இவ்வமைப்பின்தமிழ்நாட்டுப் பொதுச்செயலர் சி.பி.கிருஷ்ணன்இது பற்றி வெளியிட்ட அறிக்கையிலிருந்து…
ரிசர்வ்வங்கிக்குச் சொந்தமான பாரதிய ரிசர்வ் பாங்க்நோட் முத்ரன்
பிரைவேட் லிமிடெட்என்ற நிறுவனம், கர்நாடக
மாநிலத்தில்மைசூரிலும், மேற்குவங்க மாநிலத்தில் சல்போனியிலும் உள்ள ரூபாய் நோட்டுஅச்சடிக்கும் இரண்டு அச்சகங்களை நிர்வகிக்கிறது. இந்த இரண்டு அச்சகங்களும் தற்போதுநடைமுறையில் உள்ளது போல ஒருநாளைக்கு இரண்டு ஷிப்ட் அடிப்படையில்வருடத்திற்கு ரூபாய்த் தாள்களாக எண்ணிக்கையில் 1600 கோடி அளவிற்கு அச்சடிக்கும்திறமை வாய்ந்தவை. இவையல்லாமல் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும்இரண்டு அச்சகங்கள் நாசிக் (மகாராஷ்டிரா) மற்றும்தேவாஸ் (மத்தியபிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன.
இவை இரண்டும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்டு மின்ட்டிங் கார்ப்பரேஷன்ஆப் இந்தியா லிமிடெட் மூலமாகமுழுமையாக மத்திய
அரசாங்கத்திற்குசொந்தமானவை. நிதியமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி இந்த இரண்டு அச்சகங்களும்மொத்த ரூபாய்த்தாள் தேவையில் 40 சதவீதம்வரை அச்சடிக்கத் தகுதி வாய்ந்தவை. மைசூரிலும், சல்மோனியிலும் உள்ள இரண்டு அச்சகங்கள்60 சதவீதம்வரை அச்சடிக்கும் திறன் படைத்தவை.
ஆக நான்கு அச்சகங்களும் இணைந்துமொத்தமாக தற்போதுள்ள நடைமுறைப்படி இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிந்தால்ரூபாய்த்தாள்களாக எண்ணிக்கையில் வருடத்திற்கு 2,666 கோடி அளவிற்கு அச்சடிக்கும்திறன் படைத்தவை.
புழக்கத்தில்இருந்த ரூபாய் நோட்டுக்கள்
மத்தியஅரசாங்கம் வழங்கும் புள்ளி விவரப்படி 2016 நவம்பர்8ஆம் தேதி புழக்கத்தில் இருந்தரூபாய் தாள்களின் மதிப்பு 17,54,000 கோடி ரூபாய். இதில்45 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள். இதன்மதிப்பு ரூ. 7,89,000 கோடி. இது எண்ணிக்கையில்1,578 கோடி தாள்கள். மேலும், 39 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுக்கள். இதன்மதிப்பு ரூ. 6,84,000 கோடி. இது எண்ணிக்கையில்684 கோடி தாள்கள். 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 342 கோடிதாள்கள் அச்சடித்தாலே போதுமானது. மத்திய அரசாங்கம் புதிய2000 ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் பணியைசெப்டம்பர் மாதமே துவங்கிவிட்டதாக கூறுகிறது. அதன்படி ஏறக்குறைய இரண்டு மாத காலத்தில்அப்பணி நிறைவடைந்திருக்கும்.
எவ்வளவுகாலமாகும்?
500 ரூபாய்நோட்டுக்கள் அச்சடிக்க எவ்வளவு காலமாகும்? நான்குஅச்சகங்களின் திறன் வருடத்திற்கு 2666 கோடிதாள்கள். மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தால்இதன் திறன் 4000 கோடி தாள்களாக உயரும். இதில் 20 சதவீத திறன் 10 ரூபாயிலிருந்து100 ரூபாய் நோட்டுக்கள் வரை அச்சடிக்க பயன்படுத்தப்படும். மீதமுள்ள 80 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்காகபயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால், இதனை அச்சடிப்பதற்கான திறன்வருடத்திற்கு 3200 கோடி தாள்களாகும்.
புழக்கத்திலிருந்துசெல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை1,578 கோடி தாள்கள். சுமார் 20 சதவீதம் வரை கருப்புப்பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் வங்கிகளுக்குவராது என்றும் கூறப்படுகிறது. அதைஅப்படியே ஏற்றுக் கொண்டால் அந்தஅளவிற்கு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதைகுறைத்துக் கொள்ளலாம். இதன்படி செல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய்த் தாள்களான1,578 கோடி தாள்களில் 20 சதவீதத்தை கழித்தால் மீதமுள்ள 80 சதவீதமான 1,262 கோடி தாள்கள் அச்சடிக்கப்படவேண்டும்.
ஆனால், 1000 ரூபாய் நோட்டுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டதால் குறைந்தபட்சம் அதில் 25 சதமாவது புதிய 500 ரூபாய்நோட்டுக்களாக புழக்கத்தில் வந்தால்தான் நிலைமை சகஜமாகும் என்றும்ஒரு கணிப்பு உள்ளது. அவ்வாறெனில்செல்லாததாக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்தமதிப்பில் 25 சதவீதம் கூடுதலாக 500 ரூபாய்த்தாள்கள், அதாவது கூடுதலாக 342 கோடிதாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்படி மொத்தத் தேவையாக1,262 கோடி + 342 கோடி = 1,604 கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய்நோட்டுக்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.
50 நாட்களில்தட்டுப்பாடு தீராது
3,200 கோடிதாள்கள் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கஒரு வருட காலமாகும். அப்படியானால்தற்போதைய தேவையான 1,604 கோடி தாள்களை அச்சடிக்க6 மாத காலமாகும். நவம்பர் மாதம் முதல்வாரத்திலேயே இப்பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும்.
மத்தியஅரசும் ரிசர்வ் வங்கியும் சொல்வதுபோல50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீர்வதற்கானவாய்ப்பில்லை. எனவே, மத்திய அரசுமுதலில் மக்களுக்கு உண்மையைச்
சொல்ல வேண்டும். மேலும் ரூபாய்த் தட்டுப்பாட்டைத்தீர்க்க விரைந்து மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டும்என்று கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.