யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/11/16

இனி கார்டு வேண்டாம்... அலைபேசி போதும் : ரேஷன் பொருட்கள் வாங்க புதிய வசதி அறிமுகம்

தேனி: ரேஷன் கடைக்கு கார்டு இல்லாமலேயே, அலைபேசியுடன் சென்று பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக அடுத்தாண்டு 'ஸ்மார்ட் கார்டு' வழங்க ஏற்பாடு நடக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளில் கார்டு தாரர் அலைபேசி, ஆதார் எண்கள் பதிவு செய்யப்படுகிறது. இப்பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
தற்போது ரேஷன் கடைகளிலும் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொருள் வாங்கியவுடன் கார்டுதாரர் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., செல்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு, விற்பனை விபரம் உடனுக்குடன் 'ஆன்லைனில்' உணவு வழங்கல் துறைக்கு செல்கிறது. இந்த நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் முறைகேடு மற்றும் போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டு வருகிறது.புதிய வசதி: ரேஷன் கார்டு இல்லாமலே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் புதிய வசதியினை உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கார்டு தாரர் அல்லது குடும்ப உறுப்பினர்கள், ரேஷன் கார்டு இன்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று ஏற்கனவே பதிவு செய்துள்ள அலைபேசி எண் தெரிவித்தால் போதும். அலைபேசி எண் விபரம் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பதிவு செய்தவுடன் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வேர்ட்) மூலம் குறிப்பிட்ட அலைபேசிக்கு அது குறித்த எஸ்.எம்.எஸ்., வரும். இத்தகவல் மூலம் சம்பந்தப்பட்டவர்தானா என உறுதி செய்து கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதவிர 'ஆதார்' எண்ணை ரேஷன் கார்டில் இணைத்திருந்தால் அந்த எண்'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பதிவு செய்யப்படும். அப்போது கார்டுதாரர்களின் முழுவிபரம் தெரிந்து விடும். இதன் அடிப்படையிலும் தேவையான ரேஷன் பொருட்கள் பெறலாம். மாநிலம் முழுவதும் இவ் வசதி நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்டுதாரர்கள் பழைய அலைபேசி எண்ணிற்கு பதிலாக புதிய அலைபேசி எண் பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது, என, வழங்கல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக