யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/16

CPS NEWS:PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு.

மத்தியஅரசில் Cpsல் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியவிபரங்கள்
வழங்க மறுக்கும் நிதிமேலாளர்கள். 

PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு.


பதில் வழங்க மறுக்கும் காரணம்அறிவீரோ?


திண்டுக்கல்எங்கெல்ஸ்

பள்ளிக் கல்வி - டிசம்பர் - 7 கொடிநாள் கொண்டாடுவது குறித்த இயக்குனர் செயல்முறைகள்!!!

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்பபதிவு
அத்துடன், 'மாநில அரசு மற்றும் தனியார்மருத்துவ கல்லுாரி களிலும், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்வு தேர்ச்சிகட்டாயம்' என, உச்ச
நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு, தமிழகம் உட்பட பல மாநிலங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தமிழகம், ஆந்திராஉள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள, அரசுகல்லுாரிகளில், மாநில அரசின் ஒதுக்கீட்டுஇடங்களில், கடந்த ஆண்டு சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில், தனியார் கல்லுாரி இடங்களை, 'நீட்' தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நிரப்ப உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு, அரசு மற்றும்தனியார் கல்லுாரி களுக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம்என்ற நிலையே உள்ளது.

கடைசி நேரத்தில், மாநில அரசு ஒதுக்கீட்டுஇடங்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்குஅளிக்கப்படலாம். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கும் என, தெரிகிறது. ஜன., முதல் வாரம்வரை, விண்ணப்பத்தை பதிவு செய்ய, அவகாசம்வழங்கப்படலாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஒரு வாரத்திற்குள் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணியில் சேரும்போது சொத்து விபரம் வழங்க உத்தரவு

அரசு பணிகளில் சேருவோர், தங்கள் முழு சொத்துவிபரங்களை அளிக்க வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.கேரள மாநிலத்தில்,
மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயிவிஜயன் முதல்வராக உள்ளார்.

வருமானத்துக்குஅதிகமாக சொத்துக்களை சேர்க்கும் அரசு ஊழியர்களை கண்டறியும்வகையில், அரசு பணியில் புதிதாகசேருவோர், தங்கள் சொத்து விபரங்களைவழங்க வேண்டும் என, மாநில அரசுஉத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துவெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு துறைகளிலும்உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுவோர் அனைவரும், அவர்களது சொத்து விபரங்களை அறிவிக்கவேண்டும். அவர்களது பணிப் பதிவேட்டின் ஒருபகுதியில் அசையும், அசையா சொத்துக்களின் விபரங்களைஎழுத வேண்டும். இவ்வாறு செய்வதால், பணியில்சேர்ந்த பின், ஒருவர் வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்ப்பதை எளிதில்கண்டுபிடித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 'அட்மிஷன்' அபாரம்! எப்படி நடந்தது இந்த 'மாஜிக்?'

கோவை மாவட்ட அரசு துவக்கப்பள்ளிகளில்உள்ள ஆங்கில வழிப்பிரிவில், மாணவர்சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில
ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சிஅடைய துவங்கியதால், சுதாரித்துக் கொண்டது அரசு. ஆங்கிலவழிக்கல்வித் திட்டத்தை துவங்கி, அரசுப்பள்ளிகள் மீண்டும் எழுந்து நிற்பதற்கான நடவடிக்கைகளைஎடுத்தது.
இதன் விளைவால், இன்று கோவை மாவட்டஅரசு துவக்கப்பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிப்பிரிவில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த, 2012 - 2013ல், ஆங்கில வழிப்பிரிவுதுவங்கப்பட்டபோது, ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரை வெறும், 107 ஆகஇருந்த மாணவர் எண்ணிக்கை, 2016 -2017 ல், 29 ஆயிரத்து837 ஆக உயர்ந்துள்ளது. 2013 -2014 ல், 248 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியை துவங்கியபோது, முதல் வகுப்பில், 4,455 மாணவர்கள், இரண்டாம் வகுப்பில் 101 மாணவர்கள், ஆறாம் வகுப்பில், 298 பேர்என மொத்தம், 4,864 பேர் சேர்ந்தனர். அதற்கடுத்தஇரண்டு ஆண்டுகளில், 21 ஆயிரத்து 132 ஆக உயர்ந்த எண்ணிக்கை, 2016 -2017 ம் ஆண்டில் ஒன்று முதல்எட்டாம் வகுப்பு வரை, 29 ஆயிரத்து837 மாணவர்களாக உயர்ந்துள்ளது.

'டி.சி.,' கட்டாயமில்லை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் கூறுகையில், ''மாவட்டத்தில், 611 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விப்பிரிவுதுவங்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் இருந்து, கல்வியாண்டின் நடுவே மாணவர்கள் வந்தாலும், மறுக்காமல் சேர்த்துக் கொள்கிறோம்;'டி.சி.,' கட்டாயமில்லை,'' என்றார். ஆசிரியர்கள் கூறுகையில், 'இன்று அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும், 'டெட்' உட்பட, அனைத்து தகுதித்தேர்விலும்தேர்ச்சி பெற்ற, ஆசிரியர்கள் பணியில்உள்ளனர்.எங்கள் அர்ப்பணிப்பு மிக்கபயிற்சியுடன், எஸ்.எஸ்.ஏ., அளித்துள்ள செயல்வழி கல்வி அட்டைகள், பயிற்சிகள், கல்வி உபகரணங்களும் சேர்க்கை உயர காரணம். அரசுப்பள்ளிகளில்வழங்கப்படும்விலையில்லா பொருட்களும், தனியார்பள்ளிகளின், கல்விக் கட்டணமும் ஒருகாரணம் என்பதை மறுப்பதற்கில்லை'என்றனர்.

CPS:18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி

அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம்கோடி ரூபாய் எந்த கணக்கில்உள்ளது, என தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க பொதுச்செயலர்கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் மெய்யப்பன்ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது: தலைமை செயலகம், சட்டசபைஉள்பட 143 அரசு துறைகள் தமிழகத்தில்உள்ளன. இவற்றில் 6,49,201 நிரந்தரம், 4,12, 214 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சட்டசபை தேர்தலில் அளித்தவாக்குறுதிபடி புதிய பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளை தனியார்மயமாக்கும் போக்கை மத்திய, மாநிலஅரசுகள் கைவிட வேண்டும்.
கடந்த2003 ஏப்., 1 முதல் ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம்கோடி ரூபாய் எந்த கணக்கில்உள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும். எட்டாவது ஊதியக்குழு அமைத்து மத்திய அரசுஊழியர்களுக்கு இணையான சம்பளம், இதரசலுகைகள் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்குமேலாக அரசு துறைகளில் காலியாகஉள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்பவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர்கள், வருவாய்கிராம உதவியாளர்கள், ஊரக நுாலகர்களுக்கு வறையறுக்கப்பட்டஊதியம் வழங்க வேண்டும். கம்ப்யூட்டர்ஆப்பரேட்டர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்படஇதர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

இவ்வாறுகூறினர்.

கிராம புற மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும்  கணினி ஆசிரியர்களை  நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் கல்வி துறையில் மாபெரும் மாற்றம் உருவாகும் மேலும் கல்வித்துறையில் மாணவர்கள் கணினியில் 
கற்க உதவும். கணினி ஆசிரியர்களை  நியமிப்பதால் பல குடும்பங்ககளின் வாழ்வாதாரங்கள் காக்கப்படும்.அலுவலக சார்ந்த படிவங்கள் மற்றும் கடிதங்கள் விரைவாக முடியும்.

மாணவர்களின் கணினி சார்ந்த அறிவு வளம் பெருகும்.அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு  உயரும்.......பள்ளிகளின் தரமும்  உயரும்.

கிராம புற மாணவர்களின் நலன் கருதி 

இது குறித்து தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி-திரு-சேவியர் ஜோஸப் கென்னடி -தமிழக ஆசிரியர் மன்றம்-மாநில துணை பொதுச் செயலாளர் -திண்டுக்கல் 

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!!

மரணத்திற்குப் பின்  வாழ்க்கைஉண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறதுஎன்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி
வேறொன்றுமில்லை.

மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக்கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும்போது மூளை உயிருடன் இருக்கும்வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால்அனைத்தும் முடிந்து போய் விடும். அதன்பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான்இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும்கிடையாது.என்கிறார்.

இருந்தாலும்ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான்ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த2011 ஆம் வருடம். இங்கிலாந்து நாட்டில்உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில்இதய நோய் காரணமாக ஒருநோயாளியை ஐ.சி.யூவில்வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.

அப்போதுதிடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால்அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர்சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.
அதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான்வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில்நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலைமருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானேபார்த்ததாகவும் கூறியுள்ளார்.

அவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாகமருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா? அதான் ஆச்சரியம்!

இன்னொருசம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில்ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரைஉயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரேகூறுகிறார்,என் உடலைவிட்டு நான் அப்படியே மேலேபோனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒருசெருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது எனஅவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள்பார்த்த போது உண்மையிலேயே அங்குஅந்த பொருட்கள் இருந்துள்ளது.
இது போல பல உண்மைசம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம்கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர்இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள்அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பதுதெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்தஒரு சம்பவம் மறுபடி நடத்தல்போன்ற பல விஷயங்கள்  தாங்கள் உணர்ந்ததாக அவர்கள்கூறியுள்ளார்கள்.

இப்படியானபல தனி மனித உதாரணங்கள், பல மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இறந்தவர்கள்அதன் பின்னர் என்ன ஆவார்கள்என்பதை முற்றிலுமாக யாராலும் கணிக்கமுடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

தமிழக கல்வித்துறை வணிகமயமாக மாறி வருகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு !!

தமிழக கல்வித்துறை என்பதுவணிகமயமாக மாறி வருவதாக தமிழககாங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டஅறிக்கையில், ''6 முதல் 14
வயது நிரம்பிய அனைவருக்கும்நாடு முழுவதும் கட்டாயக் கல்வி உரிமை வழங்கும்சட்டத்தை கடந்த மத்திய  காங்கிரஸ் கூட்டணி அரசு 2006-ல்நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளும்ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழைமாணவர்களை சேர்க்க வேண்டுமென ஆணைபிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில்25 சதவீத ஒதுக்கீட்டின்படி, தமிழகத்தில் மொத்தம் ஒதுக்கப்பட வேண்டியஇடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால், 16 ஆயிரத்து194 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 25 சதவீத ஒதுக்கீடுவழங்க வேண்டிய தனியார் பள்ளிகள்8.8 சதவீதம்தான் ஒதுக்கியிருந்தன.
எல்லாவற்றையும்மிஞ்சுகிற கொடுமை என்னவெனில், தமிழகத்தில்உள்ள 10,758 தனியார் பள்ளிகளில் 25 சதவீதஒதுக்கீட்டின் படி சேர்க்க வேண்டியமாணவர்களில் ஒரே ஒரு மாணவர்தான்சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 2015-16-ம் கல்வியாண்டில் மாணவர்கள்சேர்க்கை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக கல்வியமைச்சர் கூறியிருக்கிறார். எனவே, கல்வி உரிமைச் சட்டப்படிஎவ்வளவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்என்ற விவரத்தை கல்வியமைச்சர் வெளியிட வேண்டும்.
மேலும், தமிழகத்தில் படிக்கிற மாணவர்களின் தரம் குறித்து செய்யப்பட்டஆய்வறிக்கை மிகுந்த அதிர்ச்சியை தரும்வகையில் உள்ளது. இந்த அறிக்கையின்படிகிராமப்புற பள்ளிகளில் முதல் வகுப்பு முதல்எட்டாம் வகுப்புவரை படிக்கிற மாணவர்களில் 21 சதவீதத்தினர்தான் முதல் வகுப்பு பாடங்களையேபடிக்க திறனுள்ளவர்களாகவும், இரண்டாம் வகுப்பு பாடத்தை 30 சதவீதமாணவர்கள்தான் படிக்க முடிகிறது என்கிறஆய்வறிக்கையின் கூற்றை கண்டு அதிர்ச்சியடையாதவர்கள்இருக்க முடியாது.
ஆனால், மத்திய பாடத்திட்டம், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களின் கல்வித்திறன், அரசு பள்ளிகளில் படிக்கிறமாணவர்களைவிட மிகுந்ததாக இருப்பதால், தமிழக மாணவர்களிடையே கல்வியறிவில்மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவாகி வருகிறது. இந்நிலையின்காரணமாக தமிழக கல்வித்துறை என்பதுவணிகமயமாக மாறி வருகிறது.

அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததால்தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதைஉடனடியாக தடுத்து நிறுத்த தமிழகஅரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் தரம்உயர்த்தப்பட்டு, கற்பிக்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

3/12/16

G.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்

கார்டுக்கு பதிலாக ஆதார் பரிவர்த்தனை.மத்திய அரசு தீவிரம்.

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றாக ஆதார் எண்அடிப்படையில் பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம்காட்டி  வருகிறது.  டிஜிட்டல்பரிவர்த்தனையாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, இணைய
வங்கிசேவைகள், மொபைல் வாலட்கள் எனபின் நம்பர்  மற்றும்பாஸ்வேர்டு
அடிப்படையிலான
பரிவர்த்தனைகளுக்குமாற்றாக ஆதார் அடிப்படையில் கொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளது.

  கடைக்காரரிடம் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, ரேகை வைத்தால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும்.  இதற்கானபொதுவான மொபைல் ஆப்  ஏற்படுத்தப்பட உள்ளது.

 இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாளஆணையத்தின் தலைமை செயல் அதிகாரிஅஜய் பூஷன் பாண்டே நேற்றுகூறுகையில், ‘‘ஆதார்  அடிப்படையிலானபரிவர்த்தனைகள் நேற்று மட்டும் 1.31 கோடிமேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை எண்ணிக்கையைபடிப்படியாக  அதிகரித்துநாள் ஒன்றுக்கு 40 கோடியாக்க தி்ட்டமிட்டுள்ளோம். தற்போது 10 கோடி பரிவர்த்தனைகளை இந்தஅடிப்படையில் மேற்கொள்ள  முடியும்’’ என்றார்.

 நிதி ஆயோக் தலைமைசெயல் அலுவலர் அமிதாப் காந்த்கூறுகையில், ‘‘பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கஉதவும் வகையில்,  கைரேகைஅல்லது கண் கருவிழியை அடையாளம்காணும் மொபைல் போன்களை உருவாக்ககேட்டுக்கொண்டுள்ளோம்’’ என்றார்.

* 108,39,95,782 பேருக்குஆதார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 சதவீதம் பேர் 18 வயதுக்குமேற்பட்டோர்.
* சுமார்36 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் ஆதார்எண் இணைக்கப்பட்டுள்ளது.

* ஆதார்பரிவர்த்தனைக்கு புதிதாக மொபைல் ஆப்ஏற்படுத்தப்பட உள்ளது.

DSE PROCEEDINGS- TRB Appointment 2011-12,2012-13 & 2014-15 -Social Science BT Regularization order

தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குனர் உத்தரவு

TNPSC - VAO counselling shedule 19-12-16 to 23-12-16

தொடக்கக் கல்வி - சிறுபான்மையினர் நலம் - கிராமபுறங்களில் வசிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களின் விவரங்களை 06.12.2016க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

ஜனவரி 1 முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம்

ஜனவரி 1ம் தேதிமுதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டைஅவசியமாகிறது.  2017 ஜூன்30ம் தேதிக்குள் ஆதார் வழி
பரிவர்த்தனைக்குஏற்பாடு செய்ய கால அவகாசம்தரப்பட்டுள்ளதாக  ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழிபண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமேபணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும்  பரிவர்த்தனைக்குஎலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசியஎண், பயோ மெட்ரிக் அடையாளம்ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதிசெய்யும் கருவிகளை வைத்து  இருக்கவும்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆதார் வழி பணப் பரிவர்த்தனையைஎப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர்அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.

கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்

பள்ளி மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணிததிறன் தேர்வு, வரும், 18க்குமாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையசெயல் இயக்குனர், அய்யம் பெருமாள்
வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,

'பெரியார்அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நாளைகாலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணிததிறன் தேர்வு, மோசமான வானிலைகாரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசி என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
அறிவித்துள்ளது.
குரூப்1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டுபிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது.
தேர்வுக்குவிண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசியாகும். வங்கி-அஞ்சலகத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 கடைசியாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குவிண்ணப்பிக்க கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே விண்ணப்பிக்கவேண்டும்.
கவனமாகபதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம்சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களைவிண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது.
எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ளவிவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்துசமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களைமாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

உண்மையைமறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்திதேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும்விண்ணப்பதாரர்களின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

பள்ளிகளில் சத்துணவு மையங்கள் தூய்மையாக செயல்படுவது குறித்து -வழிகாட்டும் நெறிமுறைகள்

எட்டாம் வகுப்பு-தனிதேர்வர்களுக்கான தக்கல் திட்டம்.விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு 7.12.2016 -கடைசி