யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/17

தி இந்து: தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

அமைச்சர்களின் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

எப்படி வந்தது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.

இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே

தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.

தமிழகத்தால் முடியும்

பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.

விருப்பம் இல்லையா?

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.

புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.

சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.

2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன

இது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது. இதில் 16,67,673 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இதனை 10, 98, 420 பேர் எழுதுகின்றனர்.

,750 pp வழக்கு வரும் புதன்கிழமை 11.01.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது ...

மார்ச் 9ம் தேதி துவங்குகிறது சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு

புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, மார்ச், 9ல் துவங்குகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வில், 26 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தலைவர் ஆர்.கே.சதுர்வேதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல், மார்ச், 8ல், முடிகிறது. அதனால், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, மார்ச், 9ல், துவங்குகிறது. பிளஸ் 2 வுக்கு, ஏப்., 29 வரையும், 10ம் வகுப்புக்கு, ஏப்., 10 வரையும் தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பில், 16.67 லட்சம்; பிளஸ் 2வில், 10.98 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடங்களுக்கும் இடையே, போதிய இடைவெளி வழங்கப்பட்டு உள்ளது. விடை திருத்த பணிகள், கணினி தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதால், தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை

திருவண்ணாமலை: ''புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், தமிழக அரசு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும்,'' என, அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி எச்சரிக்கை விடுத்தார்.

திருவண்ணாமலையில், அரசு ஊழியர் சங்கத்தின், 12வது மாநில மாநாடு, 6ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது. மாநாட்டில், அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி பேசியதாவது:தமிழகத்தில், குறைந்த சம்பளத்துடன், 25 ஆண்டுகளாக, கடும் பணிச்சுமையில், மூன்று லட்சம் பகுதி நேர ஊழியர்கள் தவித்து வருகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை ஒழிக்க வேண்டும்; இல்லையேல், தமிழக அரசு பெரும் போராட்டத்தை சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார். 
முன்னதாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்., 2ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்; மார்ச், 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி; ஏப்ரல், 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படாததால், சிகிச்சைக்கு தவித்து வருகின்றனர். தமிழர்கள், பல்வேறு மாநிலங்களில் உயர்கல்வி படித்து, பிற மாநிலங்களிலும் அரசு பணிகளில் சேர்கின்றனர். இவர்கள் ஓய்வு பெற்ற பின், பூர்வீகமான தமிழகத்தில் குடியேறுகின்றனர்.
'இன்டர் ஸ்டேட் சஸ்பென்ஸ் அக்கவுன்ட்' மூலம், இவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள வங்கி மூலமே, இவர்கள் பணிபுரிந்த மாநில அரசின், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் வேறு மாநிலத்தில், பணியாற்றி ஓய்வு பெற்றதாலும், அந்த மாநில அரசிடம் ஓய்வூதியம் பெறுவதாலும், தமிழக அரசின் எந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலும், சேர்க்கப்படுவதில்லை. இதனால், உயர்சிகிச்சை தேவைப்படும் போது, இவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து, ஓய்வூதியர்கள் கூறியதாவது: நாங்கள் தமிழகத்தில் குடியேறி விட்டதால், பணிபுரிந்த மாநிலத்திடம் ஓய்வூதியம் தவிர்த்து, வேறு எந்த சலுகையும் பெற முடியாது.இது பற்றி நன்கு தெரிந்தும், தமிழக அரசு, எங்களை வேறு மாநில அரசு ஊழியர்களை போன்றே நடத்துகிறது. எங்களை சாதாரண மக்களாக கருதியோ அல்லது அரசு ஓய்வூதியர்களாக கருதியோ சந்தா பிடித்தம் செய்து, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு

சென்னை: பி.எப்., எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல, பி.எப்., ஆணையர் சலில் சங்கர், வெளியிட்டுள்ள செய்தி: பி.எப்., திட்டத்தின்கீழ், ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, 1.4.2009 முதல், 31.12.2016 வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த ஊழியர்களை, பி.எப்., திட்டத்தில் சேர்த்து கொள்ள முடியும்; இந்த வாய்ப்பு, இம்மாதம், 1ல் துவங்கி, வரும், மார்ச், 31 வரை மட்டுமே அளிக்கப்படும். இதற்காக, நிறுவனத்தின் பங்கு, ஊழியரின் பங்கு, உரிய வட்டியை, விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஊழியருக்கான சம்பளத்தில் பி.எப்., பிடித்தம் செய்யப்படாவிட்டால், அதை செலுத்த வேண்டியதில்லை. மேலும், ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒரு ரூபாய் வீதம், அபராதக் கட்டணத்தையும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை செலுத்தாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விடுபட்ட ஊழியர்களை சேர்ப்பதால், அவர்களுக்கு பி.எப்., திட்டப் பலன்கள் முழுமையாக கிடைப்பதை, நிறுவனங்கள் உறுதி செய்யலாம்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வுக் குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், விண்ணப்பத்தில் இடம் பெற்ற பகுதிகளுக்கான (காலம்) மதிப்பெண் நிர்ணயிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில், உறுப்பினர்கள் ஹரீஸ் மேத்தா, ராமகிருஷ்ணன் குழு ஈடுபட்டுள்ளது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஜன.,20 கடைசி நாள்.

பிப்.,15க்குள் தேர்வு : சென்னையில் நடந்த குழுவின் இரண்டாவது கூட்டத்தில், வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. விண்ணப்பத்தில் இடம் பெற்ற 13 பகுதிகளுக்கும், அதன் உட்பிரிவிற்கும் மதிப்பெண் நிர்ணயிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 100 மதிப்பெண் எனவும் முடிவு செய்யப்பட்டது. அடுத்த கூட்டத்தை ஜன.,20க்குள் நடத்தி, பிப்., 15க்குள் துணைவேந்தரை தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
விண்ணப்ப சர்ச்சைக்கு முடிவு : துணைவேந்தர் பதவிக்கு இதுவரை, கட்டுரை வடிவில் விண்ணப்பித்தனர்; சிலர், 500 பக்கங்கள் கூட அனுப்புவதால் அதை பரிசீலிக்க சிரமமாக இருந்தது. தற்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், 15 பக்கம் மட்டும் கொண்ட விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முதன்முதலாக மதுரை காமராஜ், அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. 'இந்த விண்ணப்பங்களில் இடம் பெற்ற பகுதிகள் மிக குறைவாக உள்ளன; சிறப்பு தகுதிகளை குறிப்பிட வழியில்லை' என பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: சென்னை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. 'கூடுதல் தகுதிகள் இருந்தால் என கொடுக்கப்பட்ட பகுதியில் அவற்றை நிரப்பலாம்' என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது; இதனால், விண்ணப்பம் தொடர்பான சர்ச்சை தற்போது இல்லை. மேலும், '10 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவம் கட்டாயம்' என்பதால் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி.,க்கு வேலை இல்லை!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும், 14 உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். காலியாக இருந்த, 12 இடங்களில், 11 உறுப்பினர்கள், 2016ல் நியமிக்கப்பட்டனர். இதில், விதிமீறல் இருப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், 11 உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என அறிவித்தது; சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

இந்த தீர்ப்பால், டி.என்.பி.எஸ்.சி., செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பணி நியமனம் தொடர்பாக, உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தலைவர் மற்றும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்றால் மட்டுமே, கூட்டம் நடத்த முடியும். அதன்படி மொத்தம், 15 பேரில், 
ஐந்து பேர் இருக்க வேண்டும்.ஆனால், தற்போது தலைவர் அருள்மொழி, உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், குப்புசாமி என, மூன்று பேர் மட்டுமே இருப்பதால், ஆணைய கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது..

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 20ல் போராட்டம்: திமுக அறிவிப்பு !!

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 20 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. மாவட்ட
தலைநகரங்களில் இந்த போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்த்துள்ளார்

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு - மத்திய அரசு அறிவிப்பு.

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக கட்டாய      விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து விருப்ப விடுமுறையிலிருந்து கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையை மத்திய அரசு சேர்த்துள்ளது.

மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!

*பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிபட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.ஆனால் இந்தப் பட்ஜெட் 2017, மாத சம்பளகாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல காலம் பொறந்தாச்சு..


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நவம்பர் 8ஆம்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அமல்படுத்தியது. அதன் மூலம் சாமாணியர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்பது மட்டும் அல்லாமல் நிதியமைச்சர் அறிவிக்க உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளகாரர்களுக்கு அதிகளவிலான வரிச் சலுகைகள், தளர்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள்அதிகளவில் தெரிகிறது.

2014ஆம் ஆண்டுக்குப் பின் மேலும் வர்த்தகச் சந்தையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் ஆவலுடன் எதிர்பார்க்கும் பட்ஜெட் அறிக்கையாகப் பட்ஜெட்2017உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டில் (இந்தியாவில் மட்டும்) கருப்பு பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளை 80 சதவீதம் அளவிற்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் களையப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மக்களின் வாழ்வை மேம்படுத்து சில திட்டங்கள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   வருமான வரி விதிப்பு அளவீடுகள் கடைசியாக மத்திய அரசு வருமான வரி விதிப்புஅளவீடுகளை மாற்றியது 2014-15ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில். இதன் பின் தற்போது மத்திய நிதியமைச்சர் வருமான வரியை குறைக்கத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

புதிய வரி விதிப்பு

இந்நிலையில் சந்தை வல்லுனர்களின்கணிப்பு மற்றும் ஆய்வுகளின் படி தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வரியில்லா வருமான அளவுகளை4 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தலாம் எனத் தெரிவித்துள்ளது. பழைய வரி விதிப்பு கடந்த 2 வருடமாக நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பு அளவுகள் இது.

மூத்த குடிமக்கள் 60 வயது முதல் 80 வயதுடையவர்களுக்குத் தற்போது 3,00,000 வரையில் வரி விதிப்புக் கிடையாது. அதேபோல் 80 வயதை தாண்டியவர்களுக்கு 5,00,000 வரை வருமான வரி கிடையாது. பட்ஜெட் 2017 அறிக்கையில் அதன் அளவுகளை 4,00,000 மற்றும் 6,50,000 லட்சம் தத்தம் அளவுகளை மாற்ற உள்ளதாகத் தெரிகிறது.   கொடுப்பனவு மற்றும் சலுகைகள் மாத சம்பளகாரர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் சலுகைகள் அனைத்து பல வருடங்களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனைத் தற்போது முழுமையாக மாற்றவும் நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிகிறது. குழந்தைகள் கல்வி மாத சம்பளக்காரர்களுக்குத் தற்போது குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவில் மாதம் 100 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை வரிச் சலுகை பெறலாம். 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன்அளவீடுகளை மாதம் 1,000 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாத 5000 ரூபாய் conveyance allowance பிரிவில் தற்போது மாதமாதம் 1,600 ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை மாதம் 5,000 ரூபாய் வரை உயர்த்ததிட்டமிட்டு வருகிறது நிதியமைச்சகம்.

மருத்துவச் செலவுகள் திரும்பப் பெறுதல் மாத சம்பளகாரர்களுக்கு மருத்துச் செலவு செய்ததைத் திரும்பப் பெற சலுகையின் கீழ் வருடம் 15,000 ரூபாய் அளவிற்குச் சலுகை அளிக்கப்படுகின்றது. அதனை 50,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது.     வீட்டு வாடகை மெட்ரோ நகரங்கள் அல்லாத இடங்களில் மாத சம்பளகாரர்களுக்குத் தங்களுடைய வருமானத்தில் 40 சதவீதம் அளவிற்கு வீட்டு வாடகையின் கீழ் வரிச் சலுகைபெறலாம். தற்போது இதன் அளவீடுகளை 50 சதலவீதம் வரை உயர்த்தவும் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது. 

விடுமுறை பயணக் கொடுப்பனவு இப்பிரிவின் கீழ் இந்தியாவிற்குள் மட்டுமே பயணம் செய்வதற்கு மட்டுமே கொடுப்பனவு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் அளவை வெளிநாடுகளுக்கு வரிவாக்கம் செய்யவும், வருடத்திற்கு 1,00,000 வரையில் வரிச் சலுகை அளிக்கவும் யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் இது 4 வருடத்தில் 2 முறை மட்டுமே இச்சலுகையைப் பெற முடியும் எனக் கட்டுப்பாடுகள் வைக்கப்படுகிறது.   வீட்டுக் கடன் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் எனப் பிரதமரின் புத்தாண்டு நாள் பேச்சின் வாயிலாகத் தற்போது வீட்டு கடனுக்கு வருடத்திற்கு அளிக்க 2,00,000 ரூபாய் அளவிலான வரி சலுகையை 5,00,000 வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிகிறது.

80சி மேலும் 80சி பிரிவின் கீழ் தற்போது வரிச் சலுகை பெறும் அளவுகள் 1,50,000 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் இதனை 3,00,000 ரூபாய் வரை உயர்த்தவும் ஆலோசனை செய்யப்படு வருவதாகத் தெரிகிறது. பிற திட்டங்கள் மேலும் என்பிஎஸ், 80சிசிடி, ஈபிஎப் அல்லது பிபிஎப் போன்ற பல்வேறு திட்டங்களிலும் வருமானவரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர்

இறைவன் தந்த வாழ்க்கையில்

உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல

எப்படி இருக்க வேண்டும்

ஏஏ.சி காற்று நல்லதா

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்

கணவன் மனைவி

கழுகிற்கும் உந்துதல் அவசியமே