிசையில் அதிகரித்துக் கொண்டே போகிறது. தாளின், இரு ஓரங்களிலும், ஏழு சிறிய கோடுகள் இடம் பெற்றுள்ளன.பின்பகுதியில், 'மங்கள்யான்' சின்னம் இடம் பெற்றுள்ளது. தேவனகிரி எழுத்தில், 2,000 என்றும், 'ஸ்வச் பாரத், மங்கள்யான்' போன்ற வார்த்தைகள், ஹிந்தியிலும் அச்சாகியுள்ளன. மற்றபடி, 'நானோ சிப்' பொருத்தப்பட்டுள்ளது என்பதெல்லாம் கட்டுக்கதை.

DEEO EXAM RESULT PUBLISHED......DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2012) 06.08.2015 & 07.08.2015 10.11.2016 (CV-I)

Breaking News: விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி  உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால் தமிழக அரசுஊழியர்களுக்கு 7% அகவிலைப்படிஉயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking News: விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி  உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால் தமிழக அரசுஊழியர்களுக்கு 7% அகவிலைப்படிஉயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PG TRB:காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு எப்போது? - முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது. தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள எதுவும் இல்லை’ என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியை எதிர்நோக்கியிருக்கும் பட்டதாரிகள் ‘தி இந்து உங்கள் குரல்’ தொலை பேசி எண் வாயிலாக தெரிவித் துள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி போட்டித் தேர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.   இந்நிலையில், கடந்த கல்வி யாண்டில் (2015-16) 1,062 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய நடைமுறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். எனவே, இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால், தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு முதுநிலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

அரசு அனுமதி அளித்துள்ள நிலையிலும் ஏன் தேர்வு நடத்தப்படவில்லை என்ற குழப்பம் நீடிக்கிறது. பள்ளிக்கல்வித் துறை இதற்கு தீர்வுகாண முன்வர வேண்டும்” என்றார்.

10/11/16

OLD 500,1000 EXCHANGE SLIP ANNEX 5 FORM

TNTET Supreme Court Judgement copy (09.11.2016)

சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்வங்கிகள் இயங்கும் & திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 500 மற்றும்
ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக ரிசர்வ்வங்கி இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது

புதுடெல்லி,நாடு முழுவதும் உள்ளசுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவுவரையில் கட்டணம் கிடையாது என்றுஅறிவிக்கப்பட்டு
உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில்சுங்கக் கட்டணம் வசூலை 11 தேதிநள்ளிரவு வரையில் வசூலிப்பதை ரத்துசெய்ய முடிவுசெய்யப்பட்டு உள்ளது என்று மத்தியகப்பல் மற்றும் சாலை போக்குவரத்துதுறை மந்திரி நிதின் கட்காரிஅறிவித்து உள்ளார். வாகன போக்குவரத்து தடையின்றிநடக்க ஏதுவாக தற்காலிகமாக சுங்கக்கட்டணம்ரத்து செய்ய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார் நிதின் கட்காரி.இன்று முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்றுபிரதமர் மோடி அறிவித்தார். புதியதாகபுதுவடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், 72 மணிநேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவுவரையில் சில இடங்களில் இந்நோட்டுகளைபயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டது.* மருத்துவமனைகள்*

மருந்துகடைகள் * பெட்ரோல் விற்பனை நிலையங்கள் * ரெயில்நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள் * பஸ் நிலையங்கள் * விமானநிலையங்கள் * உடல் எரியூட்டும் இடம்* கூட்டுறவு சங்கங்கள்* மாநில அரசு நடத்தும்பால் நிலையங்கள் ஆகிய இடங்களில் ரூ. 500, 1000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ரூபாய்நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்றுஅறிவித்ததை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம்வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. மேலும் வாக்குவதாங்களும் நேரிட்டது. இந்நிலையில் மத்திய அரசு இந்தஅறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

TNPSC -Group -1-Notification

FLASH NEWS:-வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்

வருமானத்துக்குஅதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்..வருமானத்துக்குபொருந்தாத தொகையை
டெபாசிட் செய்தால்அபராதம்..
வருவாய்துறை செயலாளர்..

TET-NEWS-ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும்