யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/17

EMIS மற்றும் AADHAR பதிவு பற்றி தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலக மீளாய்வு கூட்டத்தில் கூறப்பட்ட விபரங்கள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை!!

அந்த பணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம் கடிதம் அனுப்பினார்.



இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும். ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்து வேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.

நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !!

இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பணம் எடுப்பதற்கான உச்ச வரம்ப்பை முழுவதுமாக நீக்க கோரியும், வங்கிகள் தனியார் மயமாக்கும் நடவடிக்கை முடிவை கைவிட 
கோரியும்,பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது..

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

எம்.பி.ஏ., - எம்.இ., உள்ளிட்ட, இன்ஜி., படிப்புகளுக்கான, 'டான்செட்' தேர்வுக்கு, பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற படிப்புகளில், வரும் கல்வி ஆண்டில் சேர விரும்புவோர், 'டான்செட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான, இத்தேர்வுக்கு, ஜன., 29ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. பிப்., 20 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ., - எம்.பி.ஏ.,வுக்கு, மார்ச், 25லும், மற்ற படிப்புகளுக்கு, மார்ச், 26லும் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

பிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவிப்பு:
வரும் மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, ஜன., 25 முதல், 29 வரை, பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்படுகிறது. தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா?

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது.

அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்தியஅரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்."

சி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 
தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்விஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன.
இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ.,யில் இணைய விரும்பும் பள்ளிகளிடம், ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 2 முதல், துவங்கி உள்ளது. 'பள்ளிகள், http://cbseaff.nic.in என்றஇணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். ஜூன், 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது.

வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், கல்வி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க, அரசு பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. 
பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க, பள்ளிக்கல்வித் துறையிலும், கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திலும், கல்வி கட்டண கமிட்டிகள் செயல்படுகின்றன.இந்த கமிட்டிகள், பள்ளி, கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு,மாணவர் எண்ணிக்கை, பாடத்திட்டம், கூடுதல் வசதிகள் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கிறது. வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், தற்போதுள்ளதை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கான, கட்டண நிர்ணய பணி துவங்கி உள்ளது.

அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், முதுநிலை அறிவியல் படிப்பு நடத்தும் கலை, அறிவியல் கல்லுாரிகள், தங்கள் விண்ணப்பங்களை, பிப்., 28க்குள் அனுப்புமாறு, சுயநிதி கல்லுாரிகள் கட்டண நிர்ணய கமிட்டி அறிவித்துள்ளது. 'புதிய கட்டணம், மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்' என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: அமைச்சர் பாண்டியராஜன்

வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர் பேசியது: எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசு மீண்டும் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் குறுக்கிட்டுக் கூறியது: வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பாடத்திட்டத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்றார்.

997 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 997 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கடலூர்
 மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 400 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 597 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்திசெய்திட பிப்.1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இந்தப் பணியிடங்கள் அனைத்துக்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர்.  

 சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சிகளில் இனச் சுழற்சி விவரம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது வரம்பு 40-க்கு மிகாமலும், கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
 பழங்குடியினருக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி போதுமானது. சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது உச்ச வரம்பு 21-40. கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி போதுமானது.
 பழங்குடியினர் என்றால் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேற்கண்ட இரு பணியிடத்துக்கும் விண்ணப்பிப்போரது இருப்பிடம் காலிப்பணியிடத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.
 எனவே, தகுந்த சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

TET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கணிதத்தை எப்படிப் படிக்கலாம்?

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகும் வாசக நண்பர்களே! இந்தப் பதிவில் கணிதப் பாடத்தை நாம் எவ்வாறு படிக்க வேண்டும் என்பதை காண்போம்!


மொழி, சமூகம், அறிவியல், பொருளாதாரம் என எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான புத்தகங்களைப் படித்தாலோ, ஒருவரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டாலோ நமக்குத் தேவையான தகவலைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், கணிதத்தை அப்படித் தெரிந்துகொள்ள முடியாது.

தொடர்மொழி

உதாரணமாக, 8-ம் வகுப்பு அறிவியலையோ, சமூக அறிவியலையோ புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், 8-ம் வகுப்புக் கணிதத்தைத் தெரிந்துகொள்வதற்காக நேரடியாகப் படித்தால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு முன்பு 7-ம் வகுப்பு வரை உள்ள கணிதப் புத்தகங்களைப் படித்திருந்தால் மட்டுமே 8-ம் வகுப்புக்கான கணிதப் புத்தகம் புரியும். ஏனெனில், 7-ம் வகுப்பு வரை படித்த கணிதத்தின் தொடர்ச்சியே 8-ம் வகுப்பில் தொடரும். எனவே, கணிதத்தை ஒரு தொடர்மொழி (Sequential Language) என அழைக்கலாம்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான் நாம் 9-ம் வகுப்பு படிக்கும்போதும், 11-ம் வகுப்பு படிக்கும்போதும் அதைப் படிக்காமல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களை நேரடியாகப் படிக்க மாணவர்களை வற்புறுத்துகிறோம். இதனால்தான் அவர்கள் மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவரால்கூடக் கணிதத்தில் அதிக மதிப்பெண்களை வாங்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு தொடர்மொழி என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
பள்ளியில், குறிப்பாக 10-ம் வகுப்பில் 100 க்கு 100 எடுக்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சிகூடப் பெற முடியவில்லை. 12-ம் வகுப்பில் சிறப்பாக மதிப்பெண் பெற்றவர்களால் கல்லூரி வரும்போது குறைந்தபட்ச மதிப்பெண்கள் கூட எடுக்க முடியவில்லை.
திடீரென்று மாணவர்கள் எதிர்கொள்ளும் கணிதப் பாடங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளிவிடுகின்றன.

கணிதம் தனித்திறன்

கணிதம் கற்பது மற்ற பாடங்களைக் கற்பது போன்று அல்ல. இதற்கென்று வித்தியாசமான கற்கும் திறன் தேவைப்படுகிறது. மற்ற பாடங்களுக்கு அவற்றுக்கான புத்தகங்களைப் படித்து, புரிந்துகொண்டு பின்பு தேர்வில் எழுதினாலே போதும். ஆனால், கணிதத்தில் வெற்றிபெற இன்னும் சில உத்திகளைக் கையாள வேண்டும்.
கணிதம் ஒரு வேற்று மொழி போன்றது. முக்கோணவியல் ஒரு மொழி; அதில் Sin ,Cos போன்றவை மொழியின் புது வார்த்தைகள். இந்தப் புது வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளாமல், மொழியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு நிலைகளைத் தெரிந்துகொண்டாலே போதும், நீங்கள் கணிதத்தில் சிறந்து விளங்கலாம்.
1. புரிந்துகொள்ளுதல்
2. புரிந்துகொண்டதை வெளிப்படுத்துதல்
3. கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துதல்
4. மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தல்
உதாரணத்துக்குச் சிலவற்றை பார்க்கலாம்.

இமயமலையைப் பற்றிப் படிக்கிறோம், அதன் நீளம், உயரம் முதலான அதன் தன்மைகளைத் தெரிந்துகொள்கிறோம். பின்பு தேர்வில் மீண்டும் நினைவுகூர்ந்து எழுதுகிறோம். நீங்கள் இமயமலையைப் பற்றிப் படித்தது உன்மையா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கணிதப் பாடத்தில் நீங்கள் மேற்கண்ட முறையில் தேர்ச்சி பெற முடியாது.

பயன்படுத்தும் திறன் இல்லை யெனில், அதனைக் கணிதத்துக்கான அறிவாகச் சொல்ல முடியாது.
இசை, ஓவியம், பிற மொழிகளைக் கற்றல் ஆகியவை போன்றுதான் கணிதமும் ஒரு தனித்திறன்.

நீட் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப்படிப்பு: சட்டப்பேரவையில் இன்று சட்டமுன்முடிவு

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) இல்லாத மருத்துவப் படிப்புகளுக்கு வழிவகை செய்யும் சட்டமுன்முடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக "நீட்' தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக "நீட்' தேர்வை எழுத வேண்டும்.

இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு நீட் (NEET) நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்முடிவை தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது.

கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு துணைசெய்யும் வகையில் பழைய முறையையே பின்பற்றி மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இந்த சட்ட முன்முடிவை தாக்கல் செய்கிறார். பின்னர், இந்த சட்ட முன்முடிவை அரசு தாக்கல் செய்வதற்கான காரணம் விளக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இது பற்றிய விவாதமும் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

புதுவை மாணவர்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரியப் பாடப் பிரிவுகளைப் படிப்பதால் "நீட்' தகுதித் தேர்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால்தான்,  "நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதல்வர் வி.நாராயணசாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNTET நிபந்தனை - பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா..?

RTE - Act ல்  சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழுவிலக்கு எதிர்பார்ப்பு.

TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வுகிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசு விதிகளின் அடிப்படையில் 23/08/2010க்குப்பிறகு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்இன்றும் காத்துக் கொண்டு உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நீதி மன்ற வழக்குகள் காரணமாகதமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 23/08/2010க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம்பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை மாணாக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு மூலம்தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டிக் கொண்டு உள்ளனர்.ஆயினும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில்விரைவில் ஒரு நல்ல விடியல் கிடைக்கும் என இன்றும் காத்துக் கொண்டுஇருக்கின்றனர்.

காரணம் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வெளிவந்த நாள் ஆகஸ்டு 23(2010)தமிழகத்தில் 5 ஆண்டுகள் நிபந்தனை அடிப்படையில்தமிழகத்தில் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு இந்தவகை ஆசிரியர்களின்நிலையும் பணியும்....???( கேள்விக்குறி )இதனைகடந்த பல நாட்களாக பல ஊடகங்கள் மற்றும் கல்வி சார்ந்த இணையதளங்கள்நினைவுபடுத்தி வருகின்றன. 23/08/2010 க்குப் பிறகுகடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினைதந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்களுக்கு இன்றும் ஆசிரியர் தகுதித் தேர்வைக்காரணம் காட்டி நியாயமாக கிடைக்க வேண்டிய பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்இன்றுவரை பணியாற்றி வருகின்றனர்.தமிழகத்தில்பல கல்வி மாவட்டங்களில் இதுவரை கொடுக்கப்பட்ட ஒருசில சலுகைகளும் முன்னறிவிப்புஇன்றி நிறுத்தப்பட்டுள்ளன ...ஒரு சில ஆசிரியர்களுக்கு... இன்று வரை

* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்புகள் இல்லை.₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒருசில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்தஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.

தமிழக அரசு கருணை உள்ளத்தோடு, இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும்நிலையில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்துமுழு விலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.இவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்த கொள்கைமுடிவில் மறு பரிசீலனை செய்து அரசு விதிமுறைகளின்படி முறையே பணியில் உள்ள இந்தபட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து,ஒரு அரசாணைபிறப்பிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக கல்வித் துறை அமைச்சரை நேரில்சந்தித்து மனு கொடுத்து இருந்தனர்.முதன்மை அமைச்சர்களின் மேலான கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

2016 ஜுலை ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில்நடந்த சட்ட மன்றக் கூட்டத் தொடரில் கல்வித் துறை சம்மந்தமான அறிவிப்புகளில்இந்த பணியில் உள்ள நிபந்தனை ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழு விலக்கு தந்துஅரசாணை வெளிவரும் என எதிர் பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்களுக்கும்காத்து கொண்டு இருந்தனர்.அதற்கான அறிவிப்பு வராத நிலையிலும் கூட விரைவில் நல்ல முடிவு வரும் என்றஏக்கத்தில் நாட்களை எண்ணிக்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசின் கல்வித் துறை அரசாணை 181 ன் அடிப்படையில் எதிர் வரும்TNTETஅறிவிப்பு தினத்திற்கு முன்பு இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின்பிரச்சினைகளுக்கு தீர்வாக  TET லிருந்து பணியில் உள்ள பட்டதாரிஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க தமிழக அரசு முன் வந்தால் இந்த சிக்கலானசூழலில் உள்ள  ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனபல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசிடம் கோரிக்கையை வைக்கின்றனர்.இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின் வேண்டுதல்களை தமிழக அரசு தீர்த்துவைக்கும்நிலையில்  பல நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரம்பாதுகாக்கப்படும் என்பது உண்மை.

நெல்லை மாவட்டத்தில் 1669 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு 465 பேர் பள்ளியில் சேர்ப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி செல்லாத 1669 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 465 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.


குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இப்பேரணியை வ.உ.சி. மைதானத்தில்
ஆட்சியர் மு. கருணாகரன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியது: 14 வயதுள்ள குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது. 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2015-16 ஆம் ஆண்டில் 1669 குழந்தைகள் பள்ளி செல்லாத குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை சிறப்பு பயிற்சி மையங்களிலும், முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் 465 குழந்தைகள் 15 இடங்களில் நடைபெறும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வில் பல்வேறு இடங்களில் பேப்பர் பொறுக்குதல், பிச்சை எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட 32 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 10 குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 8 குழந்தைகளை குழந்தைகள் நலக்குழுவிடமும், 4 குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார் அவர். பேரணி பிரதானச் சாலை, தெற்கு பிரதான வீதி வழியாக இக்னேசியஸ் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் இக்னேசியஸ் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 400 மாணவிகள் பங்கேற்றனர்.

பேரணியில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், தொழிலாளர்துறை இணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் ஹேமலதா, தொழிலாளர் ஆய்வாளர் பு. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

TNTET- 2017:ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல் விநியோகம் செய்யப்படலாம்?

TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. 
இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் டிஆர்பி அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெள்ளிக்கி அன்று காலை 11 மணியவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிர்யர் தகுதித் தேர்வு 2017:

- TNTET 2017 தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறலாம்.
தேர்வுகள்:
- தாள் I - 29.04.2017
- தாள் II - 30.04.2017
- தாள்  I மற்றும் தாள் IIக்கான தனித்தனியான விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.
- மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் 15.02.2017 அன்று முதல் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கடந்த தேர்வை போலவே இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.
- மாவட்ட அளவில் இப்பணிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்குவார்.
- விண்ணப்பங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும். பிப்ரவரி மாதம் இறுதி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
- ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
- அதிகபட்சமாக 7 லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்ப்பு.
- தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4 ஆயிரம் மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
- தேர்வு பணியில் ஏறத்தாழ 40 ஆசிரியர்கள் பன்படுத்தப்படலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று அதற்கான ரசீது வழங்க மாவட்ட கல்வி அலுவலகத்தில் 13 குழுக்கள் (தாள் 1க்கு 6 குழுக்களாகவும், தாள் 2க்கு 7 குழுக்களாக அமைத்து செயல்படும். தேவைப்பட்டால் குழுக்களின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படலாம்.
- விண்ணப்பங்கள் விற்கப்படும் இறுதி தேதி: 08.03.2017
- நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக  கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 
 இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டம் 2014ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதித்தது ஏன். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க மத்திய அரசு முடிவு.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இலவச வைபை ஹாட்ஸ்பாட் வழங்க திட்டமிட்டுள்ளது.

அதன் படி சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. 
 இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கென இண்டர்நெட் வழங்க சிறப்பு டவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.

இதனை பயன்படுத்தி கிராம வாசிகள் தங்களது மொபைல் போன்களில் இண்டர்நெட் வசதியை பெற முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் வில்லேஜ் திட்டம் சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. 

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து மத்திய அரசும் இலவச வைபை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

NEET EXAM - மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு

மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 80 இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. நீட் தேர்வு எழுதுவோர்  இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நீட் தேர்வு எழுதாமல் பழைய முறைப்படி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வழிவகை செய்யும் சட்டமுன்வடிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

31/1/17

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும் -முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான “டான் செட்” பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துறைசார் பொறியியல் கல் லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான். எம்.ஆர்க். இடங்கள் “டான்செட்” பொதுநுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 2017-18-ம் கல்வி ஆண்டில் எம்சிஏ, எம்பிஏ படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25-ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான்.

 படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியும் நடைபெற உள்ளன.இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் இணைய தளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஹால்டிக்கெட்டையும் இணையதளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்ய வேண்டும்.