யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

மழை விடுமுறை விழித்துக்கொண்ட கல்வித்துறை...!!

புயல் காரணமாக மழை பெய்யப்போகிறதுஎன்ற முன்னெச்சரிக்கையே விவசாயிகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னொருபுறம் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறைஅறிவிக்கப்பட்டது மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வழக்கமாக கனமழை பெய்யும் போதுதான், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறைஅளிக்கப்படும். கடந்த ஆண்டு சென்னைமழையின்போது கூட கனமழை பெய்தபோதும் விடுமுறை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்றுசர்ச்சை கிளம்பியது. யார் விடுமுறை அறிவிப்பதுஎன்பதிலும் குழப்பம் நிலவியது.
மாவட்டஆட்சியரா அல்லது தலைமைச் செயலகத்தில்கல்வித்துறையா என்பதில் சர்ச்சை இருந்தது.
ஆனால், இப்போது நாடா புயல் 2-ம்தேதி காலை கரையைக் கடக்கும்என்று அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில்கல்வித்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்கள் மாவட்டத்தில்சில பகுதிகளுக்கு என முன்கூட்டியே பள்ளிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொருபுறம் "இவனுகளை வீட்டில் வைத்துக்கொண்டுஎப்படி சமாளிப்பது" என்று பெற்றோர் புலம்புவதையும்கேட்கமுடிகிறது.

2015-ம்ஆண்டு மழை, வெள்ளத்தின் போதுநவம்பர் மாத த்தில் தீபாவளிவிடுமுறைக்குப் பின்னர் மழை காரணமாகபள்ளிகள் செயல்படவில்லை. டிசம்பர் மாதத்திலும் பல நாட்கள் விடுமுறைஅறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக