அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம்அவர்களது வங்கிக் கணக்கில் புதன்கிழமைசெலுத்தப்பட்டன. இதனை எடுப்பதற்காக வங்கிக்கிளைகளில் காலையில் இருந்தே அரசு
ஊழியர்கள்நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பல வங்கிக் கிளைகளில் 5 ஆயிரம்முதல் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமேவழங்கப்பட்டதால், அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னைதலைமைச் செயலகம், எழிலகம் உள்பட பலமுக்கிய அரசு அலுவலகங்களில் மாதஊதியத்தை வங்கிக் கணக்கில் இருந்துஎடுப்பதற்காக அரசு ஊழியர்கள் காலை9 மணியில் இருந்தே காத்திருந்தனர்.
வழக்கமாகபணிக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்குமுன்பே அரசு அலுவலகங்களுக்குச் சென்றஅவர்கள், நேராக வங்கிக் கிளைகளில்ஏற்கெனவே காத்திருந்த வாடிக்கையாளர்களின் வரிசைகளில் இணைந்து கொண்டனர். இதனால், பல வங்கிக் கிளைகளில் சாலைகள்வரை வாடிக்கையாளர்களின் வரிசை நீண்டிருந்தது.
ரொக்கத்துக்குகட்டுப்பாடு: அரசு ஊழியர்கள் பலருக்கும்ரூ.40 ஆயிரம் வரை மாதஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இதனை எடுப்பதற்குஅவர்களால் புதன்கிழமை முடியவில்லை. ஒவ்வொரு வங்கிக் கிளையிலும்இலக்கு வைத்தே ரொக்கமாக பணம்வழங்கப்பட்டது.
சென்னைதலைமைச் செயலகத்தில் உள்ள சிண்டிகேட், இந்தியன்ஓவர்சீஸ் ஆகிய இரண்டு வங்கிக்கிளைகளிலும் ரூ. 9 ஆயிரம் முதல்ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஆனால், பிற இடங்களில் இதைவிடகுறைவாகவே ரூ.5 ஆயிரம் அளவுக்குமட்டுமே ரொக்கமாக பணம் அளிக்கப்பட்டது.
கூட்டம்ஓயாது: வங்கிக் கிளைகளில் மாதஊதியத்தை எடுப்பதற்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின்வரிசை இன்னும் ஒரு வாரத்துக்குத்தொடரும் என வங்கித் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலக சங்கத்தின்தலைவர் ஜெ.கணேசன் கூறியதாவது:-
அரசு ஊழியர்களின் ரொக்கப் பணத்துக்கு கட்டுப்பாடுகள்வைத்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதத்துக்கு 1,300 கோடி ரூபாய் அளவுக்குஊதியமும், ஓய்வூதியமும் அளிக்கப்படுகிறது. இது மாநில அரசுஊழியர்களுக்கான பணம் மட்டுமே. இந்தப்பணத்தை ஒவ்வொரு ஊழியரும் அவரவர்வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றார்.
போக்குவரத்துதொழிலாளர்கள்: தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துத்தொழிலாளர்களுக்கும் மாத ஊதியத்தில் இருந்துரொக்கமாக ரூ.3 ஆயிரம் புதன்கிழமைவழங்கப்பட்டது. அனைத்து பணிமனைகளிலும் காலையில்இருந்தே இதற்கான பணிகள் நடைபெற்றது. இதனால், பணிக்கு வந்த அனைத்துநடத்துநர், ஓட்டுநர்கள் தங்களுக்கான ரொக்கப் பணத்தை வரிசைகள்ஏதும் இல்லாமல் வாங்கிச் சென்றனர்.
ரொக்கப்பணம் வழங்கும் பணி மாலை வரைநடைபெற்றதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக