யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கை தீவிரம்

வேலூர்மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பாரதஸ்டேட் வங்கி மூலம் மாதஊதியம் பெறுவதால், அவர்களுக்கான தொகையை விடுவிக்கும் நோக்கில்போதுமான ரூபாய் நோட்டுகள் கையிருப்பில்
வைக்கப்பட்டிருப்பதுடன், 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
புழக்கத்தில்இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதியரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. மத்திய அரசின் இந்தஅறிவிப்பைத் தொடர்ந்து வஙகி ஏடிஎம் மையங்களில்இருந்து பணம் எடுக்க அதிகளவில்மக்கள் வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இல்லாமல் தொடர்ந்துமூடப்பட்டு கிடக்கிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களில் 90 சதவீத்துக்கு அதிகமானவர்கள் பாரத ஸ்டேட் வங்கிமூலம் ஊதியம் பெறுவதால் சம்பளநாளான புதன், வியாழக்கிழமைகளில் (டிச. 1) சேமிப்புக் கணக்கு புத்தகம் மூலம்பணம் எடுக்க வருவோருக்கு தடையின்றிபணம் கொடுக்கும் வகையில் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகப்பட்டுசமாளிக்கப்படுகிறது.
இதுதவிரஒரு சில தனியார் வங்கிகளுக்குகுறைவான அளவில் 500 ரூபாய் நோட்டுகள் வரப்பெற்றுள்ளன.
இதுகுறித்துமாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன்கூறுகையில், அரசு ஊழியர்களுக்கு மாதஊதியம் வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் வந்துள்ளன.

ஏடிஎம்மையங்களில் நிலவும் பணத்தட்டுப்பாடு ஒருவாரத்தில் சீரடையும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக