யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/16

திண்டுக்கல் மாவட்ட தொடக்க &நடுநிலை பள்ளிகளில் நடத்தப்படும் இரண்டாம் பருவ தேர்வு மற்றும் SLAS தேர்வு காலஅட்டவனை



2017 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள். RH list.

தேவையில்லாத புத்தகங்கள் வேண்டாம் : மாணவர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

தேவையில்லாதபுத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள், ஒவ்வொருநாளும் பள்ளிக்கு செல்லும் போது,
அனைத்து பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உணவுமற்றும் குடிநீர் போன்றவற்றை சுமந்து செல்கின்றனர். அதனால், சிறு வயது குழந்தைகளின் முதுகுதண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பாட புத்தகங்களின் அளவுகுறைக்கப்பட்டு, அதற்கேற்ப பாட வேளைகள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன. இம்முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும்சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'மாணவர்களுக்கு, தினமும்என்ன பாடம் நடத்த வேண்டும்என, திட்டமிட வேண்டும். அதற்கேற்ப, பாட புத்தகங்கள் மற்றும்நோட்டு புத்தகங்களை, அளவோடு கொண்டு வர, மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியர் விவரங்கள் இல்லை-அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி

டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம்

மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித்துறையில், 10ம் வகுப்பு,
பிளஸ்2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள்அமைத்து, ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. இதில், அவ்வப்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
தாமதம்: இது போல, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதேர்வுகளிலும், மையங்களில் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் அனுப்புதல், பிரித்தல், மறு ஆய்வு செய்தல்போன்றவற்றிற்கு, கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால், தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் அனுப்புதல் மற்றும் திருத்தம் நடக்கும்என, சி.பி.எஸ்.இ., வாரிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் கல்வி ஆண்டில், தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்லைனில்விடை திருத்த ஒருங்கிணைந்த மையத்திற்குஅனுப்பப்படும்.

கணினி குறியீடு : பின், அவற்றில் கணினிகுறியீடு கொண்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், கணினிமூலமும், மற்றவை கணினி வழியேபிரித்தும், திருத்த அனுப்பப்படும். இந்த, டிஜிட்டல் திருத்த முறையால், முறைகேடாகதிருத்தும் வகையில், விடைத்தாள்கள், 'லீக்' ஆவது; காணாமல்போவது தடுக்கப்படும். மேலும், 25 நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகளைவெளியிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!

ரொக்கம்இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு
ஏற்பாடு

செய்துஉள்ளது.இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பணதட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம்வெகுவாக குறைந்து உள்ளது. .

இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்குரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படிமத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.இது குறித்து மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாகபல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில்விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசுஏற்பாடு செய்து உள்ளது எனமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துஅவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகளைஅதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதிதொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம்ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும்மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம்ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவுகருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

10 பேரைஇணைக்க வேண்டும்

பல்வேறுகல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள்ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான்இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல்தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில்இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

CCE-4th WEEK MATHS KEY

WORK SHEET - 4 TENTATIVE KEY ANSWERS - SOCIAL SCIENCE

WORK SHEET -4 TENTATIVE KEY ANSWERS - SCIENCE

தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.

 1)ஏ. சுப்பராயலு-
17.12.1920 - 11.07.1921.

2) பனகல்ராஜா
11.07.1921- 3.12.1926.

3) பி. சுப்பராயன்
04 .12.1926- 27.10.1930

4)பி. முனுசுவாமி நாயுடு

27.10.1930 -4.11.1932

5) ராமகிருஷ்ணரங்காராவ்
5.11.1932 -04.04.1936

6)பி. டி. இராஜன்
4.4. 1936- 24.08. 1936

7) ராமகிருஷ்ணரங்காராவ்
24.08.1936 -1.04.1937

8) கூர்மாவெங்கட ரெட்டி நாயுடு
1.04.1937 -14.07.1937

9) இராஜகோபாலாச்சாரி
14 .07.1937- 29.10.1939

10) த. பிரகாசம்
30.04.1946 - 23.03. 1947

11) ஓமந்தூர்ராமசாமி ரெட்டியார்
23.03.1947- 6.04. 1949

12) பூ.ச.குமாரசுவாமி ராஜா
6.4.1949

13)பூ.ச. குமாரசுவாமிராஜா
26.01. 1950 - 9.4. 1952

14) இராஜகோபாலாச்சாரி10.4.1952 -13.4. 1954

15)கே. காமராஜ்
13.4.1954- 31.03. 1957

16) கே. காமராஜ்
13.04.1957 -1.03. 1962

17) கே. காமராஜ்
15.03.1962 -2.10. 1963

18)எம். பக்தவத்சலம்
2.10.1963- 6.03.1967

19) சி. என். அண்ணாத்துரை
6.03. 1967- . .08. 1968

20)சி. என். அண்ணாத்துரை
...08- 1968- 3.02.1969

21) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
3.02.1969 -10.02. 1969

22) மு. கருணாநிதி
10.02.1969- 4.01. 1971

23) மு. கருணாநிதி
15.03. 1971- 31.01. 1976

*குடியரசுத்தலைவராட்சி*
31.01.1976- 30.06.1977

24)எம். ஜி. இராமச்சந்திரன் 30.06.1977- 17.02. 1980
*குடியரசுத்தலைவர் ஆட்சி*
17.02.1980 -9.06.1980

25)எம். ஜி. இராமச்சந்திரன் 9.06.1980- 15.11. 1984

26)எம். ஜி. இராமச்சந்திரன் 10.02.1985 -24.12.1987

27) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
24.12.1987- 7.01. 1988

28)ஜானகிஇராமச்சந்திரன்
7.01.1988- 30.01. 1988

*குடியரசுத்தலைவர்*
30.01. 1988- 27.01. 1989

29)மு. கருணாநிதி
27.01.1989 -30.01. 1991

*குடியரசுத்தலைவர்*
30.01.1991 -24.06.1991

30) ஜெ. ஜெயலலிதா
24.06.1991 -12.05.1996

31) மு. கருணாநிதி
13.05.1996- 13.05. 2001

32)ஜெ. ஜெயலலிதா
14.05.2001- 21.09. 2001

33.ஓ. பன்னீர்செல்வம்
21.09.2001 -01.03. 2002

34)ஜெ. ஜெயலலிதா
2.03.2002 -12.05.2006


35) மு. கருணாநிதி
13.05. 2006- 15.05. 2011

36)ஜெ. ஜெயலலிதா
16.05. 2011- 27.09. 2014

37) ஓ. பன்னீர்செல்வம்
28.09.2014 -23.05. 2015

38) ஜெ. ஜெயலலிதா
23.05. 2015 - 06.12. 2016

39) ஓ. பன்னீர்செல்வம்

6.12. 2016 -

TET ARTICLE :ஆசிரியர் தகுதித்தேர்வு - ஜெயலலிதாவுக்காக காத்திருந்த பள்ளி ஆசிரியர்கள்!

அஇஅதிமுகஆட்சியில் கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்றுஆசிரியர் தகுதித்தேர்வு. ஜெயலலிதா ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுபள்ளி ஆசிரியர் கனவில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தினார். மூன்று முறை ஆசிரியர்
தகுதித்தேர்வு நடத்தப்பெற்று எழுபதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பைபெற்றிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க மொபைல் ஆப்கள் அறிமுகம்!!!

திருவனந்தபுரமஊழலை ஒழிக்கும் வகையிலும், மக்கள் ஊழலுக்கு எதிராகபோராடும் வகையிலும் இரண்டு மொபைல் ஆப்களைகேரள
முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை(09-12-16) அறிமுகம் செய்துவைத்தார்.

சர்வதேசஊழல் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும்கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரளமுதல்வர் பினராயி விஜயன், ஊழலுக்குஎதிரான 2 மொபைல் ஆப்களை அறிமுகம்செய்துவைத்தார்.

ஊழலற்ற, நிலையான வளர்ச்சி

'அரைஸிங்கேரளா' (Arising Kerala), விசில் நவ் (Whistle Now) என்றுபெயரிடப்பட்டுள்ள ஆப்களை அறிமுகம் செய்துவைத்த பினராயி விஜயன், "ஊழலற்றமற்றும் நிலையான வளர்ச்சி என்பதேமாநில அரசின் நோக்கம். ஊழலைஒழிக்க மாநில அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு, அரசு சாரா நிறுவனங்களில் ஊழலைமுடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.


ஊழலை ஒழிப்பது தொடர்பான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் கேரள மக்கள் இந்தஆப்கள் மூலம் வழங்கலாம் என்றார்பினராய்விஜயன்.

9/12/16

பருவம் 2 தேர்வு கால அட்டவணை

15.12.2016. தமிழ்
16.12.2016. ஆங்கிலம்
19.12.2017. Slas
20.12.2016. Slas
21.12.2016. கணக்கு
22.12.2016. அறிவியல்
23.12.2016. சமுகஅறிவியல்

Primary
15.12.2016. தமிழ்

16.12.2016. ஆங்கிலம்
19.12.2016. கணக்கு
20.12.2016. அறிவியல்
21.12.2016. Slas
22.12.2016. Slas

23.12.2016. சமுகஅறிவியல்

இண்டர்நெட்டில் உள்ள உங்களது விபரங்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை!!!

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர்மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளைதற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில
நொடிகள்அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம்.
இண்டர்நெட்நம் உலகையே சுருக்கிவிட்டது. எத்தனைஆயிரம் கிலோமிட்டர் தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பது போன்றஉணர்வு உள்ளது.

ஆனால் எந்த அளவுக்கு இண்டர்நெட்நமக்கு பாசிட்டிவ் ஆக இருக்கின்றதோ அதேஅளவுக்கு அதனால் நமக்கு ஒருசிலஆபத்தும் உள்ளது. ஹேக்கர்களின் கைவரிசையால்நமது பொருட்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு நம்முடையபர்சனல் விஷயங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

என்னதான்ஆண்ட்டி வைரஸ் வைத்திருந்தாலும், பாஸ்வேர்டுகளைசிக்கலாக வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் ஏதாவது ஒரு கேப்பில்உள்ளே புகுந்து நமது டேட்டாக்களை நாசமாக்கிவ்டுகின்றனர்.
இந்நிலையில்தற்போது நமக்கே தெரியாத ஒருசிலஇடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நம்முடையதகவல்களை அழிக்க, தற்போது ஒருசிறந்த வழி கிடைத்துள்ளது.

சுவீடன்நாட்டை சேர்ந்த இரண்டு டெவலப்பர்கள்இதற்கென ஒரு பிரத்யேக இணையதளத்தைஉருவாக்கியுள்ளனர். Deseat.me என்ற இணையதளம் உங்களுடைய தகவல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை உங்கள்கண்முன் நிறுத்தும்.

அவற்றில்தேவையில்லாத இணையதளங்களில் உங்கள் தகவல் இருப்பதைநீங்கள் அறிந்தால் உடனே அவற்றை டெலிட்செய்துவிடலாம். இதற்கு ஒருசில எளியவழிமுறைகளை கடைபிடித்தாலே போதும். அவை என்னவென்றுதற்போது பார்ப்போம்
இந்த இணையதளத்தை உபயோகிக்க உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட்இருந்தால் போதும். உங்களுடைய கூகுள்அக்கவுண்டில் லாக்-இன் செய்தபின்னர் Deseat.me இணையதளத்தை ஒப்பன் செய்யுங்கள்.
அதில் நீங்கள் பயன்படுத்தும் செயலிமுதல் இணையதளங்கள் வரை திரையில் வரும். அதில் நீங்கள் அடிக்கடி உபயோகிக்காதஅல்லது அறவே உபயோகிக்காத இணையதளங்கள்இருந்தால் அதை உடனே டெலிட்செய்துவிடுங்கள். அந்த இணையதளத்தில் உங்களைபற்றிய தகவல்கள் மறைந்துவிடும்.

தற்போதைக்குஅனைத்து விதமான இணையதளங்களுக்கும் சப்போர்ட்செய்யும் வகையில் இந்த Deseat.me இல்லைஎன்றாலும் ஃபேஸ்புக் போன்ற பெரிய இணையதளங்களுக்குசப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.

ஆயினும்வரும் காலத்தில் இந்த இணையதளம், சின்னசின்ன இணையதளங்களில் உள்ள நம்முடைய விபரங்களைகண்டுபிடிக்கும் திறன் வாய்ந்ததாக செயல்படவைக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கியபல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க
ஒரு மாத காலஅவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர்8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள்விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே போதியகால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.
இதைத்தொடர்ந்துபல்வேறுதரப்பினரிடமிருந்துபெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்குவிண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்புவழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர்15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.

இதற்குமேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாதுஎன்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்தவாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரைகாத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலாது நபி விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில்கூறப்பட்டு இருப்பதாவது:

இந்த ஆண்டில் டிசம்பர் 12-ந்தேதியன்று மிலாது நபி விடுமுறை
விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் தலைமைக்காஜி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், நவம்பர் 30-ந் தேதி பிறைதெரிந்ததாகவும், எனவே, மிலாது நபிவிழா 13-ந் தேதியன்று கொண்டாடப்படும்என்றும் கூறியிருக்கிறார். மேலும், மிலாது நபிவிழாவுக்கு 12-ந் தேதிக்குப் பதிலாக, 13-ந் தேதி விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் அவர் அதில்கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, மிலாது நபி விடுமுறையைடிசம்பர் 12-ந் தேதிக்குப் பதிலாக, டிசம்பர் 13-ந் தேதியன்று (செவ்வாய்கிழமை) அளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. அதன்படி, 13-ந் தேதியன்று மிலாதுநபிவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு நாள் 25 மணி நேரமாக மாறுகிறது!

ஒரு நாளில் எனக்கு 24 மணி நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சில மணி நேரம் இருந்தால் நிறைய வேலைகளைச்
செய்து சாதனை புரிவேன்’ என்று சொல்பவர்களுக்கு எல்லாம் நற்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக தன்னை நீடித்துக்கொள்ள இருக்கிறது.
  

பூமி ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன்னைத்தானே சுற்றி வருவதற்கு 2 மில்லி விநாடிகள் அதிகமாக எடுத்துக்கொண்டு வருகிறது என்று அமெரிக்க புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பூமி சுற்றிவரும் நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நிகழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பூமி பல சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டுவந்துள்ளது. அவற்றில் முக்கிய மாற்றம் காற்றின் அடர்த்தி கூடியது. தூசுகள், வாயுக்கள் காற்றில் அதிகரித்து வருவதால் காற்றில் அடர்த்தி அதிகரித்து பூமி சுற்றிவரும் நேரத்தின் அளவு அதிகரிக்கும் நிலையை எட்டியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். பூமி சுற்றும் நேரத்தின் அளவு கூடுவது தொடருமானால், இன்னும் 2 மில்லியன் நூற்றாண்டுகளில் பூமியின் சுற்றும் நேரம் 25 மணி நேரத்தை எட்டிவிடும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். மேலும், இந்த நிகழ்வுக்கு நிலவின் ஈர்ப்பு சக்தியும் காரணமாக இருக்கலாமா என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.

டி.இ.டி தேர்வு எப்போது ?? தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

6 மாவட்டங்களில் இரண்டாம் பருவத்தேர்வுக்கான அட்டவணை...




தொலைநிலை கல்வி தேர்வு தள்ளிவைப்பு

சென்னைபல்கலை யின் தொலைநிலை தேர்வுகள், தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டுஅதிகாரி,
திருமகன் வெளியிட்ட அறிவிப்பில், 'ஜெயலலிதா மறைவு காரணமாக, தொலைநிலைகல்வி மாணவர்களுக்கு, டிச., 10 மற்றும், 11ம் தேதிகளில் நடக்கவிருந்ததேர்வுகள், தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. 'புதிய தேதி, பின் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டு உள்ளது.