சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான சஞ்சாய் கிஷன் கவுல், உச்சநீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு, பிரிவு உபச்சார விழா சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது.
அவ்விழாவில், அவர் பேசியதாவது: என் தாய் வீட்டுக்கு அடுத்தபடியாக சென்னைதான் எனது இரண்டாவது தாய்வீடு என பெருமிதத்துடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், துணைத்தலைவர் அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவி டி.பிரசன்னா, மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பதிவாளர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தலைமை நீதியரசரைப் பாராட்டி அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி பேசினார். இதையடுத்து, தலைமை நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது: தமிழர்களின் பண்பாடு தனித்துவம் மிக்கது. தமிழர்களின் வீரம், அன்பு, மானம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானது. நீதிமன்றம் மக்களுக்கானது அது சாமானிய மக்களிடமும் நட்புடன் செயல்பட வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களை வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா முடிந்தபின் நிருபர்களிடம் கூறுகையில், சிறந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளுடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இங்குள்ள மக்கள் என்மீது காட்டிய அன்பு மற்றும் அனைவரின் ஒத்துழைப்புமே நான் சிலவற்றை சாதிக்க காரணமாக இருந்தது. இந்த நீதிமன்றத்தின் பாரம்பரியம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று நம்புகிறேன்.
ஸ்ரீநகரை பிறப்பிடமாகக் கொண்ட நீதியரசர் கவுல், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார்.