யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/17

நெல்லை மாவட்டத்தில் 1669 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு 465 பேர் பள்ளியில் சேர்ப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி செல்லாத 1669 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 465 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.


குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இப்பேரணியை வ.உ.சி. மைதானத்தில்
ஆட்சியர் மு. கருணாகரன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியது: 14 வயதுள்ள குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது. 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2015-16 ஆம் ஆண்டில் 1669 குழந்தைகள் பள்ளி செல்லாத குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை சிறப்பு பயிற்சி மையங்களிலும், முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் 465 குழந்தைகள் 15 இடங்களில் நடைபெறும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வில் பல்வேறு இடங்களில் பேப்பர் பொறுக்குதல், பிச்சை எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட 32 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 10 குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 8 குழந்தைகளை குழந்தைகள் நலக்குழுவிடமும், 4 குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார் அவர். பேரணி பிரதானச் சாலை, தெற்கு பிரதான வீதி வழியாக இக்னேசியஸ் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் இக்னேசியஸ் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 400 மாணவிகள் பங்கேற்றனர்.

பேரணியில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், தொழிலாளர்துறை இணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் ஹேமலதா, தொழிலாளர் ஆய்வாளர் பு. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக