யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/11/16

ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா?

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், 'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2012ல் அறிமுகமான, 'டெட்' தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் பணிக்கு தகுதி என, அறிவிக்கப்பட்டது. அதாவது, 'டெட்' தேர்வு மதிப்பெண், 60 சதவீதமாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்ட படிப்புகளின் மதிப்பெண்கள், 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்ணாகவும் மாற்றப்பட்டு, தேர்ச்சி நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இதன்படி, பல ஆயிரம் பேர் பணியில் நியமிக்கப்பட்டனர்.இதன்பின், 2013ல் நடத்தப்பட்ட இரண்டாவது தேர்வில், இந்த விதியில் மாற்றம் வந்தது. முன்னேறிய வகுப்பினர் தவிர மற்றவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்ணில், 85 மதிப்பெண் எடுத்தால் போதும் என்றும், இட ஒதுக்கீடு விதிப்படி, ஐந்து மதிப்பெண் தளர்வும் அளிக்கப்பட்டது.அதனால், 'டெட்' தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தும், இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணால், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மதிப்பெண் தளர்வுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை, இரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், 'மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.தமிழக அரசின், வெயிட்டேஜ் முறை தொடர்ந்தால், 10 ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தோருக்கு வேலை வாய்ப்பு சிக்கலாகும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், தாராளமான மதிப்பெண் முறை கிடையாது. தற்போதுள்ளது போல், 'ப்ளூ பிரிண்ட்' முறையோ, புத்தகத்தில் பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என்ற முறையோ கிடையாது. அதனால், 10ம் வகுப்பில், 400 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 1,000 மதிப்பெண்கள் எடுப்பதும் குதிரைக்கொம்பாக இருந்தது. சமீப காலமாக, பொதுத்தேர்வுகளில் தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் போது, 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு மிக குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும் என்பதால், அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக