யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/16

TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?

திடீர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், துணை கலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் - 1' பதவிகளில், 85 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல் தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.

ஆனால், கடந்த வாரம், வங்க கடலில் உருவான, 'நடா' புயலால் அறிவித்த விடுமுறை; செல்லா நோட்டு அறிவிப்பால் பணத் தட்டுப்பாடு மற்றும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவால் விடுமுறை போன்ற காரணங்களால், விண்ணப்பிக்க, தேர்வர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. இன்று ஒரு நாளில், விண்ணப்பம் பதிவு செய்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஒரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!

பல்வேறு வழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித் தேர்வு, விரைவில் வரவிருக்கிறது. இது ஆசிரியப் பட்டம் படித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதல் இரண்டு தேர்வுகளும் கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து இருந்தபோதும் 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் பலர் தேர்ச்சி பெற்றனர்.

ஜெ., சொத்துக்கள் யாருக்கு சேரும்

ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அவரது சொத்துக்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, வேட்புதாக்கல் செய்த ஜெயலலிதா, தன் சொத்து விபரங்களை குறிப்பிட்டு இருந்தார். அவரது மொத்த சொத்துமதிப்பு 113.73 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், 41.63 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரநகைகள், 14.7 கோடி ரூபாய் அசையா சொத்து, கொடநாடு எஸ்டேட், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா பப்ளிகேசன்ஸ் உள்ளிட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் 10.63 கோடி ரூபாய் வங்கி டிபாசிட் அடக்கம்.

அவரின் அரசியல் வாரிசு, அநேகமாக முடிவு செய்யப்பட்டு விட்டநிலையில், சொத்துக்களுக்கான வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார், அவர் மகள் தீபா, மகன் தீபக் உள்ளிட்ட உறவினர்கள் உள்ளனர். நேற்றைய இறுதிசடங்குகளை தீபக் தான் செய்தார். 

வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்:

வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது. இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. - நமது நிருபர்

HALF YEARLY EXAM POSTPONED | DATE ANNOUNCEMENT SOON:

முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.
முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்,
6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

8th Private Exam Tatkal Application | Last Date:08.12.2016 05:00pm

CEO கடலூர்-அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும். 07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று நடைபெறவிருந்த தேர்வுகள், நடைபெற வேண்டிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்:

07/12/16 மற்றும் 08/12/16 ஆகிய நாட்களில் நடைபெற வேண்டிய 12 ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர்அறிவிக்கப்படும் - CEO VILLUPUAM :

TNPSC GROUP I EXAM FREE COACHING | SIVAGANGAI DT:

சிவகங்கை: டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1 தேர்வு 2017 பிப்ரவரியில் நடக்கிறது.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடக்கிறது. பயிற்சி வகுப்பு சனி, ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடக்கும். அனுபவ மிக்கவர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படும்.
பாடக்குறிப்புகள் வழங்குவதோடு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என, மாவட்ட வேலைவாய்ப்பக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC EXAM CERTIFICATE VERIFICATION NEWS:

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 290 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 28ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர் மற்றும் தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இதன் தேர்வுமுடிவுகள் 02.11.2016 அன்று வெளியிடப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண், அவர்களின் இடஒதிக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு SMS மற்றும் E-mail மூலமும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்: 13.12.2016
கலந்தாய்வு நடைபெறும் நாள்: 14.12.2016 முதல் 16.12.2016 
மேலும் விவரங்களுக்கு: http://tnpsc.gov.in/

6/12/16

முதல்வர் ஜெயலலிதா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலத்தில் ஜெயலலிதா ஆகிப்போனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். ஆனால், அவரது அம்மாவுக்கு "அம்மு".அதிமுகவினருக்கு "அம்மா".

🌷 சர்ச் பார்க் பள்ளி மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை
படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். "இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்" என்பதை தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

🌷 போயஸ் கார்டன், சிறுதாவூர், ஹைதராபாத் திராட்சைத்தோட்டம், ஊட்டி கொடநாடு எஸ்டேட் ஆகிய நான்கும் ஜெ. மாறி மாறி தங்கும் இடங்கள். தற்போது ஹைதராபாத் செல்வதை நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர். மாதக்கணக்கில் தங்க வேண்டுமென்றால் கோத்தகிரியில் உள்ள கோடநாடு.

🌷 சினிமா காலத்தில் இருந்தே இவரை "வாயாடி"என்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். இதுபற்றி நிருபர் ஒருவர் ஜெ.விடம் கேட்டதுக்கு, "அவர் கலகல, நான் லொட லொட" என்றாராம் சிரித்தபடி.

🌷 உடல்நலனில் ஆரம்பகாலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தவர். தற்போது சில நிமிடங்கள் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொள்கிறார்.

🌷 இவர் நடித்த மொத்தப்படங்கள் 115.எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல்படம் "ஆயிரத்தில் ஒருவன்".

🌷 "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா"என்ற "அரசிளங்குமாரி" படப்பாடல் தான் எனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாடல் என்பார். அப்பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து அவரது எழுத்துக்களை நாட்டுடமையாக்கினார்.

🌷 "அரசியலில் நான் என்றைக்குமே குதிக்க மாட்டேன் "என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. "நாடு போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட முதலமைச்சராகி விடுவார் போல "என்று இவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலிமாறன்.

🌷 ஜெயலலிதா முதலில் குடியிருந்தது தி நகர் சிவஞானம் தெருவில். பிறகு அடையாறில் சிலகாலம் இருந்தார். படங்கள் குவிந்து நடிப்பில் கொடிகட்டிய காலத்தில் தான் போயஸ் வீடு கட்டப்பட்டது. அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து கட்டியர் இவருடைய அம்மா சந்தியா. அதனால் "வீட்டுக்குள் என்ன மாற்றமும் செய்யலாம். ஆனால் அம்மா வைத்த. வாசலை மட்டும் மாற்றக்கூடாது எனக் கூறியிருக்கிறார்.

🌷 எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட அந்த நினைவுகள் இல்லை.

🌷 போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் இவரது தாயார் சந்தியா, எம்.ஜி.ஆர்.ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

🌷 எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற விழாவில் ஆறடி உயரமுள்ள வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். இவருக்கு மிகவும் பிடித்த படம் இதுதான்.

🌷 பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி இராஜகோபாலசாமி இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கிரா தேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

🌷 தினமும் காலையில் நிஷாகாந்தி எனப்படும் இருவாட்சி மலர்களை பறித்து பூஜைக்கூடையில் தயார்நிலையில் வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜையறைக்குள் நுழைவார். சமீபமாக துளசியும் பூஜையில் தவறாமல் இடம்பெறுகிறது.

🌷 யாகம் வளர்ப்பதிலும், ஹோமத்தில் உட்காருவதிலும் ஜெயலலிதாவிற்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் 6 மணிநேரம் வரை கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாக மந்திரம் சொன்னாலோ கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேதஞானம் உண்டு.

🌷 சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் மொத்தம் 116 ஏக்கர். அங்கு புறா, கிளி, காடை, கௌதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார்.இந்திரா,சந்திரா என்ற ஈமூக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

🌷 பரதம்,ஓரிண்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடினார்.

🌷 ஜெ.வின் 100-வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் *"நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் ஜெயலலிதா"* என்று பாராட்டப்பட்டவர்.

🌷 பழைய பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வ முள்ளவர். ஜெயா டிவியில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் இவருடைய விருப்பங்கள்.

🌷 ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

🌷 போயஸ் வீட்டில் எப்போதும் 7 நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்தநாளை யொட்டி ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால் சில குட்டிகள் சிறுதாவூர், கோடநாடு என அனுப்பி வைக்கப்படுகின்றன.

🌷 இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங் களையும் தனது "வாக் அண்ட் டாக் "பேட்டிக்கு வரவழைத்த NDTV-யால் ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்றமுடியவே இல்லை.கடைசிவரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்.

🌷 ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி படித்து வந்தார். இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார்.ரமணர் தொடர்பான முக்கிய புத்தகங்கள் அனைத்தும் சமீபகாலமாக அவர் மேஜையில் உள்ளன.

🌷 ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில்தான்.அங்கு சசிகலா, மற்றும் முக்கியப்பணியாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை.

🌷 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா!

🌷 திரைப்பட துறையை ஜெ. தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞராக வேண்டுமென்பதே அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் குடும்பச்சூழல் காரணமாக நடிப்புத்தொழிலை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது.

🌷 பாடசாலை மாணவி யாக இருக்கும்போதே ஜெயலலிதா பல்வேறு நாடகங்களில் நடித் துள்ளார். அதில் உன்று *TEA HOUSE* என்ற ஆங்கில நாடகம்.அதன் பின்னர் *THE EPISTLE* என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்துள்ளார்.

🌷 திரையிலகில் அதிக வெள்ளிவிழா திரைப்படங்களை வழங்கிய சாதனை ஜெவுக்கு உண்டு.அவர் நடித்துள்ள 92 தமிழ்படங்களில் 85 படங்கள் வெள்ளிவிழா கண்டவை.

🌷 *சிவாஜியுடன்* இவர் நடித்துள்ள *தங்கமகன்* திரைப்படம் தான் *ஆஸ்காருக்கு* பரிந்திரை செய்யப்பட்ட *முதல் தமிழ் படம்.*

🌷 *ஜெயலலிதா அறிமுகமான 5 மொழித் திரைப்படங்களும் பெரும் வெற்றிப் பெற்றவை.*


🌷 "நான் அனுசரித்துப் போகிறவள் தான்.ஆனால் எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன் என்று தன் கேரக்டருக்கு விளக்கம் அளித்துள்ளார்.
  

ALL FORMS FOR TEACHERS ONE PAGE:

1.     M.L FORMS
2.     C.L FORMS(H.M)
3.     C.L FORMS(GENERAL)
4.     E.L SURRENDER FORM
5.     HIGHER STUDY PERMISSION FORM
6.     FORM FOR AN NEW VEHICLE PURCHASE FORMAT
7.     FESTIVAL ADVANCE
8.     C.P.S.FORM
9.     GPF CLOSURE FORMAT
10. GPF TEM ADVANCE FORMAT
11. HOUSING QUATA FORMAT
12. PAY BILL PRINT (LEGAL)
13. VEHICLE ADVANCE FORMAT
14. V.R.S FORMAT
15. INFORMATION ACT FORUM FORMAT
16. NHIS FORM-WITH SPOUSE CERTIFICATE 2012
17. BIRTH CERTIFICATE FORMS (WORD)
18. BIRTH CERTIFICATE FORMS (PDF)
19. HIGH&HIGHER SECONDARY SCL TRS MPHIL/PHD PERMISSION - FORMAT

உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டாலும் ஆபத்து தான்!!!

உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொண்டாலும் உடலுக்கு தீங்கு தான் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைவான உப்பால் தீங்கு : 
நாட்டிலேயே தமிழகத்தில் உள்ளவர்கள் தான் அதிக அளவில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராம உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளது.
இதயநோய் பாதிப்புக்களை தவிர்க்க உப்பின் அளவை குறைக்க வேண்டும் என டாக்டர்களும் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் புதிய ஆய்வின்படி, குறைவாக உப்பு சேர்த்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதயநோய் அபாயம் : 
குறைவாக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து 'தி லேன்செட்' நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 
இதில், சராசரியான அளவை விட குறைவாக உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது வாத நோய் தாக்குதல் அபாயம் உண்டு என்பது தெரிய வந்துள்ளது. உப்பு குறைவாக சேர்த்து கொண்டால் தான் உடலுக்கு நல்லது என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் குறைவாக உப்பு சேர்ப்பதால் எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக, இதயநோய் பாதிப்புக்களே அதிகம் எனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விழிப்புணர்வு தேவை :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமே அதிகப்படியான உப்பை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தை குறைக்க உப்பை குறைவாக சேர்த்துக் கொள்பவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படும் அபாயம் உண்டு. இந்த ஆய்வு அறிக்கை உண்மை என சென்னையை சேர்ந்த பல உணவுத்துறை நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். சரியான அளவில் உப்பு சேர்த்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உணவில் உப்பு சேர்த்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு சில டாக்டர்களிடமே இருப்பதில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம

சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம்
பல நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், சிம்லாவில் புலப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியில் இருந்து அனைவரும் பார்க்கமுடியும் என நாசா தெரிவித்துள்ளது. சிம்லாவில் புலப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்:  சர்வதேச விண்வெளி நிலையம், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலையில், விநாடிக்கு 7.6 கி.மீட்டர் வேகத்தில் விண்வெளியில் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.    
                         சர்வதேச விண்வெளி நிலையத்தை நான்கு நிமிடங்கள் காணலாம்:                                    இந்நிலையில் விண்வெளியில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையத்தை, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த ஒருவர் வானில் பார்த்தது மட்டும் இல்லாமல், அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிம்லாவில் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி மாலை 6:27 மணிக்கு புலப்பட்டது.
இது ஒன்றும் அதிசயம் இல்லை சர்வதேச விண்வெளி நிலையத்தை பொதுவாக ஒரு நிமிடம் முதல் நான்கு நிமிடங்கள் வரை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் வேகமாக நகரும் விமானம் போல் இந்த காட்சிகள் புலப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விண்வெளி நிலையத்தை காண புதிய இணையதளம்:
சர்வதேச விண்வெளி நிலையம் நீங்கள் வசிக்கும் பகுதியை எப்போது கடந்து செல்லும் என்பதை தெரிவிப்பதற்காக https://spotthestation.nasa.gov/home.cfmஎன்ற இணையதளத்தை நாசா உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்திற்குள் சென்று நீங்கள் இருக்கும் பகுதியை குறிப்பிட்டால், அந்த பகுதியை எப்போது விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்து செல்லும் என்ற தகவல்கள் அளிக்கப்படும். இதனை கணக்கில் கொண்டு நீங்கள் வெறும் கண்ணால் சர்வதேச விண்வெளி நிலையம், ஒரு நட்சத்திரம் போல் உங்கள் பகுதியில் கடந்து செல்வதை பார்க்க முடியும். மேலும் இந்த இணையதளம் வழியாக, உங்கள் பகுதியை எப்போது சர்வதேச விண்வெளி மையம் கடந்து செல்லும் என்பதை உங்களுக்கு நியாபகப்படுத்துவதற்கான வசதியும் உண்டு.

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.
தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.
சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?
பெயர் மாற்றம்
செய்வதற்கான  தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான  ஆவணங்கள் :

பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/
வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்
தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை :
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம்  செலுத்த :
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும்  முன்
கவனிக்க  வேண்டியவை :
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள் :
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி  பெறுவது ?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.
பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
# மேலும் #விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/
servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://
www.stationeryprinting.tn.gov.in/
forms.htm
விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.
இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

BREAKING NEWS : முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு


05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.



திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே!  எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதனால்தான்  தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.



அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.



1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை:

 தமிழக அரசு அறிவிப்புமரியாதைக்குரிய தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா "அம்மா" காலமானார்., இரவு 11:30 மணிக்கு (05-12-2016) உயிர் பிரிந்ததாக அப்போல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்றன வியாழக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலன் இன்றி காலமானார்.


இதையடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  தேர்ந்தெடுத்தனர். பின்னர். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியா சாகர் ராவ் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பன்னீர் செல்வம் உறுதி மொழி ஏற்றார்.

ஓ.பன்னீர் செல்வத்தைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து  தமிழகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது, முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. .

காலை 4.30 மணி முதல் ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.