யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/17

காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வுக் குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், விண்ணப்பத்தில் இடம் பெற்ற பகுதிகளுக்கான (காலம்) மதிப்பெண் நிர்ணயிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில், உறுப்பினர்கள் ஹரீஸ் மேத்தா, ராமகிருஷ்ணன் குழு ஈடுபட்டுள்ளது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஜன.,20 கடைசி நாள்.

பிப்.,15க்குள் தேர்வு : சென்னையில் நடந்த குழுவின் இரண்டாவது கூட்டத்தில், வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. விண்ணப்பத்தில் இடம் பெற்ற 13 பகுதிகளுக்கும், அதன் உட்பிரிவிற்கும் மதிப்பெண் நிர்ணயிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 100 மதிப்பெண் எனவும் முடிவு செய்யப்பட்டது. அடுத்த கூட்டத்தை ஜன.,20க்குள் நடத்தி, பிப்., 15க்குள் துணைவேந்தரை தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
விண்ணப்ப சர்ச்சைக்கு முடிவு : துணைவேந்தர் பதவிக்கு இதுவரை, கட்டுரை வடிவில் விண்ணப்பித்தனர்; சிலர், 500 பக்கங்கள் கூட அனுப்புவதால் அதை பரிசீலிக்க சிரமமாக இருந்தது. தற்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், 15 பக்கம் மட்டும் கொண்ட விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முதன்முதலாக மதுரை காமராஜ், அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. 'இந்த விண்ணப்பங்களில் இடம் பெற்ற பகுதிகள் மிக குறைவாக உள்ளன; சிறப்பு தகுதிகளை குறிப்பிட வழியில்லை' என பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: சென்னை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. 'கூடுதல் தகுதிகள் இருந்தால் என கொடுக்கப்பட்ட பகுதியில் அவற்றை நிரப்பலாம்' என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது; இதனால், விண்ணப்பம் தொடர்பான சர்ச்சை தற்போது இல்லை. மேலும், '10 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவம் கட்டாயம்' என்பதால் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக