யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

வங்கிகளில் 'டிபாசிட்' : வருமான வரி 'நோட்டீஸ்'

தமிழகத்தில், வங்கிக் கணக்குகளில், அதிக பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்ப
துவங்கியுள்ளது,'' என, வருமான வரித் துறை முதன்மைதலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

தமிழகத்தில், வங்கிக் கணக்குகளை நேரடியாக கண்காணிக்க, எங்களுக்கு வசதி இல்லை என்றபோதிலும், அதன் விபரங்களை பெறுவதற்கான, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்அடிப்படையில், வங்கிகளில், திடீரென அதிகமாக பணம் டிபாசிட்செய்யப்பட்டுள்ள, சேமிப்புக் கணக்கு எண்களை பெறதுவங்கி உள்ளோம். அவற்றை ஆய்வு செய்து, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கி இருக்கிறோம்.

எத்தனை பேருக்கு, நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது என, இப்போதைக்கு கூறமுடியாது. ஆனால், நடவடிக்கை துவங்கப்பட்டிருப்பதுஉறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

நாடா' புயல் வருவதனை முன்னிட்டுபுயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டியநடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை 15 அம்ச
அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


15 அறிவுறுத்தல்கள்

1. ரேடியோமற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளைஅறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2. ரேடியோமற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.


3. புயல்காற்றுகதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தவாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடிவைக்கவும்.

4. கடற்கரைமற்றும் நீர் சூழ வாய்ப்புள்ளபகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாகவெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரேபாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

5. தங்கள்குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால்பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால்உடன் வெளியேறவும்.

6. நீர்நிலைகள்மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள்கன மழை காரணமாக நீர்சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.

7. சமைக்காமல்உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.


  8. நீர் சூழ்வதால் வெளியேறவேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களைதவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களைவீட்டில் உயரமான பகுதியில் வைத்துபாதுகாக்கவும்.

9. குழந்தைகள்மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும்முதியோருக்கு தேவையான உணவுப் பொருளைஇருப்பு வைக்கவும்.

10. மழைநீரில்செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினைவைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்கவாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

11. மின்வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புஉள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.

12. அமைதியாகசூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாகஎதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும்பயன்படலாம்.

13. அதிகாரபூர்வமாகஅறிவிக்கும் வரை புயல் பாதுகாப்புமையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.

14. மின்கம்பங்களிலிருந்துதளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாகதவிர்க்கவும்.

15. பேரிடரால்பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல்வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில்மட்டுமே செல்லவும்.

இவ்வாறுவருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புரளியை நம்ப வேண்டாம்: ஆர்பிஐ

 500 ரூபாய்நோட்டுகள் கடந்த ஒரு சிலநாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால்டிசம்பர் மாதத் துவக்கத்தில்
கடுமையானபணத் தட்டுப்பாடு ஏற்படும் என்று புரளி பரவுகிறது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் போதுமானஅளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும்சொல்லப்போனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்பணி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனவே, புரளிகளை நம்பவேண்டாம் என்று ரிசர்வ் பேங்க்ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவிப்பினால், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம்முற்றிலுமாக நின்றது. இதனால், மக்களின் பணப்பரிமாற்றம், பொருட்களை வாங்குதல் போன்றவை பெரிய அளவில்பாதிக்கப்பட்டது. 2000 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பது பெரும்சிரமமாக இருந்தது.

ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகுசுமார் 20 நாட்களுக்குப் பின், ஒரு சிலஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், அவையும் போதிய அளவில்இல்லை.

அதே சமயம் சில 500 ரூபாய்நோட்டுகள் சரியாக பிரிண்ட் ஆகாததாலும்மக்களுக்கு பீதி ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், ஆர்பியை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்தியாவில் சுமார் 1,660 கோடி மதிப்பிலான 500 ரூபாய்நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் தற்போது ரூ.8.3 லட்சம்கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்இருப்பதாகவும் கூறியுள்ளது.

தற்போது2000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுகளே வங்கிகளுக்குஅதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் வங்கிஅதிகாரிகளும் கூறியுள்ளனர்.

சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : நிறுத்த புதிய வசதி அறிமுகம்

வருமானவரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய
வருமான வரி முதன்மைதலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையைதுவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: ஊழியர்களிடம், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலேயே, டி.டி.எஸ்., என்றமுறையில், வருமானத்திற்கு தக்கபடி, மாத சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்யப்படுகிறது.

படிவம்- 13 : அது தேவையில்லை என, ஊழியர்கள் விரும்பினால், வருமான வரித் துறைக்கும், அலுவலகத்திற்கும்தகவல் தெரிவித்து, படிவம் - 13ஐ நிரப்பி தரலாம். அந்த வசதியை, இனி தமிழகத்தில், 'ஆன்லைனில்' பெறலாம். 

  அதற்காக, www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில், சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 'tds (for197)' என்ற பகுதியினுள் நுழைந்து, சம்பளதாரர்கள், தங்களது முந்தைய, இருஆண்டு கணக்குகளைபதிவு செய்தால் போதும். அலுவலகத்தில் வரிப்பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் அல்லதுதேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வசதி அறிமுகம் செய்யப்படும், மூன்றாவது மாநிலம், தமிழகம். இந்தியாவை, 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. அந்த வேகத்திற்கு, வருமான வரித் துறையும்ஈடுகொடுத்து வருகிறது. அதற்கு,இப்புதிய சேவையேஉதாரணம். கணினிமயமாக்கல் காரணமாக, வரி செலுத்தாத நிறுவனங்களைஎளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மூன்றில்ஒரு பங்கு : வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல், முரளிகுமார் பேசுகையில், ''வருமான வரித் துறைக்கு கிடைக்கும்வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, டி.டி.எஸ்., மூலமாகவேகிடைக்கிறது,'' என்றார். மேலும், டி.டி.எஸ்., பிரிவு ஆணையர், சேகர், முதன்மை ஆணையர், ஹர்லால்நாயக் ஆகியோரும் பேசினர்.

Central Teacher Eligibility Test - CTET Sep 2016 Answer Key Published

CCE -THIRD WEEK MATHS TENTATIVE ANSWER KEY - 1 to 8th Std

CCE-WORKSHEET -SCIENCE KEY ANSWER

ஜியோ சிம் இலவச சேவை வரும் மார்ச் 31 வரை நீடிப்பு..?

ரிலையன்ஸ்ஜியோ-வின் 4 ஜி ஆஃபர்மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படு இருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ்நிறுவனம்ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகைஆஃபரை
டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும்
அளவற்றஅழைப்புகளை ஜியோ 4ஜி சிம்பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில்100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச்2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்ட மிட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபிஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.

இந்நிலையில்தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயின் விதிகளின்படி, ஜியோ உள்பட எந்ததொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள்வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கூடாது.

அதனால்ஜியோ வின் இந்த ஆஃபர்நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால்ஜியோ ‘வெல்கம் ஆஃபர் ’ எனபெயரை மாற்றி இந்த சலுகைகளைமீண்டும் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது

IAS தேர்வு என்றால் என்ன?

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

அன்னை தெரேசாவின் வரிகள்

அறிவியல்

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்

இந்து மதத்தில் காகத்திற்கு உணவிடுவது ஏன்

இரத்தம் பற்றிய அறிய பயனுள்ள தகவல்கள்

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும்

உண்மையா?

உமிழ்நீர்