தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது. தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள எதுவும் இல்லை’ என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியை எதிர்நோக்கியிருக்கும் பட்டதாரிகள் ‘தி இந்து உங்கள் குரல்’ தொலை பேசி எண் வாயிலாக தெரிவித் துள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி போட்டித் தேர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், கடந்த கல்வி யாண்டில் (2015-16) 1,062 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய நடைமுறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். எனவே, இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால், தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு முதுநிலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அரசு அனுமதி அளித்துள்ள நிலையிலும் ஏன் தேர்வு நடத்தப்படவில்லை என்ற குழப்பம் நீடிக்கிறது. பள்ளிக்கல்வித் துறை இதற்கு தீர்வுகாண முன்வர வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக