யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/16

Paytm:ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் இனி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யலாம்: எப்படி?

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான புதிய முறையை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.     

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நடத்துவதில் தற்போது பேடிஎம் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவகாரத்திற்கு பிறகு நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இணைய இணைப்பும், ஸ்மார்ட்போனும்  இருப்பவர்கள் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என்ற நிலை உள்ளதால், நாடு முழுவதும் பெரும்பான்மையாக இருக்கின்ற இதர மக்கள் இந்த வசதியைப் பெற முடியாத நிலைமை இருந்தது. இதனைப்போக்க தற்போது பேடிஎம் நிறுவனம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி இந்த இணைய இணைப்போ , ஸ்மார்ட்போனோ இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடலாம். இதற்கென 180018001234 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இதை பயன்படுத்துவதற்கு என நடைமுறைகளும் வெயிடப்பட்டுள்ளது.

அதன்படி இதனைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களோ, வியாபாரிகளோ முதலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தங்களது அலைபேசி எண்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்களுக்கு என ஒரு நான்கு இலக்க ரகசிய எண்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் யாருக்கு பணத்தை செலுத்த வேண்டுமோ அவர்களது அலைபேசி எண்னை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையையம் உள்ளிட வேண்டும். அதன் பின்னர் பரிவர்த்தனையை உறுதி செய்ய தங்களது ரகசிய எண்னை பதிவிட வேண்டும். இதன் முறையின் மூலம் அவர்களும் பணத்தை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய இயலும். 

இவ்வாறு பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் நிதின் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக