- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
10/1/17
மார்ச் 9ம் தேதி துவங்குகிறது சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு
புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, மார்ச், 9ல் துவங்குகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வில், 26 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தலைவர் ஆர்.கே.சதுர்வேதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல், மார்ச், 8ல், முடிகிறது. அதனால், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, மார்ச், 9ல், துவங்குகிறது. பிளஸ் 2 வுக்கு, ஏப்., 29 வரையும், 10ம் வகுப்புக்கு, ஏப்., 10 வரையும் தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பில், 16.67 லட்சம்; பிளஸ் 2வில், 10.98 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடங்களுக்கும் இடையே, போதிய இடைவெளி வழங்கப்பட்டு உள்ளது. விடை திருத்த பணிகள், கணினி தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதால், தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை
திருவண்ணாமலை: ''புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், தமிழக அரசு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும்,'' என, அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி எச்சரிக்கை விடுத்தார்.
திருவண்ணாமலையில், அரசு ஊழியர் சங்கத்தின், 12வது மாநில மாநாடு, 6ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது. மாநாட்டில், அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி பேசியதாவது:தமிழகத்தில், குறைந்த சம்பளத்துடன், 25 ஆண்டுகளாக, கடும் பணிச்சுமையில், மூன்று லட்சம் பகுதி நேர ஊழியர்கள் தவித்து வருகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை ஒழிக்க வேண்டும்; இல்லையேல், தமிழக அரசு பெரும் போராட்டத்தை சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்., 2ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்; மார்ச், 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி; ஏப்ரல், 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படாததால், சிகிச்சைக்கு தவித்து வருகின்றனர். தமிழர்கள், பல்வேறு மாநிலங்களில் உயர்கல்வி படித்து, பிற மாநிலங்களிலும் அரசு பணிகளில் சேர்கின்றனர். இவர்கள் ஓய்வு பெற்ற பின், பூர்வீகமான தமிழகத்தில் குடியேறுகின்றனர்.
'இன்டர் ஸ்டேட் சஸ்பென்ஸ் அக்கவுன்ட்' மூலம், இவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள வங்கி மூலமே, இவர்கள் பணிபுரிந்த மாநில அரசின், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் வேறு மாநிலத்தில், பணியாற்றி ஓய்வு பெற்றதாலும், அந்த மாநில அரசிடம் ஓய்வூதியம் பெறுவதாலும், தமிழக அரசின் எந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலும், சேர்க்கப்படுவதில்லை. இதனால், உயர்சிகிச்சை தேவைப்படும் போது, இவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து, ஓய்வூதியர்கள் கூறியதாவது: நாங்கள் தமிழகத்தில் குடியேறி விட்டதால், பணிபுரிந்த மாநிலத்திடம் ஓய்வூதியம் தவிர்த்து, வேறு எந்த சலுகையும் பெற முடியாது.இது பற்றி நன்கு தெரிந்தும், தமிழக அரசு, எங்களை வேறு மாநில அரசு ஊழியர்களை போன்றே நடத்துகிறது. எங்களை சாதாரண மக்களாக கருதியோ அல்லது அரசு ஓய்வூதியர்களாக கருதியோ சந்தா பிடித்தம் செய்து, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
சென்னை: பி.எப்., எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல, பி.எப்., ஆணையர் சலில் சங்கர், வெளியிட்டுள்ள செய்தி: பி.எப்., திட்டத்தின்கீழ், ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, 1.4.2009 முதல், 31.12.2016 வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த ஊழியர்களை, பி.எப்., திட்டத்தில் சேர்த்து கொள்ள முடியும்; இந்த வாய்ப்பு, இம்மாதம், 1ல் துவங்கி, வரும், மார்ச், 31 வரை மட்டுமே அளிக்கப்படும். இதற்காக, நிறுவனத்தின் பங்கு, ஊழியரின் பங்கு, உரிய வட்டியை, விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஊழியருக்கான சம்பளத்தில் பி.எப்., பிடித்தம் செய்யப்படாவிட்டால், அதை செலுத்த வேண்டியதில்லை. மேலும், ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒரு ரூபாய் வீதம், அபராதக் கட்டணத்தையும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை செலுத்தாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விடுபட்ட ஊழியர்களை சேர்ப்பதால், அவர்களுக்கு பி.எப்., திட்டப் பலன்கள் முழுமையாக கிடைப்பதை, நிறுவனங்கள் உறுதி செய்யலாம்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வுக் குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், விண்ணப்பத்தில் இடம் பெற்ற பகுதிகளுக்கான (காலம்) மதிப்பெண் நிர்ணயிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில், உறுப்பினர்கள் ஹரீஸ் மேத்தா, ராமகிருஷ்ணன் குழு ஈடுபட்டுள்ளது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஜன.,20 கடைசி நாள்.
பிப்.,15க்குள் தேர்வு : சென்னையில் நடந்த குழுவின் இரண்டாவது கூட்டத்தில், வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. விண்ணப்பத்தில் இடம் பெற்ற 13 பகுதிகளுக்கும், அதன் உட்பிரிவிற்கும் மதிப்பெண் நிர்ணயிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 100 மதிப்பெண் எனவும் முடிவு செய்யப்பட்டது. அடுத்த கூட்டத்தை ஜன.,20க்குள் நடத்தி, பிப்., 15க்குள் துணைவேந்தரை தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
விண்ணப்ப சர்ச்சைக்கு முடிவு : துணைவேந்தர் பதவிக்கு இதுவரை, கட்டுரை வடிவில் விண்ணப்பித்தனர்; சிலர், 500 பக்கங்கள் கூட அனுப்புவதால் அதை பரிசீலிக்க சிரமமாக இருந்தது. தற்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், 15 பக்கம் மட்டும் கொண்ட விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முதன்முதலாக மதுரை காமராஜ், அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. 'இந்த விண்ணப்பங்களில் இடம் பெற்ற பகுதிகள் மிக குறைவாக உள்ளன; சிறப்பு தகுதிகளை குறிப்பிட வழியில்லை' என பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: சென்னை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. 'கூடுதல் தகுதிகள் இருந்தால் என கொடுக்கப்பட்ட பகுதியில் அவற்றை நிரப்பலாம்' என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது; இதனால், விண்ணப்பம் தொடர்பான சர்ச்சை தற்போது இல்லை. மேலும், '10 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவம் கட்டாயம்' என்பதால் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி.,க்கு வேலை இல்லை!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும், 14 உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். காலியாக இருந்த, 12 இடங்களில், 11 உறுப்பினர்கள், 2016ல் நியமிக்கப்பட்டனர். இதில், விதிமீறல் இருப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், 11 உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என அறிவித்தது; சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.
இந்த தீர்ப்பால், டி.என்.பி.எஸ்.சி., செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பணி நியமனம் தொடர்பாக, உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தலைவர் மற்றும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்றால் மட்டுமே, கூட்டம் நடத்த முடியும். அதன்படி மொத்தம், 15 பேரில்,
ஐந்து பேர் இருக்க வேண்டும்.ஆனால், தற்போது தலைவர் அருள்மொழி, உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், குப்புசாமி என, மூன்று பேர் மட்டுமே இருப்பதால், ஆணைய கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது..

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 20ல் போராட்டம்: திமுக அறிவிப்பு !!
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 20 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. மாவட்ட
தலைநகரங்களில் இந்த போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்த்துள்ளார்

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு - மத்திய அரசு அறிவிப்பு.
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து விருப்ப விடுமுறையிலிருந்து கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையை மத்திய அரசு சேர்த்துள்ளது.
மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!
*பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிபட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.ஆனால் இந்தப் பட்ஜெட் 2017, மாத சம்பளகாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல காலம் பொறந்தாச்சு..
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நவம்பர் 8ஆம்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அமல்படுத்தியது. அதன் மூலம் சாமாணியர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்பது மட்டும் அல்லாமல் நிதியமைச்சர் அறிவிக்க உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளகாரர்களுக்கு அதிகளவிலான வரிச் சலுகைகள், தளர்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள்அதிகளவில் தெரிகிறது.
2014ஆம் ஆண்டுக்குப் பின் மேலும் வர்த்தகச் சந்தையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் ஆவலுடன் எதிர்பார்க்கும் பட்ஜெட் அறிக்கையாகப் பட்ஜெட்2017உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டில் (இந்தியாவில் மட்டும்) கருப்பு பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளை 80 சதவீதம் அளவிற்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் களையப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மக்களின் வாழ்வை மேம்படுத்து சில திட்டங்கள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி விதிப்பு அளவீடுகள் கடைசியாக மத்திய அரசு வருமான வரி விதிப்புஅளவீடுகளை மாற்றியது 2014-15ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில். இதன் பின் தற்போது மத்திய நிதியமைச்சர் வருமான வரியை குறைக்கத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
புதிய வரி விதிப்பு
இந்நிலையில் சந்தை வல்லுனர்களின்கணிப்பு மற்றும் ஆய்வுகளின் படி தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வரியில்லா வருமான அளவுகளை4 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தலாம் எனத் தெரிவித்துள்ளது. பழைய வரி விதிப்பு கடந்த 2 வருடமாக நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பு அளவுகள் இது.
மூத்த குடிமக்கள் 60 வயது முதல் 80 வயதுடையவர்களுக்குத் தற்போது 3,00,000 வரையில் வரி விதிப்புக் கிடையாது. அதேபோல் 80 வயதை தாண்டியவர்களுக்கு 5,00,000 வரை வருமான வரி கிடையாது. பட்ஜெட் 2017 அறிக்கையில் அதன் அளவுகளை 4,00,000 மற்றும் 6,50,000 லட்சம் தத்தம் அளவுகளை மாற்ற உள்ளதாகத் தெரிகிறது. கொடுப்பனவு மற்றும் சலுகைகள் மாத சம்பளகாரர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் சலுகைகள் அனைத்து பல வருடங்களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தற்போது முழுமையாக மாற்றவும் நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிகிறது. குழந்தைகள் கல்வி மாத சம்பளக்காரர்களுக்குத் தற்போது குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவில் மாதம் 100 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை வரிச் சலுகை பெறலாம். 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன்அளவீடுகளை மாதம் 1,000 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாத 5000 ரூபாய் conveyance allowance பிரிவில் தற்போது மாதமாதம் 1,600 ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை மாதம் 5,000 ரூபாய் வரை உயர்த்ததிட்டமிட்டு வருகிறது நிதியமைச்சகம்.
மருத்துவச் செலவுகள் திரும்பப் பெறுதல் மாத சம்பளகாரர்களுக்கு மருத்துச் செலவு செய்ததைத் திரும்பப் பெற சலுகையின் கீழ் வருடம் 15,000 ரூபாய் அளவிற்குச் சலுகை அளிக்கப்படுகின்றது. அதனை 50,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது. வீட்டு வாடகை மெட்ரோ நகரங்கள் அல்லாத இடங்களில் மாத சம்பளகாரர்களுக்குத் தங்களுடைய வருமானத்தில் 40 சதவீதம் அளவிற்கு வீட்டு வாடகையின் கீழ் வரிச் சலுகைபெறலாம். தற்போது இதன் அளவீடுகளை 50 சதலவீதம் வரை உயர்த்தவும் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.
விடுமுறை பயணக் கொடுப்பனவு இப்பிரிவின் கீழ் இந்தியாவிற்குள் மட்டுமே பயணம் செய்வதற்கு மட்டுமே கொடுப்பனவு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் அளவை வெளிநாடுகளுக்கு வரிவாக்கம் செய்யவும், வருடத்திற்கு 1,00,000 வரையில் வரிச் சலுகை அளிக்கவும் யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இது 4 வருடத்தில் 2 முறை மட்டுமே இச்சலுகையைப் பெற முடியும் எனக் கட்டுப்பாடுகள் வைக்கப்படுகிறது. வீட்டுக் கடன் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் எனப் பிரதமரின் புத்தாண்டு நாள் பேச்சின் வாயிலாகத் தற்போது வீட்டு கடனுக்கு வருடத்திற்கு அளிக்க 2,00,000 ரூபாய் அளவிலான வரி சலுகையை 5,00,000 வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிகிறது.
80சி மேலும் 80சி பிரிவின் கீழ் தற்போது வரிச் சலுகை பெறும் அளவுகள் 1,50,000 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் இதனை 3,00,000 ரூபாய் வரை உயர்த்தவும் ஆலோசனை செய்யப்படு வருவதாகத் தெரிகிறது. பிற திட்டங்கள் மேலும் என்பிஎஸ், 80சிசிடி, ஈபிஎப் அல்லது பிபிஎப் போன்ற பல்வேறு திட்டங்களிலும் வருமானவரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,300 பணியிடங்களுக்கான அறிவிப்பு !!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய
இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 8,300
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துவின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்விற்கான வினாக்கள் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: புதுச்சேரி(8401), சென்னை(8201), கோயம்புத்தூர்(8202), மதுரை(8204), திருச்சிராப்பள்ளி(8206), திருநெல்வேலி(8207)
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 16.04.2017, 30.04.2017 மற்றும் 07.05.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பொங்கல் விடுமுறையை நீக்கியது மத்திய அரசு - தமிழகத்துக்கு தொடர்ந்து விழும் அடி !
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் போற்றி பாதுகாத்து வந்த ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டை ஒரே அறிவிப்பில் பொசுக்கி விட்டனர் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும்.
இதனை தொடர்ந்து காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை பாலாறு பிரச்சனை என அனைத்து நதிநீர் பிரச்சனைகளிலும் தமிழகத்துக்கு தொடர்ந்து வஞ்சனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு அடியாக இந்திய அரசு விடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக மக்களை கொந்தளிக்க செய்யும் இந்த அறிவிப்பில் பொங்கல் விடுமுறை என்பது கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய விடுப்பு பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
உயரதிகாரி விடுமுறை அளிக்க மறுத்தால் பணிக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழர் பாரம்பரிய விளையாட்டு நசுக்கப்பட்ட நிலையில் ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டிருப்பது தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது..

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)