யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/17

வங்கிக்கு திரும்பிய 14 லட்சம் கோடி!!

செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளில் ரூ.14 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது அரசு எதிர்பார்த்ததைவிட மிகமிக அதிகம் என்றும் அரசு அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகியவற்றை செல்லாதவைகளாக அறிவித்தது. மொத்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவிகித அளவிலான இந்த மதிப்பிழந்த நோட்டுகள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வரையில் வங்கிகளில் செலுத்தப்பட்டன. அரசின் கணிப்புப்படி இந்த ரூ.15.4 லட்சம் கோடி அளவிலான மதிப்பிழந்த நோட்டுகளில் சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு வராது என்றும், இந்த நோட்டுகள் கறுப்புப் பணமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரையில் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. எனவே இன்னும் ரூ.75,000 கோடி மட்டுமே செலுத்தப்படாமல் உள்ளது. இது அரசு கணித்திருந்த தொகையைவிட (கறுப்புப் பணம்) மிகமிகக் குறைவாகும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து மதிப்பிழந்த நோட்டுகளின் டெபாசிட் அளவு குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக