யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : நிறுத்த புதிய வசதி அறிமுகம்

வருமானவரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய
வருமான வரி முதன்மைதலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையைதுவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: ஊழியர்களிடம், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலேயே, டி.டி.எஸ்., என்றமுறையில், வருமானத்திற்கு தக்கபடி, மாத சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்யப்படுகிறது.

படிவம்- 13 : அது தேவையில்லை என, ஊழியர்கள் விரும்பினால், வருமான வரித் துறைக்கும், அலுவலகத்திற்கும்தகவல் தெரிவித்து, படிவம் - 13ஐ நிரப்பி தரலாம். அந்த வசதியை, இனி தமிழகத்தில், 'ஆன்லைனில்' பெறலாம். 

  அதற்காக, www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில், சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 'tds (for197)' என்ற பகுதியினுள் நுழைந்து, சம்பளதாரர்கள், தங்களது முந்தைய, இருஆண்டு கணக்குகளைபதிவு செய்தால் போதும். அலுவலகத்தில் வரிப்பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் அல்லதுதேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வசதி அறிமுகம் செய்யப்படும், மூன்றாவது மாநிலம், தமிழகம். இந்தியாவை, 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. அந்த வேகத்திற்கு, வருமான வரித் துறையும்ஈடுகொடுத்து வருகிறது. அதற்கு,இப்புதிய சேவையேஉதாரணம். கணினிமயமாக்கல் காரணமாக, வரி செலுத்தாத நிறுவனங்களைஎளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மூன்றில்ஒரு பங்கு : வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல், முரளிகுமார் பேசுகையில், ''வருமான வரித் துறைக்கு கிடைக்கும்வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, டி.டி.எஸ்., மூலமாகவேகிடைக்கிறது,'' என்றார். மேலும், டி.டி.எஸ்., பிரிவு ஆணையர், சேகர், முதன்மை ஆணையர், ஹர்லால்நாயக் ஆகியோரும் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக