யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/12/16

டிச.26-ல் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்க தேர்வு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகதொலைதூரக் கல்விஇயக்ககத் தேர்வுகள், டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குகின்றனஎன
பதிவாளர்கே.ஆறுமுகம்அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தேர்வுக்கு பதிவுசெய்துள்ள தேர்வர்கள், அவர்களுக்குரிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் (www.annamalaiuniversity.ac.in)அறிந்துகொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அருகிலுள்ளபல்கலைக்கழக படிப்பு, தகவல் மையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். செய்முறை, வாய்வழிதேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

 தேர்வுகள் நாட்டின்பல்வேறு மையங்களில்நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை(Hall Ticket) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து சனிக்கிழமை (டிச.17) முதல் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.


 மாணவர்கள் தங்களுக்குஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவர். மின்னணுப் பொருள்களைதேர்வு அறைக்குள்எடுத்துச் செல்லஅனுமதி இல்லைஎன்றார் பதிவாளர்கே.ஆறுமுகம்.டிச.26-ல் அண்ணாமலைப்பல்கலை. தொலைதூரக்கல்வி இயக்கதேர்வு தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகதொலைதூரக் கல்விஇயக்ககத் தேர்வுகள், டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குகின்றனஎன பதிவாளர்கே.ஆறுமுகம்அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தேர்வுக்கு பதிவுசெய்துள்ள தேர்வர்கள், அவர்களுக்குரிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் (www.annamalaiuniversity.ac.in)அறிந்துகொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அருகிலுள்ளபல்கலைக்கழக படிப்பு, தகவல் மையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். செய்முறை, வாய்வழிதேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

 தேர்வுகள் நாட்டின்பல்வேறு மையங்களில்நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை(Hall Ticket) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து சனிக்கிழமை (டிச.17) முதல் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.

 மாணவர்கள் தங்களுக்குஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவர். மின்னணுப் பொருள்களைதேர்வு அறைக்குள்எடுத்துச் செல்லஅனுமதி இல்லைஎன்றார் பதிவாளர்கே.ஆறுமுகம்.

SR DIGITIZATION 01.07.2017 முதல் நடைமுறைப்படுத்தப்படும் !

2016-November-B.Ed Result For BHARATHIDHASAN UNIVERSITY

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகளை உணர்ந்த ஒருவரின் உணர்வு பூர்வமான கவிதை

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாம்
இது பாடாய் படுத்திடும்திட்டமாம்!
திட்டம் என்னவென்று தெரியவில்லை-இதில்
எத்தனை அபாயம் என்றுபுரியவில்லை!
ஓய்வூதியம் என்பது எனதுரிமை
ஆனால் உரிமை கோரஇயலவில்லை!
மதில்மேல் பூனையைப் போல

பங்குச் சந்தை முதலீடு!
தனியார் நிறுவன இலாபத்திற்காக
தாரை வார்க்குது அரசாங்கம்!
ஊழியனாகிய எனது விருப்பத்தை
உதறி தள்ளுது அரசாங்கம்
சமூக பாதுகாப்பு இல்லை
இப் புதிய ஓய்வூதியதிட்டத்திலே!
உறவுகள் என்னை கைவிடும்போது
உழைக்கவும் எனக்கு உடலில்தெம்பில்லை!
உடல் உபாதைகளுக்குக் கூட
ஔடதம் வாங்கவும் வழியில்லை!
என் கையில் காசுஇருந்தாலே
என் சமூகம் என்னைமெச்சிடுமே!
வெறுங்கையுடன்(ஓய்வூதியம் இல்லாமல்) இருக்கும் எனக்கு
வீட்டுக்குள்ளே அனுமதியில்லை!
படித்து வாங்கிய பட்டமெல்லாம்
காற்றில் இன்று பறந்ததுவே!
புதிய பட்டம் கிடைக்குதுவேஅது
தண்டச் சோறு என்பதுவே!
ஏன் இந்த நிலைமையென்று
என்னால் கூற இயலுமே
இதற்கெல்லாம் ஒரே காரணம்தான் அது
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்தான்!
ஓன்று கூடுவோம் போராடுவோம்
உடைத்தெரிவோம் CPS திட்டத்தை
இணைந்திடு தோழா!
வென்றிடு தோழா!
இணைவோம்! இணைவோம்!!
இறுதி முடிவு கிடைக்கும்வரை
இணைந்து போராடுவோம்!

இப்படிக்கு
பாதிக்கப்பட்டவர்களில்ஓருவன்
சி.தீர்த்தகிரி M.Sc.,B.Ed.
இ. நி.உ.ஆ., அரூர்ஒன்றியம்

தருமபுரி மாவட்டம்

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS) 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் படி 05.12.2016 முதல் 17.12.2016 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது


குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு !!

உளவுத்துறை அறிக்கைகளை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் மால்வேர் நிறைந்த செயலிகளை முக்கிய பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், இவற்றை பயனர்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் பட்சத்தில் ஹேக்கர்களால் பயனர்களின் வங்கி சார்ந்த அதிமுக்கிய தகவல்களை திருட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog உள்ளிட்ட செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் துவக்கம் முதலே சைபர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து இருக்கின்றன. இத்துடன் இந்திய ராணுவ நடவடிக்கைகளை கன்காணிக்க இது போன்ற செயலிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் கூகுள் SmashApp எனும் செயலியை உடனடியாக தடை செய்திருக்கிறது. இத்துடன் இந்திய ராணுவ வீரர்களையும் இது போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் டிஜிட்டல் வாலட் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சார்ந்த பயன்பாடுகள் அதிகரித்து இருக்கும் போது வெளியிடப்பட்டிருக்கும் இது போன்ற அறிவிப்பு மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் பொது மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருப்பது அவசியமாகி இருக்கிறது...

சத்துணவு ஒதுக்கீடு ஒழுங்காக இல்லை "சனி வந்தாலே சத்துணவு கட்..முட்டையும் இல்லை

தொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு

இந்த வாரத்தில் அதாவது 12.12.2016 முதல் 23.12.2016 வரைக்கும் இரண்டாம் பருவத் தேர்வு,தமிழ் கற்பித்தலில் இரண்டு கட்ட பயிற்சி,19.12.2016 முதல் 22.12.2016 வரை SLAS என்னும் இளம் பிள்ளைகளுக்கு IAS  தேர்வுக்கு நிகரான தேர்வு,14.12.2016 ல் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி 15.12.2016 ல் ஒன்றிய அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,NMMS தேர்வுக்கான விண்ணப்பங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் இப்படி படாதபாடு படுத்துவது சரியா.மனவியல் அடிப்படை செயல்பட வேண்டிய இடம் பள்ளி.பள்ளிகளில் உள்ள பணியை இப்படி அவசர கோலத்தில் செய்ய கட்டாய படுத்தும் நிலையால் என்ன பயன் கிடைக்கும் என்று கூற முடியும்.பள்ளி பணிகளை பொறுத்தமட்டில்  எந்த விடயத்திலும் கோபப்பட கூடாது முடியாது.கல்வி துறையில் மாணவர்களை மட்டும் மனவியல் அடிப்படையில் நடத்த வேண்டும் ஆனால் மாணவர்களை சீர்படுத்தும் ஆசிரியர்கள் மனவியல் நிலைக்கு அப்பார்ப்பட்ட இயந்திரங்களா? இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து அமையுமானால் ஆசிரியர்களில் மன நோயாளிகள் அதிகம் உருவாவது உறுதி. இதைத்தான் கல்வித்துறை விரும்புகிறதா? அவசரமாக எதையாவது செய்தால் தவறாக முடிந்துவிடுகிறது எதை எப்படி செய்வது என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள்....

தொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'?, பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவு.

NEET' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது. 

பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும்.இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும்.இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும்.1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.
'நீட்' தேர்வின் முக்கியத்துவம்:
NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும்.
'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள்:
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் சம்பளம் உயருகிறது:

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், மத்திய அரசுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், 'சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, அரசு பரிசீலித்து வருகிறது; இதற்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவைகள் சட்டத்தில், திருத்தம் செய்து, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு, தற்போது, அனைத்து பிடித்தங்கள் போக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

புதிய பணத்தை கொடுங்க; அப்புறம் எடுங்க'

மக்களிடம் தேங்கியுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்வது அதிகரித்தால் தான், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்' என, நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வது அதிகரித்துள்ளது. இதற்கான காலக்கெடு இம் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்காக, வங்கி களில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும், ஏ.டி.எம்.,களில், ஒரு நாளில் அதிகபட்சம், 2,500 ரூபாயும் மட்டுமே எடுக்க முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிப்பு : இதற்கான கட்டுப்பாடு எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது: 

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடு வதற்கு முன், 200 கோடி எண்ணிக்கை உடைய, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பட்டன.இந்த, நான்கு லட்சம் கோடி ரூபாய் தான், முதலில் புழக் கத்தில் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

ஏ.டி.எம்., மற்றும் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள், புதிய நோட்டுகளை அதிக அளவில் கையில் இருப்பு வைக்கத் துவங்கி யுள்ளனர். தற்போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பணத் தட்டுப்பாடு குறைந்துள்ளது. வங்கிகள், ஏ.டி.எம்.,களில் கூட்டம் குறைந்துள்ளது. 

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் மாற துவங்கி யுள்ளதால், கையில் ரூபாய் நோட்டுகள் வைத்துக் கொள்வது குறைந்துள்ளது. இதனால், புதிய ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் மக்கள் டிபாசிட் செய்து வருகின்றனர். 

தற்போதைய கணக்கின்படி, புழக்கத்தில் விடப் பட்ட, புதிய ரூபாய் நோட்டுகளில், 50 சதவீதம் நோட்டுகள், வங்கிகளில் டிபாசிட் செய்யப் பட்டுள் ளன. இது, 80 சதவீதத்தை தாண்டும் போது தான், 
Advertisement
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப் பதற்கு உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்படும்.
டிபாசிட் அதிகரிக்கும் :

முதல்கட்டமாக, கூட்டுறவு வங்கிகளுக்கும், பின்னர் மற்ற வங்கிகளுக்கும் இந்தக் கட்டுப் பாடு தளர்த்தப்படும். தேவைக்கேற்ப, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி, தீவிர மாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், பணத் தட்டுப்பாடு முழுமையாக குறைந்து, மக்கள் பணத்தை டிபாசிட் செய்வது அதிகரிக் கும். அடுத்த மாத துவக்கத்தில் இருந்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

உங்கள் BP+GP ஐ மட்டும் நிரப்பினால் DA Arrear எவ்வளவு என்று கணக்கீடு செய்துகாட்டும்...

10th 12th PUBLIC EXAM MARCH 2017 TIME TABLE:

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுதேர்வு அட்டவணை:
02.03.17- மொழித்தாள் - 1
03.03.17 - மொழித்தாள் 2
06.03.17- ஆங்கிலம் 1 தாள்
07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள்
10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல்
17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்
21.03.17- இயற்பியல், பொருளாதாரம்
24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்
27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்
அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு துவங்கி நண்பகல் 12 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
08.03.17 - தமிழ் முதல்தாள்
09.03.17 - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- கணிதம்
23.03.17- அறிவியல்
28.03.17- சமூக அறிவியல்
30.03.17- விருப்ப பாடம்

16/12/16

CPS RELATED NEWS:

RTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை.


THANKS: MR.A.JAYAPRAKASH
  தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில் CPSல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு
மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழகஅரசிடம் அரசாணைஇல்லையென நிதித்துறை பதில்
வழங்கி உள்ளது. அதன்விவரம் பின்வருமாறு


பழைய ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம், பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரணமடைந்தால், அந்த ஊழியர்களின்கணவன் (அ) மனைவிக்கு
மாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம், விருப்ப ஓய்வூதியம், இயலாமை
ஓய்வூதியம், ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்,
மற்றும் இரக்க ஓய்வூதியம்என்னும் ஓய்வுபெறும் தன்மைக்குஏற்ப 7 வகையான ஓய்வூதியம் நடைமுறையில் தமிழகஅரசால் வழங்கப்பட்டுவருகிறது.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்ததிரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்க வேண்டுமென, தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளஅரசாணை எண்(ம) நாளைகுறிப்பிடவும்,
மேலும் இந்த அரசாணையின்நகலை வழங்கவும். என்று தமிழகஅரசின் நிதித் துறைக்கு 26.09.2016 நாளிட்ட மனுவில்வரிசை எண்1 முதல் 6 வரையான தகவல்களை கோரி RTI 2005இன்கீழ் கடிதம்அனுப்பினார். நிதித் துறையின் கடித எண்.53857/நிதி(PGC-1)/2016 நாள்:24.10.2016. என்ற கடிதத்தில்மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்குஅரசாணை இல்லைஎன பதில் வழங்கப்பட்டுள்ளது.
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், தமிழகத்தின் அரசு
அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திரஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம்,விருப்ப ஓய்வூதியம், இயலாமைஓய்வூதியம் ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்மற்றும் இரக்கஓய்வூதியம் என்னும் 7 வகையான ஓய்வூதியம் வழங்குவதுதொடர்பாக தமிழகஅரசிடம் அரசாணைஇல்லை.
அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால்அரசாணை பிறப்பிக்கப்படவில்லை
என்பதே உண்மை.

தமிழகம், ஆந்திராவை அதிக புயல்கள் தாக்கும்

இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி ஆந்திரா மற்றும் தமிழகத்தை தாக்கும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிக புயல்கள் உருவாகும் :

வங்கக்கடலில் அடுத்தடுத்து 3 புயல்கள் உருவாகின. இதில், 2 புயல்களும் வலுவிழந்து விட்ட நிலையில் வர்தா புயல் நேற்று முன்தினம் சென்னையை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி ஆந்திரா, தமிழகத்தை தாக்கும் என விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.அலகாபாத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் 2014-ம் ஆண்டு இது தொடர்பான ஆய்வு நடத்தி எர்த் சயின்ஸ் அறிவியல் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளனர். 1891-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 122 ஆண்டுகளுக்கு இந்திய கடல் பகுதியில் ஏற்பட்ட புயல்களை ஆய்வு செய்து அதன்படி இந்த கட்டுரையை எழுதி இருக்கிறார்கள்.

தமிழகம், ஆந்திராவுக்கு ஆபத்து :

அதில், தொழிற்சாலைகளால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கக்கடல் பகுதியில் இனி வெப்ப மண்டல புயல்கள் அதிக அளவில் உருவாகும். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, இந்த புயல்களின் சக்தியும் அதிகரிக்கும் என்று கூறி உள்ளனர். மத்திய எர்த் சயின்ஸ்துறை செயலாளர் மாதவன் ராஜீவன் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்திய கடல் பகுதியில் ஏற்படும் புயலின் வேகம் தீவிர புயலில் இருந்து அதிதீவிர புயலாக மாறி வருகிறது என்று கூறி இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு கட்டுரையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடலின் வெப்பநிலை அதிகரித்து இருப்பதால் புயல் உருவாவதும் இனி அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து உருவாகும் புயல்கள் வர்தா போன்று தமிழகம் மற்றும் ஆந்திராவை பெரிய அளவில் தாக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் போதை பொருளை தடுக்க புதிய திட்டம் தேவை : 6 மாதத்தில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்யார்தி என்பவர் நடத்திவரும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2014ல் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தி, அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி கிடக்கும் மாணவ-மாணவிகள் நலனுக்காக மறுவாழ்வு மையங்களை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.

அதில், ‘‘போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவ-மாணவியருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக, 6 மாதங்களுக்குள் மத்திய அரசு நாடு தழுவிய ஆய்வை நடத்த வேண்டும். மேலும், மாணவ-மாணவியரிடையே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தேசிய அளவிலான ஒரு செயல்திட்டத்தை அந்த காலத்திற்குள் தயாரிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீயவிளைவுகள் தொடர்பான அறிவுரைகளை பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டசெய்திக் குறிப்பு: 
 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுதேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது. பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வு கணினிஅடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி/ எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும். இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.

 'நீட்' தேர்வின் முக்கியத்துவம்:

 NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும்.2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும். 'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள் அகிலஇந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.

தேசிய தேர்வுகள்வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்டமேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசூலில் கறாராக இருக்கும் மாவட்ட கல்வி அதிகாரி !!தினமலர் -டீகடை பெஞ்ச்

கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கூடம் அமைத்த கலெக்டர்!

படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் தவித்த மாணவர்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த்.
கேரள மாநிலம், கோழிக்கோடு கலெக்டராக இருப்பவர் என்.பிரசாந்த். இவர் அங்கு பல்வேறு மக்கள் நல பணிகள் செய்து பொதுமக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், தற்போதும் ஒரு செயல் புரிந்து பாராட்டு பெற்றிருக்கிறார்.

சமீபத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோழிக்கோட்டில் உள்ள மலப்புரம் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் என்.பிரசாந்த், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில், மூடப்பட்ட பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு பள்ளி பாதுகாப்பு குழுவும் உத்தரவாதம் அளித்தது.

அதன்படி, கலெக்டர் அலுவலகத்தின் பெரும் பகுதியை மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கி கொடுத்துள்ளார். மேலும், அந்த பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் தங்களுடைய பணியினை செய்வதற்கான இடத்தையும் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டரின் செலவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து எந்தவொருமானியமும் பெறாமல், பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் கலெக்டர் என்.பிரசாந்த்.ஏற்கனவே, பல்வேறு சமூக பணிகளின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கலெக்டர் என்.பிரசாந்த்துக்கு, தற்போது மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்ததற்காகவும் பாராட்டு குவிகிறது.