யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/17

997 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 997 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கடலூர்
 மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 400 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 597 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்திசெய்திட பிப்.1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இந்தப் பணியிடங்கள் அனைத்துக்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர்.  

 சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சிகளில் இனச் சுழற்சி விவரம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது வரம்பு 40-க்கு மிகாமலும், கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
 பழங்குடியினருக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி போதுமானது. சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது உச்ச வரம்பு 21-40. கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி போதுமானது.
 பழங்குடியினர் என்றால் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேற்கண்ட இரு பணியிடத்துக்கும் விண்ணப்பிப்போரது இருப்பிடம் காலிப்பணியிடத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.
 எனவே, தகுந்த சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக