யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/3/17

தமிழக அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

அன்புள்ள பள்ளி தாளாளர்களே,முதல்வர்களே மற்றும் தலைமை ஆசிரியர்களே, வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி
(SUNDAY)கல்வித்திருவிழா மற்றும் MAM COLLEGE OF EDUCATION இணைந்து நடத்தும் தமிழக அளவிலான ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெறுகின்றது.இதில் சுமார் திருச்சி,கரூர்,புதுகோட்டை,பெரம்பலூர்,அரியலூர்,தஞ்சாவூர்,நாகப்பட்டினம்,விழுப்புரம்,திருவண்ணாமலை,மதுரை,சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்கள் சுமார் பத்தாயிரம் பேர் பங்கேற்கின்றனர்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து Bed கல்லூரி மாணவர்களும் பங்குகொள்கின்றனர்.தினமலர்,தினத்தந்தி,தினகரன் உள்ளிட்ட அனைத்து பத்திரிககள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.LOCAL CHANNELS மூலமும் விளம்பரம் செய்யபடுகின்றது.எனவே தங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நீங்கள் நேரிடையாக தேர்வு செய்யும் பொருட்டு தங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.DEMO CLASS FACILITY IS AVAILABLE.எனவே தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை தாங்கள் நேரில் வந்து தேர்வு செய்யுமாறு தங்களை கேட்டுகொள்கிறோம்.நேரில் வர இயலாதவர்கள் இந்த ஈமெயில் இணைக்கப்பட்டுள்ள TEACHERS REQUIREMENT FORM-FILL செய்து அனுப்பவும்.தங்களுக்கு ஈமெயில் மூலமாக RESUMES 2017-2018 வரை அனுப்பப்படும்.மேலும் இணையதளத்தில் ஒரு USER ID மற்றும் PASSWORD கொடுக்கப்படும்.அதில் பதிவு செய்துள்ள ஆசிரியர்களை நீங்களே SELECT செய்து கொள்ளலாம்.மேலும் வேலை தேடும் ஆசிரியர்கள் கீழே உள்ள லிங்க்கை click செய்து தங்களது பெயரை register செய்யவும்.
www.kalvithiruvila.net
http://kalvithiruvila.net/kalvi/
UG/PG AND WITH B Ed AND WITHOUT B Ed AND THE
SUBJECTS:
TAMIL.ENGLISH,PHYSICS,CHEMISTRY,MATHS,BIOLOGY COMPUTERSCIENCE,COMMERCE,ECONOMICS,ACCOUNTANCY,BUSINESS MATHS,BOTANY,ZOOLOGY,HISTORY
SPECIAL TEACHERS:YOGA,HINDHI,ARABI,PHYSICAL EDUCATION
FEATURES:
1) SEPERATE CLASS ROOMS ALOTTED FOR UG(2 CLASS ROOMS ) AND PG(2 CLASS ROOMS AND PG WITH BEd-2 AND 2 CLASS ROOMS FOR DEMO).
IF YOU WANT TO SEE THE DEMO FROM THE CANDITATE FACILITY IS ALSO AVAILABLE.
2)ONLY2 PERSONS ALLOWED FOR RECRUITING FROM THE SCHOOLSIDE
3). FOOD WILL BE PROVIDED TO THE SCHOOLPERSONS
4)THE INTERVIEW TIME IS 9.00AM TO EVENING UPTO 5PM .
5)THE SCHOOLS NEED TO REGISTERED ON OR BEFORE 3௦th MARCH.
6)ENROLLED SCHOOLS ONLY ALLOWED TO PARTICIPATE THE JOB FAIR.
7)SCHOOLS NEED TO FILL YOUR REQUIREMENT FORM
8)CAR PARKING IS AVAILABLE
VENUE:MAM COLLEGE OF EDUCATION,
SIRUGANUR,TRICHY TO CHENNAI MAIN ROAD,
BUS STOP MAM COLLEGE
Thanks and Regards
Selvakumar.B
9442568675
9788829179
www.kalvithiruvizha.com
www.kalvithiruvizha.co.in
www.kalvithiruvizha.in
www.kalvithiruvizha.online
www.kalvithiruvizha.website
Kalvi Thiruvila
kalvi,leanerkey,hsc question paper,sslc question paper, anna university question paper and material, tet material,tnpsc material,10th material,
KALVITHIRUVILA.NET
Kalvi Thiruvila
kalvi,leanerkey,hsc question paper,sslc question paper, anna university question paper and material, tet material,tnpsc material,10th material,

KALVITHIRUVILA.NET

தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கலாமா ? தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஏற்புடையதா?

ORDERS FROM RIGHT TO INFORMATION ACT

1.    மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்  
       விடுப்பை துய்க்கலாமா ? 

2.    தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?

3.    தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும் 
       ஏற்புடையதா?
இதற்கு பெறப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை.. பதில்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, தேர்வு நடத்துவதில் அவசரமோ,
குழப்பமோ இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் மூன்று வருடங்களாக 'ஆசிரியர் தகுதித் தேர்வை' நடத்தாத அதிமுக அரசு, இப்போது அவசர அவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.'

கட்டாய கல்வியுரிமைச் சட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையை வெளியிட்டிருக்கிற இந்த நேரத்தில், ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்குப் பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் அவசரமோ, குழப்பமோ இல்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் நலனை கருத்தில்கொண்டே, தற்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும், நீதிமன்ற ஆணையின்படியே தேர்வுக்கான தேதி ஏப். 29, 30 என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

SBI SGSP (State government salary package) A/C Benefit's-தமிழில்

*Minimum balance தேவையில்லை.*

~ கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு
சென்றுவிடும்.

[குறைந்தபட்ச தொகையையும் (Ex:ரூ.1000-க்கு மேல் உள்ள பணம் முழுவதும் MOD A/C-ல் fixed deposit செய்யவும்) &

மாதந்தோறும் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டிய தேதியினையும் நாம் தான் தெரிவிக்க வேண்டும்]



*கணக்கில் உள்ள பணத்திற்கு Fixed deposit வட்டி கிடைக்கும்.*

ATM-ல் தேவைப்படும் பொழுது எப்பொழுதும் போல் பணம் எடுக்கலாம் fixed doposit-ல் (MOD) உள்ளதே பணம் வருமா வராதா என்ற பயம் வேண்டாம்.

எத்தனை நாட்கள் MOD-ல் உள்ளதோ அத்தனை நாட்களுக்கான வட்டி கிடைக்கும்.

*~ வேறு கிளையில் இலவசமாக பாஸ் புக் பிரிண்ட் செய்யலாம்.*

*~ வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகை.*

*~ இலவச ATM card.*

*~ கட்டணமில்லா காசோலை புத்தகம் (multi city cheques)*

*~ இறப்பின் பொழுது காப்பீட்டுத் தொகை.*

(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

~ 2 மாத ஊதியத்தினை முன்பணமாக பெற்று 6 மாத கால தவணைகளில் திருப்பி செலுத்தும் வசதி. (*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

👆👆👆 Source: https://www.sbi.co.in/…/per…/state-government-salary-package

2010 முதல் நான் SGSP A/C பயன்படுத்திவருகிறேன்.

[Salary certificate (HM கையெழுத்து போதுமானது) + ID card இருந்தால் போதும், நமது SBI சேமிப்புக் கணக்கினை SGSP A/C ஆக வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று மாற்றிடலாம்]

*SGSP A/C ஆக நமது சேமிப்புக் கணக்கினை மாற்றிய பிறகு ATM & SMS-ல் balance குறைவாக காட்டினால் பயப்பட வேண்டாம்.*

உங்களது பணம் MOD-ல் இருக்கும்..

உங்களுக்கு தேவையான தொகை MOD-ல் இருந்தாலும் ATM-ல் எடுக்கலாம்.

Mini statement-ல்MOD balance பார்க்க இயலாது.

ஆனால் internet banking, mobile banking, passbook print & ATM-ல் balance check செய்யும் பொழுது Available balance தனியாகவும், MOD balance தனியாகவும் காட்டும்.


இதேபோல் மற்ற வங்கிகளிலும் salary package சலுகைகள் உள்ளன. இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

ANNAMALAI UNIVERSITY -DDE - Examination Results - December 2016-Results Published on 24-03-2017

ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வெறும் கண்துடைப்பு தான்! கலங்கி நிற்கும் ஆசிரியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக மானிய குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித்தேர்வு, தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வு மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுகள் போன்றவை வெறும் கண்துடைப்பாகத்தான்
நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளால் ஒரு பயனும் இல்லை' என்கிறார்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள். என்ன காரணம்? ஏராளமானோர் படித்து வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தானே தேர்வு நடத்தப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது, எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விகளோடு சந்தித்தோம்.

"எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் பெயர் அளவுக்குத்தான் பெரும்பாலான பி.எட் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் வருடத்தில் 60 ஆயிரம் பேர் பி.எட். முடித்து வருகிறார்கள். இதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் ஆசிரியர் தகுதித்தேர்வினை கொண்டு வந்தார்கள். ஆனால், அதிலும் சரியான நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆசிரியர் காலியிடங்கள் அதிகம் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நிரப்புவதில் இருந்து விலக்கு பெற்றிருக்கிறார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினர் பள்ளியில் தகுதியான ஆசிரியர்கள் தேவையில்லை என்கிறார்களா? என்று தெரியவில்லை. தற்போது அரசு உதவிப்பெறும் சிறுபான்மையினத்தவர் நடத்தும் பள்ளிகளைத் தவிர இதர பள்ளிகளில் காலியிடங்கள் மிகவும் குறைவு என்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பினை வழங்குவார்கள் என்று தெரியவில்லை" என்கிறார் நெட்-ஸ்லெட் தேர்வுகளின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அமைப்பின் ஆலோசகருமான பேராசிரியருமான சுவாமிநாதன்.


காருண்யா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி 
 தகுதித்தேர்வு செல்வகுமார்

வரும் பா. மோசே செல்வகுமார் "ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்க இருக்கிற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி முடித்த 2,72,000 பேரும், பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் 5,28,000 பேர் என எட்டு லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆனால், இதுவரை எவ்வளவு ஆசிரியர்கள் காலியிடம் இருக்கிறது என்ற விவரங்கள் வெளியிடவில்லை. ஏற்கெனவே தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 35 ஆயிரம் பேர் மேல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பதிலும் இல்லை. தற்போது நடைபெற உள்ள தேர்வில் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் தேர்ச்சி பெறும்போது அவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பினை வழங்குவார்கள் என்று தெரியவில்லை.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த 181-வது அரசாணையின் மூன்றாவது பிரிவில் ‘அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் தகுதித்தேர்வை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சொற்ப சம்பளத்தில் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு பணி வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,000 பேருக்கும் வேலை கிடைத்திருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளின் தேர்வினை நடத்தி ஏராளமானவர்களுக்கு வேலையும் வழங்கி இருக்கலாம். ஆனால் நடக்கவில்லை.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக மாணவர்களிடமிருந்து கட்டணம் பெறுகிறார்கள். ஆனால், சரியான சம்பளத்துடன் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்குச் சரியாக எழுதப் படிக்கத் தெரிவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு பக்கம் ஆசிரியர் பணியில் சேரக் கடுமையான போட்டியும், இன்னொரு புறம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குச் சரியாக படிக்கத் தெரியவில்லை என்பது நமது குழந்தைகளின் கல்வி முறையும், தரமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பள்ளிக் கல்வியில் இப்படி என்றால் கல்லூரிக் கல்வியில் இதைவிட மோசம். பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு யூஜிசி நெட் தேர்விலும், மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் தமிழக அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வருடத்தில் இரண்டு முறை யூஜிசி நெட் தேர்வும், வருடத்தில் ஒரு முறை மாநில அரசு தகுதித்தேர்வினை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு நடத்திய ஸ்லெட் தேர்வில் 1395 பேரும், 2012-ம் ஆண்டு 5495 பேரும், 2016-ம் ஆண்டு 8550 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி இருந்தால் உயர்கல்வியில் காலியிடமே இருக்காது. ஆனால் வேறு அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டும் ஸ்லெட் தேர்வு நடக்க இருக்கிறது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
இந்தத் தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது? இதன் நோக்கம் என்ன? தேர்ச்சி பெற்றவர்கள் எந்தளவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலே இல்லை. ஒவ்வொரு முறையும் லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதுவதன் மூலம் பெரும் தொகை கிடைக்கிறது என்பதற்காக நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு கண் துடைப்புக்காகவே தகுதித்தேர்வினை நடத்துகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களுக்கு பல வித குளறுபடிகள் மூலமாகவும், கல்லூரியில் உள்ள காலியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்புகிறார்கள். 2012-ம் ஆண்டு 2012ல் அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 3120 உதவி பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ளதாக அறிவித்தார்கள். ஆனால், இதுவரை நிரப்பப்படவில்லை. கடந்த ஒராண்டுக்கும் மேலாக ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். துணைவேந்தர் இல்லாததால் பலரும் படித்த படிப்புக்கான பட்டத்தையே பெற முடியாமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது கல்வித் தரத்தை பற்றி என்ன செல்வது என்று தெரியவில்லை" என்று முடித்தார் .


நெட்-ஸ்லெட் அசோசியேசன் அமைப்பின் செயலாளர் ஏ.ஆர். நாகராஜன்  "
தகுதித்தேர்வு நாகராஜன் நெட்-ஸ்லாட் அசோசியேசன்

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பேர் நேர்முகத் தேர்வுக்கு என்ன தகுதியோடு வருகிறார்கள் என்ற தகவலில் அடிப்படையிலேயே ஸ்லெட் தேர்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளமானவர்கள் இருந்தும் திரும்பத் திரும்ப நடத்துகிறார்கள். இதில் முடிவினை அறிவிக்கும்போது பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறையினையும் கடைப்பிடிப்பதில்லை. ஆசிரியர்களை நியமிக்கும்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையும் கண்டுகொள்வதில்லை. எந்த விதிமுறையும் கடைபிடிப்பதில்லை. இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றாலும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு வருவதற்கு முன்பாக தகுதியில்லாதவர்கள் நியமித்து விடுகிறார்கள். இந்த நிலையில் கல்வித் தகுதியினை எங்குப் போய் தேடுவது என்று தெரியவில்லை" என்கிறார்.
தகுதித்தேர்வில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பதைப் பார்க்கும்போது திகைப்பாய் இருக்கிறது. அரசு மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது குளறுபடிகளின் ஒட்டுமொத்த உருவமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.vikatan.com/news/tamilnadu/84781-teacher-eligibility-test-is-just-another-eyewash-slams-teachers.html

CPS-வல்லுநர்குழு அறிக்கை தாக்கல் தாமதம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

No automatic alt text available.

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்

நீட்நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, இரு மாதங்களில் மாற்ற முடியாது.
ஆனால், பாடத்திட்டத்தில் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிட்டு, புதிய பகுதிகள் இணைக்க முடியும். அதற்காக, கல்வியாளர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குழுவுடன், ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை சிரமமின்றி மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, பாடத்திட்டத்தில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'பள்ளிக்கல்வியின் இந்த அறிவிப்பால், எதிர்காலத்தில், 'நீட்' தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்களும் எழுதி, உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியும்' என, பெற்றோர் தெரிவித்தனர்.

போலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து
ஆசிரியர் பணியில் சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, மகேஸ்வரி, 36, என்ற ஆசிரியை பணி இடமாற்றத்திற்கான நியமன ஆணையுடன் நேற்று முன்தினம் சென்றார். அவர், அளித்த நியமன ஆணையை சரிபார்த்த தலைமை ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்தது.


இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகத்திடம் கேட்டார். அப்போது, மகேஸ்வரி கொடுத்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இது குறித்து, வந்தவாசி தெற்கு போலீசில் தலைமை ஆசிரியை புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அவர் அளித்த, இடமாறுதலுக்கான ஆணையில் இருந்த, அனைத்து தகவல்களும் போலியானவை என்பது தெரிய வந்தது.இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் சான்றிதழை சரிபார்க்குமாறு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று உத்தரவிட்டார்.


அதனடிப்படையில் விசாரணை நடத்தியதில், மேலும், மூன்று ஆசிரியர்கள் போலி ஆணை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், மூன்று பேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறியதாவது:-மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பணி ஆணை உத்தரவு, கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரியும் மூன்று பேர், பணியில் சேர முயன்ற ஒருவர் என, நான்கு பேர் போலி சான்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பணியில் சேர்ந்த நாள் முதல், தற்போது வரை அவர்கள் பெற்ற ஊதியத்தை திரும்ப பெறவும், குற்றப்பிரிவு போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக்
கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
 ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.

இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது. அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படிநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல். புதியது..



JIO வின் அடுத்த சலுகை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.ஜியோ சிம் கார்டு வைத்துள்ளவர்கள், பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். 
இவர்களுக்கான இலவச சேவை சலுகை, வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழ்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் :கணிதத்தில் 'சென்டம்' குறையும்

பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று நடந்த தேர்வு குறித்து அவர்களின் கருத்துஎஸ்.கற்குவேல் கார்த்திகேயன், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி: பகுதி இரண்டில் ஆறு மதிப்பெண் வினாவில் கட்டாய கேள்விகள் 55 - ஏ, 55-பி, இரண்டுமே எதிர்பாராததாக இருந்தது. இந்த வினாக்கள் இதுவரை கேட்கப்படாதவை. 53வது வினாவில் 1வது பிரிவு வினா 10.5 பயிற்சி கேட்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் வராது என படிக்காமல் விடப்படும். 10 மதிப்பெண் கட்டாய வினாவில் இரு வினாக்களும் எதிர்பாராதவை. எல்லா பயிற்சிகளும் முழுமையாக படித்தவர்கள் மட்டுமே இதற்கு விடையளிக்கலாம். மற்ற வினாக்கள் எளிமை என்பதால் சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர். எதிர்பாராத வினாக்களால் 'சென்டம்'எடுப்போர் எண்ணிக்கை குறையும்.எளிமை - ஜெ.பிரித்திகா சென், என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: கணிதம் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாவில் 6 மதிப்பெண் கேள்வி, சற்று சிரமமாக இருந்தது. அதே வேளையில் 10 மதிப்பெண் வினா மிகவும் எளிமையாக இருந்தது. அதில் கடந்த ஆண்டு வந்த அதிகம் கேள்விகள் இருந்தன. புத்தகத்தில் இருந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்காக பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சி பயன்தந்தது.

ஒரு மதிப்பெண் வினா அனைத்தும் மிக எளிமை.சிறிது குழப்பம் - டி.முத்துக்குமரநாயகி, ஆசிரியை, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி: ஒரு மதிப்பெண்வினாக்களில் 9 வினாக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கிய புத்தகத்தில் இருந்தும், 31வினாக்கள் 'புக்பேக்' பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 6 மதிப்பெண்ணுக்கான 45வது வினாவில் கலப்பு எண்கள் வினா 'கிரியேட்டிவ்' ஆக கேட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்திருக்கும். பத்து மதிப்பெண்ணில் 69வதுதாக கேட்கப்பட்ட நிகழ் தகவு பரவல் வினாவை மாணவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். பத்து மதிப்பெண்ணுக்கான கட்டாய வினாவில் 'ஏ 'வினா வகை நுண்கணிதம் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றியும், பி.வினா டிபிரன்சியல் ஈக்குவேஷன் கேட்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி கணக்கில் 8.5, 8.6 பயிற்சியை மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.ஆனால் 8.2வது பயிற்சியில் வினா கேட்கப்பட்டுள்ளதால், பலர் இந்த வினாவை சரியாக எழுதியிருக்க மாட்டார்கள். நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமே எழுதியிருப்பார்கள். கணித தேர்வில் மொத்தம் 16 மதிப்பெண்கள் எதிர்பாராத வினாக்களாக வந்துள்ளது.இதனால் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர் எண்ணிக்கைகுறையும். மற்றபடி சராசரியாக படிக்கும் மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர்.

மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!

மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் 3 மாநிலங்களில் சுமார் 4.4 லட்சம் போலியான மாணவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவுஅளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மத்திய அரசு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது.மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் தங்களதுஆதார் எண்ணை பள்ளியில் சமர்பிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்குபல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஜார்கண்ட், மணிப்பூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் சுமார் 4.4 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் இதற்கு முன்னர், மதிய உணவு உட்கொள்ளும் மாணவர்களுடன், மதிய உணவு உட்கொள்ளாத மாணவர்களையும் சேர்த்து போலியான பெயர்ப் பட்டியல் தயார் செய்து ஆண்டு தோறும் அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வந்துள்ளனர்.

ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு விட்டதால் போலியான மாணவர்களை சேர்க்க முடியாது என்பதால், தற்போது மேற்கண்ட 3 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 4.4 லட்சம் மாணவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.3 மாநிலங்களில் மட்டுமே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிய உணவு உட்கொள்ளாத போலி மாணவர்கள் இருந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள போலியான மாணவர்கள் கண்டறியப்பட்டால், அரசுக்கு பெரும் தொகை மிச்சமாகும் என்பதில் ஐயமில்லை.

10-ம் வகுப்பு தேர்வு எழுத கூடுதல் நேரம் கோரியமாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்ததில் உள்நோக்கம் இல்லை: தருமபுரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

தருமபுரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியர் மீது புகார் அளித் துள்ள நிலையில், ‘சம்பந்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோத னைக்கு அழைத்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி. இவரது மகள், தருமபுரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத் தேர்வை அவர் எழுதி வருகிறார். இந்நிலையில், ‘தேர்வை சரிவர எழுத முடியாதபடி மாவட்ட ஆட்சியர் தனக்கு சிரமம் தருகிறார். இதற்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்’ என இந்த மாணவி தருமபுரி ‘சைல்டு லைன்’ அமைப்பிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து மாணவி கூறிய தாவது: பிறவியிலேயே எனக்கு வலது கை நரம்பில் பாதிப்பு இருந்ததால் இடது கையில் எழுத பழகிக் கொண்டேன். இருப்பினும் இடது கையால் மற்றவர்களைப்போல வேகமாக எழுத இயலாத தால், பொதுத் தேர்வின் போது ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வேண்டுமென முறைப்படி மருத்துவ சான்றுகளுடன் விண்ணப்பித்தேன்.இதையடுத்து அரசு தேர்வுகளுக்கான வேலூர் மண்டல இணை இயக்குநர் மூலம் எனக்கு தேர்வு எழுத 1 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணிக்கு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்வு நேரம் என்பதால் என்னால் ஆஜராக முடியவில்லை. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள் ளேன். ஆட்சியரின் உத்தரவு எனக் கூறி சிலர் தரும் சிரமங்களால் என்னால் நிம்மதியாக தேர்வு எழுத முடியவில்லை’ என கூறியுள்ளார்.இதுகுறித்து மாணவியின் தாயார் மகேஸ்வரி கூறும்போது, ‘எனது மகளுக்கு தேர்வு சமயத்தில் தேவையற்ற நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், தேர்வில் அவரால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. என் மகள் என்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை’ என்றார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தேர்வை கண்காணிக்கும் பறக்கும் படையின ருக்கு அந்த மாணவியின் எழுதும் திறனில்சில சந்தேகங்கள் ஏற்பட்டுள் ளன. அவரது கை பாதிப்பின் அளவு குறித்து சந்தேகம் நிலவுவதாக பறக்கும் படை குழுவினர் கோட் டாட்சியர் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அவர் மூலமாக இந்த தகவல் எனக்கு தெரியவந்தது.

தருமபுரி மாவட்டத்தில் விதிமுறை களுக்கு உட்பட்டு தேர்வை நடத்து வதோடு, முறைகேடுகள் எதுவும் பதிவாகிவிடாதபடி பொதுத் தேர்வை நடத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.அந்த வகையில் இந்த மாணவி விவகாரம் தொடர்பாக அரசு தேர்வு கள் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல, சம்பந்தப்பட்ட மாணவியின் மாற்றுத் திறன் சதவீதம் குறித்து ஆய்வு செய்து மருத்துவ அறிக்கை அளிக் கும்படி தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கும் உத்தரவிடப்பட் டது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தேர்வு நேரத்திலேயே சோதனைக்கு ஆஜராகும்படி கூறி சிரமப்படுத்தி விட்டதா என தெரியவில்லை.அதேநேரம், அந்த மாணவி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல ரின்மகள் என்பது இறுதியில்தான் எனக்கு தெரியும்.

தேர்வுகள் தொடர் பான வழக்கமான நடவடிக்கை கள்தான் இந்த விவகாரத்தில் மேற் கொள்ளப்பட்டதே தவிர, இதற்கு வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.கடந்த 23-ம் தேதி இரவு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநிலமொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை: தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு.

நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதிநடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.நீட் தேர்வு கடந்த ஆண்டு ஆங்கி லத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேண்டாம் நீட் தேர்வு

இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப் புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்?

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலை வர் பதவிக்கு முனியப்பா என்பவர் தாக்கல் செய்த வேட்புமனு நிரா கரிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது.

அப்போது நீதிபதி, ‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நான் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா? என்றும் கேட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்று மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.நெடுஞ்செழியன், ‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்தத் தேவையான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அவகாசம் வழங்கியுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அன்றைய தினம் தெரிவிக்க வேண்டும்’’என்று உத்தரவிட்டார்.

விடுபட்ட 12 லட்சம் குழந்தைகளுக்கு 4 நாளில் ரூபெல்லா தடுப்பூசி.

தமிழகத்தில் விடுபட்ட 12 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர் களுக்கு 4 நாட்களில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் முடிவடைந்தது. விடுபட்டவர் களுக்கு வரும் 31-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும். இதுவரை 1 கோடியே 64 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்னும் 4 நாட்களில் விடுபட்ட 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும். அதன்பின் தேசிய தடுப்பூசி திட்டத்தில் உள்ள தட்டம்மை தடுப்பூசி நீக்கப்பட்டு, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி சேர்க்கப்படும். 9 மாதம் முதல் 12 மாதம் மற்றும் 16 மாதம் முதல் 24 மாதம் என இருகட்டங்களாக குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்.

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு: நீதிமன்றம்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

தடை உத்தரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறுபதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தியுள்ளது.

தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வைத்த கோரிக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படும் நிலத்தில், சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை, கழிவுநீர் குழாய் பதிக்க போதிய இடம் வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது.

அடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்குக்கு மாற்றினால் மிஸ் பண்ணாம படிங்க ...

SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations. 
Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.

Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries
Employees receive instant credit of salaries
Benefit to the Employee

Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-
Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance

Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa

Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary Salary Package Account*
Free personalized Multi City Cheques
RTGS/NEFT
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 months*
SMS Alerts

Free Debit Cards : Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.
Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits