மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்த, ஆசிரியர் தகுதி தேர்வு சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
அதனால், 30 ஆயிரம் பேர் மீண்டும், ’டெட்’ எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில், 2012 முதல், ’டெட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
தேர்வில், 150க்கு, 90 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டது. முதல் தேர்வு, 2012 ஜூலையில் நடந்தது; ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதி, 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
மறு தேர்வு:
பின், ஒன்றரை மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், மூன்று மணி நேரமாக மாற்றி, மறு தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்தது. பின், 2013 ஆக., அடுத்த, ’டெட்’ தேர்வு நடத்தி, தேர்ச்சி பட்டியல் வெளியான போது, முன்னேறிய வகுப்பினர் தவிர, மற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.
அதனால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரம் பேர் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்டோர், மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரு நீதிமன்றங்களிலும், இரு வித தீர்ப்பு வந்ததால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.
இந்த வழக்கு, மூன்றாண்டுகளாக இழுத்தடித்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில், ’இட ஒதுக்கீட்டின்படி, தமிழக அரசு மேற்கொண்ட நியமனம் சரி’ என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், பி.எட்., முடித்த, 7,500 பேரும், ’டி.டெட்’ முடித்த, 22 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மீண்டும், தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக மதிப்பெண்:
இது குறித்து, தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமை கழக தலைவர், ஆர்.செல்லதுரை கூறுகையில், ”இந்த தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு வழி இருக்கிறதா என தெரியவில்லை. மீண்டும் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர், ஆரோக்கியதாஸ் கூறுகையில், ”வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக வைத்துள்ளவர்கள், தகுதி தேர்வில், அதிக மதிப்பெண் பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி, பணி நியமனங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.
’விரைவில் டெட் தேர்வு’:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள, ’டெட்’ தேர்வு, ஒரு மாதத்தில் நடத்தப்படும். ’வெயிட்டேஜ்’ மற்றும் தளர்வு மதிப்பெண் தொடர்பான அரசு உத்தரவுகள், செயல்முறை தொடரும்; விரைவில் ஆசிரியர்கள் பணி நியமனங்களும் நடக்கும். பாண்டியராஜன், பள்ளிக்கல்வி அமைச்சர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக