யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/3/17

TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை
குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

பணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசிரியர் பயிற்றுனர்கள் வேதனை

PG TRB - எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது. (30.03.2017 நாளிதழ் தகவல்)

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள்
உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருந்தது.

ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை.

தற்போது 100 அரசுஉயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

மாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவம் அறிமுகம்

வருமான வரிக்கு உட்பட்ட சம்பளதாரர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். தற்போது இந்த படிவத்தில் 18
பகுதிகள் உள்ளன. ஆனால், 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கட்டாயம் நிரப்பப்பட வேண்டிய சில பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இபைலிங் செய்பவர்களுக்கு இது மிக எளிமையாக இருக்கும். கணக்கு தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க எளிமையான படிவம் கொண்டுவரப்படுவதாக வருமான வரி அதிகாரிகள் கூறினர்.

இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்

இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு
தயாராகும்
TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு
காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்
தமிழக
அரசுஉதவி பெறும் பள்ளிகளில்
பணியில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறியாவதைத் தடுக்க
பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் உதவினாலும்
TNTET கடைசி வாய்ப்பு என
கடந்த வாரம் வந்த கல்வித் துறையின் இயக்குனர் சுற்றறிக்கையால் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களின் பணியும், வாழ்க்கையும் கேள்விக்குறியாகி மிகுந்த மன
உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 23/08/2010
ற்குப் பிறகு பணிநியமனம் பெற்றவர்கள் நிலை இது.
மிகமனம் வருந்தும் நிலை இதில் யாதெனில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியில்
ஜொலித்த இவர்கள் தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தப்பட்டு
கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என்ற அறிவிப்பு எவ்வாறு
செயல்படுத்தப்படும் என்பதே!
23/08/2010 க்குப் பிறகு (தெரிந்தோ தெரியாமலோ முழு தகுதி இருந்தும்) பணியில்
சேர்ந்த ஒரே காரணத்தினால் இவர்கள் தகுதியற்றவர்கள் என எப்படி வரும் காலம்
நிரூபிக்க உள்ளது என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
இவர்களில்
பணியில் சேர்ந்த நாள்முதல் இன்று வரை மாணாக்கர்களின் படிப்பு,
நலன், அக்கறை, முன்னேற்றம், தேர்ச்சி, ஒழுக்கம், அணுகுமுறை....
போன்றவைகளில் எத்தனை ஆசிரியர்கள் மீது தவறு குற்றம் கண்டறியப்பட்டுள்ளது..?
"அ முதல் ஃ வரை...!
கற்பித்தலுடன் சேர்த்து
அரசுஅவ்வப்போது கொடுக்கும் பணியிடைப் பயிற்சிகள் முலம் மாணாக்கர்களுக்கு
தேவையானவற்றை மிகுந்த உற்சாகத்துடனும் சுணக்கம் இன்றியும் போதிக்கவில்லை" என
நிரூபிக்க யாரால் இயலும்?
கல்வி மற்றும் பள்ளி சார்ந்த அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து தேர்ச்சி
சதவீதமும் உயர்த்தி கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக பணியில் உள்ள இந்த ஆசிரியர்கள்
அடுத்த வரும் ஆசிரியர் தகுதித்தேர்வை காரணம் காட்டி தகுதியற்ற ஆசிரியர்கள் என
முத்திரை குத்தி வெளியேற்றிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என
யோசிக்கவும், மன இறுக்க சூழலையும் இன்று வரை காது கொடுத்து கேட்க யாரும் இல்லை.
கடந்த 3 ½ ஆண்டுகளிலா பலசட்ட சிக்கல்கள் விளைவாக ஆசிரியர் தகுதித் தேர்வு
நடைபெறவில்லை.
இனிநடக்கும் TNTETல் முழுவதும் பயின்று வெற்றி பெற சாத்தியமான சூழலும்,
தெளிவான மனநிலையும் மங்கிய நிலைக்கு தற்போதைய கட்டாயத் தேர்ச்சி பெற்றாக
வேண்டும் என்ற சுற்றறிக்கை மேலும் காயப்படுத்தியுள்ளது.
இந்தஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு காரணமாக TNTET லிருந்து முழுவதும் விலக்கு
கேட்டு கோரிக்கைகளை அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் வாயிலாக வைத்து வந்த
நிலையில் 3/10 வாய்ப்புகள் மட்டுமே கொடுத்து விட்டு தற்போது வரும் TNTET கடைசி
வாய்ப்பு என்ற கட்டாயத்தால் கழுத்தில் கத்தி உள்ளது போல தினம் தினம்
இறுக்கமான சூழலில் மிகவும்வேதனையில் அரசு பொதுத் தேர்வுகள் , விடைத்தாள்
திருத்தம், தேர்தல் பணி இவற்றையும் சேர்த்து பள்ளிக் கல்விப் பணியும்
புரிந்து வருகின்றனர்.
இவர்களின் நிலை பற்றிய செய்திகள் அவ்வப்போது தொலைக்காட்சி, செய்தித்தாள், மின்
ஊடகங்கள் வழியாக வந்தாலும் அதை அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகளின் கவனத்தில்
கொண்டு செல்லவும், எவரும் கண்டுகொள்வதும் இல்லை என்பதுடன், ஆறுதல் கூறக் கூட
ஆட்கள் இல்லை என்பது இவர்களின சொல்ல இயலாத துயரம்.
இவ்வளவு காலம் பட்டதாரி ஆசிரியர்களாக சிறப்பாக பணி புரிந்தும் முறையான
அங்கீகாரம் இல்லாதது போல இன்று வரை பயணிக்கும் இந்த ஆசிரியர்கள் பல வழிகளில்
அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு உதவ பல அரசு உதவி பள்ளி
நிர்வாகங்கள் முன் வருவது இல்லை.
TNTET நிபந்தனை ஆசிரியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரம், பணிப் பாதுகாப்பு
காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து ஏற்கெனவே சிறுபான்மையினர் பள்ளிகள்
ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல இவர்களுக்கும் விலக்கு அளித்து, ஒரு
நல்லமுடிவினை தற்போது தமிழக அரசு எடுக்கும் பட்சத்தில் அரசிற்கு முழுவதும்
நன்றிக்கடன் பற்று இருப்பார்கள் என்பது உண்மை.
இந்தபட்டதாரி ஆசிரியர்கள் நிலையை நல்உள்ளத்துடன் பார்க்க முற்பட்டு விரைவில்
தீர்வு கண்டால் இனிவரும் நாட்களிலாவது நிம்மதியுடன் ஆசிரியப் பணியை அறப்பணியாக
மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.
தமிழக அரசின் கீழ் உள்ள தமிழக TET நிபந்தனை ஆசிரியர்கள் சார்பில் தமிழக

அரசுக்கு மிகவும் நன்றி....!

முக்கிய அரசாணைகள் -


 (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)   

                                                       (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)    

                                           
 (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)    

                                               (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)   

              
   (5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)    

                                                        (6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)   

                                                          (7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)    

                                                        (8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)        

                                                    (9)-  அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)       
    
 (10)-  பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)

பள்ளிக்கு செல்லாதோரை பட்டதாரி ஆக்கிய நிலவொளிபள்ளி

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களுக்காகவும், பள்ளிக்கே செல்லாதவர்களுக்காகவும் கல்வி கற்க, காஞ்சிபுரத்தில், நிலவொளிப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. இங்கு படித்த பலர், இன்று மத்திய, மாநில அரசு பணிகளிலும், பல தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.
கடந்த, 1997ல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வெ.இறையன்பு, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதிக்கு சென்ற போது, பள்ளி செல்லும் சிறுவர்கள், பட்டு நெசவில் ஈடுபட்டிருந்ததை கண்டார். இதையடுத்து, 1997 டிசம்பரில், பிள்ளையார்பாளையத்தில், 188 மாணவ, மாணவியரைக் கொண்டு, தமிழகத்திலேயே, முதன்முறையாக, நிலவொளிப் பள்ளியை துவக்கினார். அதன் பின், 32 பள்ளிகளாக வளர்ச்சி அடைந்தது.இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர், இவர்களது குடும்பத்தில்முதல் பட்டதாரிகளாக உள்ளனர். ஒரு மாணவர், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வருகிறார். பல மாணவர்கள், பல்வேறு தொழில்நுட்ப படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்கல்விக்கு பின், டி.என்.பி.எஸ்.சி.,பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்ததோடு, மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இப்பள்ளியில் படித்த மாணவர்களில் சிலர், தற்போது, இப்பள்ளியின் ஆசிரியர்களாக பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருந்தாலும்,பழையதை மறக்காமல், தங்கள் வாழ்க்கை பாதையை மாற்றி யமைத்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த, ஐ.ஏ.எஸ்.அதிகாரி வெ.இறையன்புவை, நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை:லோக்சபாவில் தகவல்

நாடு முழுவதும், மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்டஅடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், லோக்சபாவில் கூறினார்.
இதுகுறித்து, கெலாட் கூறியதாவது:நாடு முழுவதும், 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கென தனிப்பட்ட அடையாள அட்டை, இதுவரை வழங்கப்படவில்லை. அதனால், அரசின் நலத்திட்ட உதவிகளையும், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதிலும், அவர்கள் சிரமப்படுகின்றனர்.

இதை கருத்தில் வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தி, மத்திய, மாநில அரசுகளில், அவர்களுக்கான சலுகைகளை எளிதில் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் - சி.இ.ஓ., மோதல் : பரபரப்பு பின்னணி அம்பலம்

தர்மபுரி: ''என் மகள் தேர்வு எழுதிய போது, அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திய கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளேன்,'' என, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறினார்.
தர்மபுரி மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரியின்மகள் சங்கமப்பிரியா, இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்; அதே பள்ளியில், 8ம் தேதி பொதுத்தேர்வு எழுதினார். அப்போது, தேர்வு மையத்துக்கு வந்த வருவாய் துறையினர், அவரை புகைப்படம்எடுத்ததாகவும், தொடர்ந்து, 23ம் தேதி தர்மபுரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும்படி, சம்மன் அனுப்பியதாகவும் கூறினார். மேலும், தன் தாய், சி.இ.ஓ., மகேஸ்வரி மீது உள்ள வஞ்சத்தால், தன்னை கலெக்டர் பழி வாங்குவதாகவும், குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது: தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ.,வான நான், மாவட்ட தேர்வு அதிகாரியாகவும்உள்ளேன். சங்கமப்பிரியா மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்து, கலெக்டர் விவேகானந்தன் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இதை, துறை ரீதியாக அணுக உள்ளேன். சங்கமப்பிரியாவின் பெற்றோர் என்ற முறையில், கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன், என்றார்கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த, 2015- 16ல், மெல்ல கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில், தர்மபுரி மாவட்டத்துக்கு, 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு வழங்கிய நிதியை, கலெக்டர்விவேகானந்தன் இதுவரை வழங்கவில்லை.இந்நிலையில், 2016 - 17ம் ஆண்டுக்கும், 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், இந்த பணியின் செயல்பாடுகள்குறித்து, வீடியோ எடுத்த வகையில், 15 லட்சம் ரூபாயை வீடியோ கிராபருக்கு வழங்க, சி.இ.ஓ., மகேஸ்வரி கையெழுத்திடும்படி, கலெக்டர் விவேகானந்தன் பரிந்துரை செய்துள்ளார்.ஆனால், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காததால், மகேஸ்வரி கையெழுத்து இட மறுத்து விட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ.,வை பழிவாங்க, சங்கமப்பிரியா மீதுநடவடிக்கை எடுத்துள்ளார். இதுதான் மோதலுக்கான காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் விவேகானந்தனை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது உதவியாளர், 'இது தொடர்பாக, கலெக்டர் நேற்றே நிருபர்களை சந்தித்து விட்டார். தற்போது, மீட்டிங்கில் உள்ளதால், அவரை தொடர்பு கொள்ள முடியாது' என்றார்.

செட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், மொழி பாடங்கள் உட்பட, 14 பாடங்களுக்கு, தமிழில் தேர்வு நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், நெட் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். அதனால், மாநில மொழிகளில் நடத்தப்படும் செட் தேர்வையே, தென் மாநில பட்டதாரிகள் விரும்புகின்றனர்.இந்த ஆண்டுக்கான செட் தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. தேர்வுக்கான பதிவு முடிந்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

 தமிழக அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை சார்பில், செட் தேர்வு நடத்தப்படுகிறது.செட் தேர்வு எப்போதும், தமிழ்மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு, மொழி பாடங்கள், அந்தந்த மாநில மொழிகளிலும், மற்றபாடங்கள், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழில் தேர்வு நடத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, தமிழில் தேர்வு நடத்தப்படும்என, தெரசா பல்கலை உறுதியளித்தது.மொத்தம் உள்ள, 25 பாடங்களில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய, ஐந்து பாடங்களுக்கும், அந்தந்த மொழிகளில் நடக்க உள்ளது. பொது தாள், வணிகவியல், பொருளியல், கல்வியியல், புவியியல், வரலாறு, மனையியல், ஊடகவியல், சட்டம், மேலாண்மை, அரசியல் அறிவியல், மனோதத்துவவியல், சமூகவியல், சமூகப்பணி ஆகிய பாடங்களுக்கு மட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 வேதி அறிவியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், வாழ்க்கை அறிவியல், கணித அறிவியல், உடற்கல்வி அறிவியல், புவி அமைப்பியல், கடல் மற்றும் கோளரங்க அறிவியல் போன்ற பாடங்களுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடக்க உள்ளது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'

சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். 
இறுதி தேர்வு என்பதால், வினாத்தாள் கடினமாக இருக்கும் என, மாணவர்கள் பதற்றமாக இருந்தனர்; ஆனால், எளிதாக இருந்தது.ஏற்கனவே, முந்தைய தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களாக இருந்தன. பல மாணவர்கள், 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சில மாணவர்களுக்கு, ஒரு மதிப்பெண் வினாவால், திடீர் குழப்பம் ஏற்பட்டது.அதாவது, 'பொருத்துக' பகுதியில், அதிக மழை பொழியும் இடம் தொடர்பான கேள்வி இடம் பெற்றது. அதில், 'ஷில்லாங்' என்ற விடை, இடம் மாறி கொடுக்கப்பட்டிருந்தது. புத்தகத்தில்,அதிக மழை பொழியும் இடம், 'மவ்சின்ராம்' என்ற பகுதியாக, மாணவர்கள் படித்துள்ளனர். அந்த மவ்சின்ராம் கிராமம், மேகாலயா மாநிலத்தில், ஷில்லாங் நகரத்திற்கு அருகில் இருப்பதால், வினாத்தாளில், 'ஷில்லாங்' என்ற பெயரே இடம் பெற்றிருந்தது. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். நேற்றைய தேர்வில், இரு மாணவர்கள் உட்பட, 18பேர், காப்பியடித்து பிடிபட்டனர்.பழைய திட்ட குழு தவறான கேள்வி : இந்தியாவில், 1950ல், முன்னாள் பிரதமர் நேருவால் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. குழுவின் தலைவராக, பிரதமர் இருப்பார்.

இந்நிலையில், 2014ல், பா.ஜ., ஆட்சி வந்ததும், திட்டக் குழு கலைக்கப்பட்டு, 'நிதி ஆயோக்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 2014க்கு பின், 10ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, திட்டக் குழு குறித்த பாடம் இன்னும் உள்ளது. எனவே,நேற்றைய தேர்வில், 'திட்டக் குழுவின் தலைவர் யார்' என்றகேள்வி இடம் பெற்றது. மாணவர்களுக்கு, இதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை.

SSLC பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது: விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ல் ஆரம்பம்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற் றுடன் (செவ்வாய்க்கிழமை) முடி வடைந்தது. இதைத் தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் முடி வடைந்த நிலையில், கடைசி தேர் வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு எளிதாக இருந்த தாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். நேற் றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டதால், தேர்வுக் கூடத்தை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.இந்த காட்சியை சென்னை நகரில் பல பள்ளிகளில் பார்க்க முடிந்தது. ஒருசில மாணவர்கள் உற்சாக மிகுதியில் பாடப் புத்தகத்தை மேலே தூக்கி வீசியும் அது கீழே விழும்போது ஓடிச்சென்று பிடித்தும் மகிழ்ந்தனர். சக மாணவர்களை கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்டபோது, கோடைவிடுமுறையை உற்சாக மாக கழிக்கப்போகிறோம் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். இன்னும் சிலர் விடுமுறையில் தட்டச்சு, கணினி போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியில் சேர விரும்புவதாக கூறினர்.10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள் தேர்வு நாளை (வியா ழக்கிழமை) நடைபெறுகிறது. இது கட்டாய தேர்வு கிடையாது. விருப் பப்பட்ட மாணவர்கள் மட்டும் தேர்வெழுதலாம். எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் 78 மையங்களில் இப்பணி நடைபெற உள்ளது.10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள் தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இது கட்டாய தேர்வு கிடையாது. விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் தேர்வெழுதலாம்.

TET - குழப்பம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன்எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது.

அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என,உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது.

அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின் படிதான் ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்குப் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும், தேர்வு நடத்துவதில் குழப்பம் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டு களாக தகுதித்தேர்வு நடத்தப்பட வில்லை என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளி யிட்டுள்ளார். தகுதித் தேர்வு தேர்ச் சிக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத்த இயல வில்லை.தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இன்னொரு வழக்கில் சென்னை உயர் நீதி்மன்றம், ஏப்ரல் மாதத்துக்குள் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று ஆணை வழங்கியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜுன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் காலி யிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட தேதி களில் தகுதித் தேர்வு நடத்தப்படுகி றது. இத்தேர்வுக்காக 10 லட்சம் இளைஞர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை குழப்பும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்று அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த ஸ்டாலின் வெளியிட்ட விவரங்கள் பொதிந்த அறிக்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விரக்தியுடன் பதில் கூறியிருப்பது விந்தையும், வேடிக்கையும் நிறைந்ததாக இருக்கிறது.ஸ்டாலினின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு பல வருடங்களாக ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் நலனையும், தேர்வு எழுதுபவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதையும் சார்ந்தவை என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் புரியாமல் போனது ஆச்சர்யமாக இல்லை என்றாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காக சில விளக்கங்களை மட்டும் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உச்ச நீதிமன்ற வழக்கை மூன்று வருடங்கள் கவனிப்பாரற்று நிலுவையில் போட்டு வைத்தது அதிமுக அரசுதான். அதற்கு முக்கியக் காரணம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களை 2011ல் இருந்தே அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்த வினோத நிகழ்வுதான் என்பதை கற்றறிந்த கல்வியாளர்கள் முதல் கடைக்கோடியில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் வரை அனைவரும் தெளிவாக அறிந்தே வைத்துள்ளார்கள்.ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பே இல்லாமல் அவதிப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் திடீர் விபத்து போல் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்திருப்பதால் கல்வி இலாகாவில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் அவர் இன்னும் முழுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கு ஸ்டாலின் நிச்சயம் பொறுப்பேற்க முடியாது.உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் 2017-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஒப்புவித்துள்ளார். நீதிமன்றங்களின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றி நீதியரசர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுள்ள கருணாநிதியின் வழி வந்த ஸ்டாலினும் எப்போதும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பு அளிப்பவர் என்பதை அமைச்சர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் உதாசீனப்படுத்தியது அதிமுக அரசு; உள்ளாட்சி தேர்தலை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்றுவரை அந்த தேர்தலை நடத்தாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை வரும் போதெல்லாம் நீதிமன்ற கண்டனத்தை பெற்றுக் கொண்டிருப்பது இந்த பினாமி அரசு.ஆகவே ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டியிடுவோரின் நலன்களையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து பதில் சொல்லும் முன்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை அமைச்சர் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 கல்வி இறுதியாண்டு முடிந்தவுடன் தேர்வு என்றுவைக்காமல், கால அவகாசம் கொடுத்து தேர்வை நடத்த வேண்டும் என்பதே ஸ்டாலின் அறிக்கையின் சாரம்சம் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.'மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறார்' என்று இன்னொரு விதண்டாவாதத்தை எடுத்து வைத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். நேற்றைய தினம் பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் 'இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார்' என்று கேட்கப்பட்ட கேள்வியைப் பார்த்து மாணவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப்போய் விட்டார்கள். ஏனென்றால் திட்டக்குழு 1.1.2015 அன்றே கலைக்கப்பட்டு அதற்கு பதில் 'நிதி அயோக்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது கூட தெரியாமல் பினாமி அரசின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் துறை தயாரித்த கேள்வித்தாளில் 'திட்டக்குழு தலைவர்' பற்றி கேள்வி கேட்டிருப்பதுதான் மாணவர்களை ஒட்டுமொத்தமாக குழப்பும் செயல்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரண்டாவது இடத்திற்காவது வருவோமா என்ற குழப்பம், அந்த தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் நாம் நீடிப்போமா என்ற குழப்பம், ஆட்சியை போனாலும் கட்சி தலைமையை கைப்பற்ற என்ன முயற்சி எடுக்கலாம் என்பதில் குழப்பம்- இப்படி பல்வேறு குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஸ்டாலினைப் பார்த்து 'மாணவர்களை குழப்புகிறார்' என்பது விரக்தி நிறைந்த அறிக்கையாக இருக்கிறது.ஆகவே ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை நன்கு படித்துப் பார்த்துவிட்டு, , அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக ஆசிரியர் தேர்வுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை போதிய கால அவகாசம் கொடுத்து நடத்த வேண்டும் என்று மீண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

TNTET - 2017 :ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் கோருவதுமனிதாபிமானமற்ற செயல்: தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையை தமிழக அரசு அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகதகுதித்தேர்வு நடத்தப்படாததற்கு இந்த வழக்குதான் காரணம். இந்த வழக்கை எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரைவுபடுத்தி வழக்கை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

தற்போது வேலையில்லாத பட்டதாரிகள் வேலை பெறும் நோக்கில் தமிழக அரசு விரைந்து தகுதித்தேர்வை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில், தேர்வை தள்ளிவைக்கக் கோருவது மனிதாபிமானற்ற செயல். ஆனால், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தகுதித் தேர்வு வழக்கை தமிழக அரசுதான் நிலுவையில் வைத்திருந்தது என்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார். நீதிமன்றத்தில் நாமாக ஒரு வழக்கை நிலுவையில் வைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திமுகவினருக்கு ஏன் தெரியவில்லை.தகுதித் தேர்வை ஏப்ரல் மாதத்துக்குப் பதில் ஜூலை அல்லதுஆகஸ்டு மாதம் நடத்த வேண்டும் என்பதும் தேவையற்றது. தனியார் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை ஏப்ரல் மாதத்தில் எதிர்கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனென்றால் கல்வி ஆண்டு முழுவதும் பயிற்சி அளித்த அந்த ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் போதுமான பயிற்சி பெற்றிருப்பார்கள்.

தகுதித் தேர்வு தேர்ச்சியில் வகுப்பு வாரியான மதிப்பெண் குறைப்பு (5 சதவீதம்) என்பது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை வழங்கி ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்டே வழக்குதான் தகுதித் தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு காரணமே தவிர, தமிழக அரசு காரணம் அல்ல'' என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்..

29/3/17

பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

பி.எட் (கல்வியியல்) கற்பித்தல் பயிற்சிக்கு அனுமதி கோரும் விண்ணப்பம்

அடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்குக்கு மாற்றினால் மிஸ் பண்ணாம படிங்க ...SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government,
Union Territories and their Boards/Corporations. Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.

Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries

  Employees receive instant credit of salaries
Benefit to the Employee


Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-

Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance
Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa
Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary 

Salary Package Account*
Free personalized Multi City Cheques
RTGS/NEFT
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 

months*

SMS Alerts

Free Debit Cards :

 Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.

Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits