யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/16

Techno Club-Competition Marks ,Prize& Expenditure



Flash News:மிலாடி நபி முன்னிட்டு 13.12.2016 ஆம் தேதிஅன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.



வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது. 
இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது.

 இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழக புதிய அமைச்சரவை விவரம்:

1. ஓ.பன்னீர் செல்வம் - பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை
2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
4. செல்லுார் ராஜூ - கூட்டுறவுத் துறை
5. தங்க மணி - மின்சாரம், மதுவிலக்குத் துறை

6.வேலு மணி - நகர வளர்ச்சி துறை
7.ஜெயகுமார் - மீன்வளத் துறை
8.சண்முகம் - சட்டத்துறை
9.அன்பழகன் - உயர்கல்வி துறை
10.சரோஜா - சமூக நலன், சத்துணவுத் துறை
11. எம்.சி. சம்பத் - தொழில் துறை
11. கருப்பணன் - சுற்றுச்சூழல் துறை
12.காமராஜ் - உணவுத் துறை
13. ஓ.எஸ்.மணியன் - கைத்தறித் துறை
15. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி வாரியத் துறை
16. விஜய பாஸ்கர் - சுகாதாரத் துறை
17. துரைகண்ணு - வேளாண் துறை
18. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
19. ஆர்.பி. உதயகுமார் - வருவாய் துறை
20. வேலுமணி - நகர வளர்ச்சி துறை
21. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
22. மஃபா பாண்டியராஜன் - பள்ளி கல்வித் துறை
23. ராஜேந்திர பாலாஜி - பால்வளத் துறை
24. பென்ஜமின் - ஊரக வளர்ச்சி துறை
25. விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
26. நிலோபர் கபில் - தொழிலாளர் நலத் துறை
27. மணிகண்டன் - தகவல் தொடர்பு துறை
28. ராஜலெட்சுமி - ஆதி திராவிடர் நலத் துறை
29. பாஸ்கர் - கதர் துறை
30. வீரமணி - வணிக வரித் துறை
31. சேவூர் ராமச்சந்திரன் - இந்து சமய அறநிலையத் துறை
32. வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
32. பால கிருஷண ரெட்டி - கால்நடை துறை

NMMS ONLINE ENTRY !!

மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.


*www.tngdc.gov.in*  என்ற வலைதளத்திற்கு சென்று
*Welcome to ONLINE PORTAL*  ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.
அதில் *NMMS* CLICK செய்தவுடன் *USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.
 *NMMS : Vellore  District*
---------------------------------------------
 User Name : *D30E30*   Password : *DEE30P030*
------------------------------+++-+-----
பின்னர் *ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்
அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் *Submit* கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்,
6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Paytm:ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் இனி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யலாம்: எப்படி?

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான புதிய முறையை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.     

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நடத்துவதில் தற்போது பேடிஎம் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவகாரத்திற்கு பிறகு நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இணைய இணைப்பும், ஸ்மார்ட்போனும்  இருப்பவர்கள் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என்ற நிலை உள்ளதால், நாடு முழுவதும் பெரும்பான்மையாக இருக்கின்ற இதர மக்கள் இந்த வசதியைப் பெற முடியாத நிலைமை இருந்தது. இதனைப்போக்க தற்போது பேடிஎம் நிறுவனம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி இந்த இணைய இணைப்போ , ஸ்மார்ட்போனோ இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடலாம். இதற்கென 180018001234 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இதை பயன்படுத்துவதற்கு என நடைமுறைகளும் வெயிடப்பட்டுள்ளது.

அதன்படி இதனைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களோ, வியாபாரிகளோ முதலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தங்களது அலைபேசி எண்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்களுக்கு என ஒரு நான்கு இலக்க ரகசிய எண்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் யாருக்கு பணத்தை செலுத்த வேண்டுமோ அவர்களது அலைபேசி எண்னை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையையம் உள்ளிட வேண்டும். அதன் பின்னர் பரிவர்த்தனையை உறுதி செய்ய தங்களது ரகசிய எண்னை பதிவிட வேண்டும். இதன் முறையின் மூலம் அவர்களும் பணத்தை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய இயலும். 

இவ்வாறு பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் நிதின் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகளுக்கு 'கிடுக்கிப்பிடி'

EMIS இணையதளத்தில் தேர்வு எண் சேர்ப்பு ; கால அவகாசம் நீட்டிக்க வலியுறுத்தல்

10th Half yearly Exam Dates No Change

அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்.07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று நடைபெறவிருந்த தேர்வுகள், நடைபெற வேண்டிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: ஜனவரிக்கு ஒத்தி வைப்பு.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை எதிர்த்தும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி ஜனவரிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருவள்ளுவர் பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு.

கடந்த, 6, 7ல் நடக்க இருந்த, வேலுார் திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள், வரும், 9, 10ல் நடக்க உள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 
வேலுார், திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டில், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 130க்கும் மேற்பட்ட கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன.

முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலையில், கடந்த, 6, 7ல் நடக்க இருந்த முதல் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக, 9, 10ல் தேர்வு நடக்க உள்ளன.

வங்க கடலில் 'வார்தா:' கடலோரங்களில் புயல் எச்சரிக்கை.

வங்க கடலில் தீவிரமாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று, 'வார்தா' புயலாக மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மீனவர்களுக்கு, புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வங்க கடலின் தென் கிழக்கில், அந்தமான் பகுதியில், மூன்று நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த மண்டலம், இன்று அதிகாலை தீவிரமாகி, நாளைக்குள் புயலாக மாறும் என, வானிலை முன் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த புயலுக்கு, பாகிஸ்தான் அளித்துள்ள, வார்தா என்ற, அரபி மற்றும் உருது மொழி பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த பெயருக்கு, ரோஜா மலர் என, அர்த்தம். இந்த புயல், வட மேற்கு பக்கம் நகர்ந்து, விசாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடைப்பட்ட பகுதியை நெருங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து, தென் கிழக்கில், 1,180 கி.மீ., நிகோபார் தீவுக்கு வடமேற்கில், 260 கி.மீ., துாரத்தில், புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து, சென்னை, கடலுார், நாகை துறைமுகங்களில், ஐந்தாம் எண் புயல் சின்னம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களில், முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?

திடீர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், துணை கலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் - 1' பதவிகளில், 85 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல் தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.

ஆனால், கடந்த வாரம், வங்க கடலில் உருவான, 'நடா' புயலால் அறிவித்த விடுமுறை; செல்லா நோட்டு அறிவிப்பால் பணத் தட்டுப்பாடு மற்றும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவால் விடுமுறை போன்ற காரணங்களால், விண்ணப்பிக்க, தேர்வர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. இன்று ஒரு நாளில், விண்ணப்பம் பதிவு செய்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஒரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!

பல்வேறு வழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித் தேர்வு, விரைவில் வரவிருக்கிறது. இது ஆசிரியப் பட்டம் படித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதல் இரண்டு தேர்வுகளும் கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து இருந்தபோதும் 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் பலர் தேர்ச்சி பெற்றனர்.

ஜெ., சொத்துக்கள் யாருக்கு சேரும்

ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அவரது சொத்துக்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, வேட்புதாக்கல் செய்த ஜெயலலிதா, தன் சொத்து விபரங்களை குறிப்பிட்டு இருந்தார். அவரது மொத்த சொத்துமதிப்பு 113.73 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், 41.63 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரநகைகள், 14.7 கோடி ரூபாய் அசையா சொத்து, கொடநாடு எஸ்டேட், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா பப்ளிகேசன்ஸ் உள்ளிட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் 10.63 கோடி ரூபாய் வங்கி டிபாசிட் அடக்கம்.

அவரின் அரசியல் வாரிசு, அநேகமாக முடிவு செய்யப்பட்டு விட்டநிலையில், சொத்துக்களுக்கான வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார், அவர் மகள் தீபா, மகன் தீபக் உள்ளிட்ட உறவினர்கள் உள்ளனர். நேற்றைய இறுதிசடங்குகளை தீபக் தான் செய்தார். 

வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்:

வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது. இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. - நமது நிருபர்

HALF YEARLY EXAM POSTPONED | DATE ANNOUNCEMENT SOON:

முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.
முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்,
6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

8th Private Exam Tatkal Application | Last Date:08.12.2016 05:00pm

CEO கடலூர்-அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும். 07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று நடைபெறவிருந்த தேர்வுகள், நடைபெற வேண்டிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்: