யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/16

வங்க கடலில் 'வார்தா:' கடலோரங்களில் புயல் எச்சரிக்கை.

வங்க கடலில் தீவிரமாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று, 'வார்தா' புயலாக மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மீனவர்களுக்கு, புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வங்க கடலின் தென் கிழக்கில், அந்தமான் பகுதியில், மூன்று நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த மண்டலம், இன்று அதிகாலை தீவிரமாகி, நாளைக்குள் புயலாக மாறும் என, வானிலை முன் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த புயலுக்கு, பாகிஸ்தான் அளித்துள்ள, வார்தா என்ற, அரபி மற்றும் உருது மொழி பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த பெயருக்கு, ரோஜா மலர் என, அர்த்தம். இந்த புயல், வட மேற்கு பக்கம் நகர்ந்து, விசாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடைப்பட்ட பகுதியை நெருங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து, தென் கிழக்கில், 1,180 கி.மீ., நிகோபார் தீவுக்கு வடமேற்கில், 260 கி.மீ., துாரத்தில், புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து, சென்னை, கடலுார், நாகை துறைமுகங்களில், ஐந்தாம் எண் புயல் சின்னம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களில், முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக