யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

6 அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணா

பணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என அறிவிக்கை ஒன்றை மாநில அரசு வெளியிட்டு உறுதி கூறியிருந்தது.
அறிவிக்கை வெளியிட்டு 5 மாதங்கள் ஆகியும் பணியை முறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட காலமாக ஆர்ப்பாட்டம் செய்து வந்த ஒப்பந்தப் பணி ஆசிரியர்கள், நிதியமைச்சர் பிரதீப் குமார் அமத், உள்ளாட்சித் துறை அமைச்சர் அருண் சாஹு, மின் துறை அமைச்சர் பிரணாப் தாஸ், உணவுத் துறை அமைச்சர் சஞ்சய் தாஸ் வர்மா, சட்டப் பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் விக்ரம் கேசரி அரூகா, பள்ளிக் கல்வி அமைச்சர் தேவிபிரசாத் மிஸ்ரா ஆகிய 6 அமைச்சர்களின் இல்லங்களை செவ்வாய்க்கிழமை திடீரென முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். பணியை உடனடியாக நிரந்தரம் செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது குறித்து மாநிலப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூறியதாவது:
பணிநிரந்தரம் தொடர்பான அறிவிக்கையை அரசு வெளியிட்டு ஐந்து மாதங்களாகிவிட்டன. பணியை முறைப்படுத்துவதற்கான நடைமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பணி வரன்முறைக்கான வழிகாட்டுதல்களில் ஒடிஸா ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அரசு நிபந்தனை விதிக்கிறது. இதனால் ஒப்பந்தப் பணியில் இருக்கும் சுமார் 17 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநிரந்தரம் செய்யப்படாமல் போகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மூன்றடுக்கு ஊராட்சித் தேர்தல் பணியைப் புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 14.12.2016 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

12/12/16

தேசிய திறன் தேர்வு அறிவிப்பு குறித்து சர்ச்சை தகவல் தெரியாமல் மாணவரகள் தவிப்பு

இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

பதவி உயர்வு பெற்ற முதுகலைஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியராகப் பதவிஉயர்வு பெற முடியாது.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பானவழக்கு:
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுதொடர்பான வழக்குஇன்று சென்னை உயர்நீதி மன்றத்தில்நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இத்துணைநாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்தவாரம் என்ற அளவில் குறுகியகால அளவில் ஒரு தேதியினைக்குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டுவந்தது. ஆனால் இன்று நடந்தவிவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்டஅனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதிவிசாரணையாக விசாரிக்கப்படும்.

இறுதி விசாரணை வரை தற்போதுள்ளதடையாணை உள்ளபடியே தொடரும். இதற்குப் பெயர் Stay resolution order என்பதாகும். இதன் மூலம், புதிதாகதடையாணை ஏதும் இவ்வழக்கில் பெறஇயலாது. அதே சமயம், இருக்கின்றதடையாணையை யாராலும் நீக்க முடியாது. இனிஒரே ஒரு விசாரணை மட்டும்தான். அது இறுதி விசாரணை மட்டுமே. ஏற்கனவே இருந்ததைப் போல் வார வாரம்லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்குவர சில மாதங்கள் ஆகும்.

இன்னும்சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல்கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை. தங்கள் உண்மையுள்ள, ப.நடராசன், மாநிலதலைமை நிலையச் செயலாளர், பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும்தமிழாசிரியர் கழகம் ,தருமபுரி மாவட்டம்.

SSA., போட்டிகளில் உதவிபெறும் பள்ளிகள்புறக்கணிப்பு

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் !!

தில்லிஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியர்களுக்கான ஊதியத்தைஏறத்தாழ இரு மடங்கு வரைஉயர்த்த அமைச்சரவை
ஒப்புதல் தெரிவித்துள்ளது.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தில்லி தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
முடிவுகள்குறித்து முதல்வர் கேஜரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் கெளரவ ஆசிரியர்களின் ஊதியத்தைஉயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போதுவரை கெளரவ ஆசிரியர்களுக்கு தினக்கூலிஅடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் விடுப்பு எடுக்கும்நாளில் ஊதியம் பெறாத நிலைஇருந்து வந்தது. இனி கெளரவஆசிரியர்களின் ஊதியம் மாதவாரியாக கணக்கிட்டுவழங்கப்படும். இதன்படி, மாதம் சுமார் ரூ.17,500 வரை ஊதியம் பெற்று வந்தகௌரவ ஆசிரியர், மாற்றியமைக்கப்பட்ட ஊதிய நிர்ணயத்தின்படி இனிமாதம் சுமார் ரூ.32,200 முதல்ரூ.34,100 வரை பெறுவர். மத்தியஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) முடித்தவர்கள், தேர்வு முடிக்காதவர்கள் எனஇரு வகைகளாக இருக்கும் கௌரவஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர், டிஜிடி(பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்), பிஜிடி (முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்), சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்குஇந்த ஊதிய உயர்வு பொருந்தும். மாற்றியமைக்கப்பட்ட சிடிஇடி ஆசிரியர்களின் புதியமாத ஊதிய விவரம் வருமாறு(அடைப்புக்குறியில் தினப்படி, பழைய மாத ஊதியம்): உதவி ஆசிரியர் - ரூ.32,200 (ரூ.700, ரூ.17,500); டிஜிடிஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800,ரூ.20,000); பிஜிடிஆசிரியர் - ரூ.34,100 (ரூ.900, ரூ.22,500); சிறப்புக்கல்வி ஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800, ரூ.22,000). சிடிஇடிதேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் புதியஊதிய விவரம் வருமாறு: உதவிஆசிரியர் - ரூ.25,000 (ரூ.700, ரூ.17,500); டிஜிடிஆசிரியர் - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000); பிறஆசிரியர்கள் (ஓவியம், உடற்பயிற்சி, நூலகர்) - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000). இதுவரைகெளரவ ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு அளிக்கப்படவில்லை.

இந்த நிலையை மாற்றப்பட்டு இப்போதுஆண்டுக்கு எட்டு நாள்கள் தற்செயல்விடுப்பு (கேஷ்வல் லீவ்) அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசு 2011-ஆம் ஆண்டில் கொண்டுவந்த அனைவருக்கும் கல்விச் சட்டத்தில் மத்தியஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும்"சிடிஇடிட தேர்வை எழுதி தகுதிபெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்தஅவகாசம் கடந்த ஜூலையுடன்  நிறைவடைந்து விட்டது. இவ்வாறு "சிடிஇடி' தேர்வை எழுதாமல் இரண்டாயிரம்கெளரவ ஆசிரியர்கள் தில்லியில் உள்ளனர். சட்டப்படி இதுபோன்ற ஆசிரியர்களைப் பணியில் இருந்து நீக்கவேண்டும். ஆனால், இந்த கௌரவஆசிரியர்கள், "சிடிஇடி' தேர்வை எழுத இருவாய்ப்புகளை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இரு வாய்ப்புகளுக்குள் "சிடிஇடி' தேர்வில் வெற்றி பெறாவிட்டால், அவர்களைபணியில் இருந்து விலக்குவதைத் தவிரவேறு வழி இல்லை என்றார்கேஜரிவால். பேட்டியின் போது துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ்சிசோடியா உடனிருந்தார்

பிறந்த தேதியில் மாற்றமா? பாஸ்போர்ட் விதிகள் தளர்வு !

CCE-4th WEEK MATHS, SCIENCE, SOCIAL- KEY

RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி

CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்தேதியை பற்றியும்,
எத்தனை பக்க அறிக்கைதயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பற்றிய தகவல்கள் (நிதித்துறையின்) இப்பிரிவில் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது.அதன்விவரம் பின்வருமாறு

தருமபுரிமாவட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் தமிழக அரசு
ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழுவின்  செயல்பாடுகளின்விவரம் பற்றி தமிழக அரசின்  நிதித்துறைக்கு 12.09.2016 நாளிட்ட மனுவில் வரிசைஎண் 1 முதல் 9 வரையான தகவல்களைகோரி   RTI 2005இன்  கீழ்கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடிதஎண்.50725/       நிதி(PGC-1)/2016 நாள்:30.09.2016. என்ற கடிததத்தில் RTI 2005இன் 2f விதியை காரணம்காட்டியும் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றி தகவல் வழங்கஇயலாது என பதில் வழங்கிஉள்ளது. (இத்த‌கவல் ஏற்கனவேநமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.)

    இக்குழு    பணிகளை     பதிவு       செய்யும்          போதுIncluding records, Documents, Memos, Opinions, Advices, Circulars, Orders, Reports, Papers, Samples,என்றபெயர்களின் எதேனும் ஒரு வகையில்தான், அக்குழு பதிவு செய்வதுமற்றும் தயார் செய்யும் கருத்துகள்ஆவணங்களாகஅடங்கும் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலே கூறியுள்ள பெயருடையஆவணங்கள் அனைத்தும் & அவற்றோடு தொடர்புடைய தகவல்களையும் RTI 2f விதியின் கீழ் வழங்கலாம் எனஇந்திய அரசின் சட்டத் துறையால், மத்திய அரசின் கெஜட்டில் 21.06.2005 அன்று வெளியிட்ட, 23 பக்கங்களை கொண்ட RTI 2005இன் விதிமுறைகள் அடங்கியதொகுப்பின் 2வது பக்கத்தில் கூறியுள்ளது.அந்த பக்கத்தின் நகலைதங்களுக்கு (நிதித் துறை) இணைத்துள்ளேன். மேலும் இத்தொகுப்பில் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றிய தகவலை வழங்ககூடாது என எந்த ஒருபக்கத்திலும் இல்லை.  அக்குழுஇன்று வரை தயார் செய்துள்ளஅறிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கையை தான் கேட்டுள்ளேன்.

நான் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் RTI 2005 2f இன் படி வழங்ககூடியதாகவே உள்ளது என்பதை தெரிவிக்கிறேன். என்று நிதித் துறைக்கு 25.10.2016 நாளிட்ட  மனுவில்மேல்முறையீடு செய்துள்ளார்.

அம்மேல்முறையீட்டுகடிதத்திற்கு நிதித் துறையின் கடிதஎண்.59145/நிதி (PGC-1)/2016 நாள்:30.11.2016. என்ற கடிதத்தில் இவ்வல்லுநர்குழு இன்று வரை தங்களுக்குள்ளாகவேதலைவர், உறுப்பினர்களுடன் 3 ஆலோசனை கூட்டமும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திடம்3 கருத்து கேட்பு கூட்டமும், அதில்33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி

3097 மனுக்கள்வந்துள்ளது. என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

ALF YEARLY SSLC TAMIL FIRST PAPER & SECOND PAPER- KEY

CCE WORKSHEET -REPORT FORMS

ஜிப்மர் மருத்துவ கல்லூரி முதுநிலை படிப்பு நுழைவுத்தேர்வு

ஜிப்மர் மருத்துவ கல்லூரி முதுநிலை படிப்பு நுழைவுத்தேர்வு
ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, 69 மையங்களில், இன்று நடக்கிறது. காலையில், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு தேர்வுகள் நடக்கின்றன. இந்தியாவில், 17 நகரங்களில் அமைந்துள்ள, 69 தேர்வு மையங்களில், தேர்வு நடக்கிறது. புதுச்சேரியில், 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் நடக்கும் டி.எம்., - எம்.சி.எச்., தேர்வுகள், 9 நகரங்களில், 9 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கு புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் எம்.டி., - எம்.எஸ்., தேர்வுகளுக்கு 26,869 நபர்களும்; டி.எம்., - எம்.சி.எச்., தேர்வுக்கு, 2,287 நபர்களும் விண்ணப்பித்து உள்ளனர். ஜிப்மரில் எம்.டி., - எம்.எஸ்., பிரிவுகளில், 102 இடங்களும், டி.எம்., - எம்.சி.எச்., பிரிவில், 18 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இரண்டு தேர்வுகளின் முடிவுகள் வரும், 18ம் தேதி வெயிடப்படும். கலந்தாய்வுகள் டிசம்பர் மாதம், 21 மற்றும் 28ம் தேதி நடக்கிறது. வகுப்புகள் ஜனவரி மாதம், 2ம் தேதி தொடங்குகிறது. 

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 
இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USEFUL HANDBOOKS TO ALL TEACHERS REGARDING RULES & OFFICEPROCEDURES

Admission Notice Joint Entrance Examination (JEE) Main 2017

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 க்கு பின்னரும் தொடர வாய்ப்பு.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு

புதுச்சேரி,: சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசி னார்.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட் டம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கல்வித் துறை இயக்குனர் குமார் வரவேற்றார்.

அமைச்சர் கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு செயலர் அருண் தேசாய் வாழ்த்தி பேசினர்.முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை. இது ஆசிரியர் களின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.நம்முடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்.
மற்றவர்களின் பிள்ளைத்தான் அரசு பள்ளிகளில் சேர்க்கிறோம். இதுதான் நிதர்சனமான உண்மை. அரசு பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான வசதிகள் உள்ளன. திறமையான ஆசிரியர்களும் உள்ளனர்.கணிப்பொறி ஆய்வகங்களும் உள்ளன.

ஆனால், அவற்றை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.வகுப்புக்கு செல்லும்முன் ஆசிரியர்கள் முன் தயாரிப்புடன் பாடம் எடுக்கச் செல்வதில்லை. முன் தயாரிப்புடன் போனால், மாணவர்களும் ஆர்வமுடன் கற்பார்கள். அகில இந்திய அள வில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது. புதுச்சேரியில் 14 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.கல்வியில் பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் ஆகியவை தரமான கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

அங்கெல்லாம் 10 முதல் 15 சதவீதம் வரை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாகி வருகின்றனர். நாமும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பது முக்கியம்.தேர்வில் 100 சதவீத வெற்றி என்பது சாதனை அல்ல. மாணவர்கள் எதைக் கற்றுக் கொண்டனர் என்பதே முக்கியம். இதுவரை நடந்தவற்றை விட்டுவிட்டு, இனிமேல் கல்வித் தரத்தை மேம்படுத்த பொறுப்புணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால் விருதுகள், பதக்கங்கள் கொடுக்கிறோம்.

மேலும், சிறப்பாக பணியாற்றினால் இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து கூட்டத் தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், 16 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்து பரிந்துரை அளித்தனர். அந்த பரிந்துரைகளில் தேவையாவற்றை அரசு நிறைவேற்றும்.இதேபோன்ற கலந்துரையாடல் கூட்டங்கள், அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.