யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/4/17

ஆசிரியர் தகுதிதேர்வை தள்ளிவைக்கலாம்!- தினமலர் (உங்கள் பக்கம் பகுதி பதிவு)

புலவர் சுப்பு.லட்சுமணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

ஆசிரியர் தகுதித் தேர்வு, 2003ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது; 2010 முதல், பிற மாநிலங்களிலும், தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பின், 2012ல் அடுத்த தேர்வு நடைபெற்றது. அதன் பின், ஐந்து ஆண்டுகள் கழித்து, 2017 ஏப்ரல், 29, 30ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில், '2012க்கு பின் பணியில் சேர்ந்தோர், 2016க்குள் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால், பணி வாய்ப்பு உறுதி செய்யப்படும்' என, தமிழக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அரசே ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்தாதது தவறு; இது, மத்திய அரசின் அரசாணையை மீறிய செயல்!ஐந்தாண்டில், மூன்று முறை தேர்வு நடைபெற்று இருந்தால், தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்தடுத்த தேர்வில் வெற்றி பெற்றிருப்பர்; பணி நிரந்தரம் ஆகி இருக்கும். புதிய ஆசிரியர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைத்து இருக்கும். இப்படி, அரசே ஆசிரியர்களை பழிவாங்குவது நியாயமா?தமிழக அரசு, தன் தவறை உணர்ந்து, 2012லிருந்து, 2017 மார்ச் முடிய பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம். தற்போது நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, புதிதாக பணி வழங்கலாம்.

வருங்காலத்தில் மத்திய அரசின் ஆணைப்படி, அவ்வப் பருவங்களில் தகுதித் தேர்வு நடைபெற வேண்டும்.வரும், ஏப்., 29, 30ல் நடைபெறும் தகுதித் தேர்வை ஓரிரு திங்கள் தள்ளி வைக்கலாம். ஐந்தாண்டு தள்ளியவர்களுக்கு, இரு திங்கள் பொறுக்க முடியாதா...ஏனெனில், 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிந்து விட்டது.

இனி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்ல வேண்டும்; ஏனைய ஆசிரியர்கள்,பள்ளித் தேர்வை நடத்தி, விடைத்தாள் திருத்த வேண்டும்.பின், தேர்வு முடிவு அறிவிக்க வேண்டும்.கோடை விடுமுறையில் தான், ஆசிரியர்களுக்கு படிக்க, தயாரிப்பு பணி செய்ய போதிய காலம் கிடைக்கும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் முடிய பள்ளி உண்டு. பள்ளி பணி பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.எனவே, அரசும், துறை அலுவலர்களும் ஆராய்ந்து, தகுதித் தேர்வை, ஜூன், ஜூலையில் வைக்க ஏற்பாடு செய்யலாம்!

உங்கள் TPF கணக்கை சரிபார்க்க நீங்கள் உடனடியாக செய்யவேண்டியவை.

TPF 2014-2015 account statement 06.04.2017 அன்று வெளியாகியுள்ளது.*


உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க வேண்டும்.  நீங்கள் உடனடியாக செய்யவேண்டியவை :


www.agae.tn.nic.in  என்ற முகவரிக்குச் சென்று,
download TPF account statements for the year 2014-15 என்ற option ஐ click செய்யுங்கள்.

Log in page வரும், அதில்
GPF no : (உங்கள் TPF எண்.)
Dob :( உங்கள் பிறந்த தேதி).
Suffix : PTPF
என கொடுத்து login செய்யுங்கள்.

உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும். அதில்
view account slip ஐ click செய்தால் financial year கேட்கும், அதில் 2014-15 select செய்து view account slip ஐ click செய்தால் 2014-15 ஆம் ஆண்டிற்கான account slip download ஆகிவிடும். அதை print எடுத்துக்கொள்ளுங்கள்.

Print out செய்த account statement ல் -
1) உங்கள் பெயர்
2) TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள், கடன் செலுத்திய பதிவுகள், பெற்ற கடன் பதிவுகள்
7) opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம்.
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பதிவுகள் சரியாக இருப்பின் statement ல் உங்கள் mobile எண் கொடுத்து கையொப்பம் இடுங்கள்.

ஏதேனும் பதிவுகள் விடுபட்டிருப்பின் தலைமை ஆசிரியர் மூலமாக aeeo  அலுவலகத்திற்கு உரிய ஆதாரங்களுடன் உடனடியாக விண்ணப்பம் கொடுங்கள் .

பதிவுகள் சரியாக உள்ளதையும் aeeo அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவது நலம்.

உங்கள் TPF கணக்கை நீங்கள் தான் சரிபார்க்க வேண்டும். 

Mobile update சென்று உங்கள் mobile எண்ணை பதிவு செய்யுங்கள்.  கடைசியாக logout கொடுத்து வெளியேறுங்கள்.

குடிமைப் பணி: நிகழாண்டில் 980 அதிகாரிகளை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்.


நிகழாண்டில் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் 980 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய குடிமைப் பணிகளுக்கு (யுபிஎஸ்சி) மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. 

முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிகழாண்டில் குடிமைப் பணியிடங்களுக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட உள்ளனர்? என்பது குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கடந்த ஆண்டில் (2016) குடிமைப் பணிகளுக்கு மொத்தம் 1,209 காலியிடங்கள் இருந்தன. அவற்றுக்குத் தகுதியான நபர்களை நியமிப்பதற்காக யுபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டன. அதற்கான இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நிகழாண்டில் தோராயமாக 980 அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: இதனிடையே, மற்றொரு கேள்வியொன்றுக்குப் பதிலளித்த ஜிதேந்தர சிங், சரிவர பணியாற்றாத 5 ஐஏஸ் அதிகாரிகளையும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
குடிமைப் பணி அதிகாரிகளின் செயல்பாடுகளை அவர்களது பதவிக் காலத்தில் இரு முறை மதிப்பீடு செய்வது வழக்கம். அதில் அதிகாரிகள் சரிவர பணியாற்றாதது தெரியவந்தால், அவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கப்
படும். அந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.

ஓரியண்டல் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.


இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள மூத்த மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:
1. Senior Manager (FA) – Chartered Accountant, Taxation) (MMGSIII) - 01
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51490
2. Senior Manager (FA)- Chartered Accountant Ind AS Cell (MMGSIII) - 01
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51,490
3. Manager (FA) – Chartered Accountant (MMGSII) - 18
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
4. Assistant Manager (Financial Analyst) (JMGS-I) - 100
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/Advertisement_for_CA.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எக்ஸிம் வங்கியில் மேலாளர், துணை மேலாளர் வேலை.


மும்பையில் செயல்பட்டு வரும் எக்ஸிம் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள துணை மேலாளர், மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: மும்பை
மொத்த காலியிடங்கள்: 10
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (JM I) - 02
2. Manager (MM II) -06
3. Deputy General Manager (SM V) - 01
4. Administrative Officer (JM I) - 01
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.eximbankindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வு: மே, ஜூன் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.eximbankindia.in/Assets/Dynamic/PDF/Recruitment/Advertisement/Advertisement_1432017211113.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்..

முதல்வர், அறிவியல் அதிகாரிகள் பணி: டிபிஎஸ்சி அறிவிப்பு


திரிபுரா அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள முதல்வர், அறிவியல் அதிகாரிகள், டைரி அதிகாரி மற்றும் உதவி புள்ளியியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது திரிபுரா அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Principal Group-(A) - 01     

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் 37,400 - 67,000 தர ஊதியம் ரூ.10,000 இதர சலுகைகள்


பணி: Scientific officers Group - (B) - 03

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,800


பணி: Diary Officer Group - (B) - 04

சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,800


பணி: Assistant Statistical Officer Group - (B) - 03

சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,400

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2017

மேலும் தகுதி, தேர்வுக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://tpsc.gov.in/2017/21031701.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் -(07.04.2017)

ஆசிரியர் வேலைக்கு அழைப்பு.

ஆசிரியர் வேலைக்கு அழைப்பு.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகராட்சியில் நிரப்பப்பட உள்ள 100 ஆசிரியர் பணியிடங்களுக்கான அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Teacher

காலியிடங்கள்: 100

பணியிடம்: கொல்கத்தா

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Education Department, 1 Hogg Street, 2nd floor Kolkata-700087

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.04.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.kmcgov.in/KMCPortal/downloads/Engagement_Contractual_Teachers_01_04_2017.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்.10ல் தொடக்கம்.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் தொடர்ந்து 30 வேலை நாட்களில் எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும்.பள்ளியே செல்லா குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடை நிற்பவர்கள் கண்டறியப்பட வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும். 18 வயதுக்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களையும் கண்டறிய வேண்டும்.

வகுப்பு மாணவர்களிடம் கருத்துகேட்பு நடத்தி இடைநின்ற குழந்தைகள் உள்ளனரா என்று கேட்டறிதல் வேண்டும்.கடந்த ஜூன் முதல் இந்நாள் வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வருகைப் பதிவேட்டை மாதவாரியாக சம்மந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Shaala siddhi எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக…

வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் shaala siddhi பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.அதற்காக தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றி பதிவு இதோ உங்களுக்காக.

1.students profilesஇந்த பகுதில் நாம் 2016-2017 நடப்பு கல்வியாண்டின்மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக sc st obc General minority totalஇதில் minority பகுதியில் bcm bcc மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை obc ல் பதிய வேண்டும் .

2. Class wise annual attendance rate – இந்த பகுதியில் 2015-2016 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும். இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206,210,207,200,198 எனில் மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .

3.learning outcomes annual report பகுதி -இங்கு 2015-2016 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாகதயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40,41-50,51-60,61-70,71-80,81-90,91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் .

4.teachers profiles இதில் 2016-2017 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண்வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது high , her secondary level pta staff -ஐ குறிக்கும்.

5. Teachers attendance இந்த பகுதியில் 2015-2016 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒருமாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்யவேண்டும் . Cl தவிர பிற விடுப்புகள் .

பட்டப் படிப்புகள்: பல்கலை அறிவிப்பு.

'மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் ராமு தெரிவித்துள்ளதாவது:
இளங்கலை, முதுகலை பட்டங்கள், பி.எட்., பி.எல்.ஐ.சி., எம்.எல்.ஐ.,சி., பி.ஜி.எல்., சான்றிதழ், பட்டய சான்றிதழ் படிப்புக்கு ஏப்., 2017ம் ஆண்டு நடக்கும் அல்பருவ தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்.,17 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இளங்கலைக்கு தேர்வு மே 5, முதுகலை ஜூன் 2, சான்றிதழ், பட்டய சான்றிதழ் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,விற்கு ஜூன் 12ம் தேர்வுகள் துவங்குகின்றன. ஏப்., 24 வரை அபராதத்துடன் விண்ணப்பம் பெறப்படும். கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்தி அதற்கான 'இ ரிசிப்ட்'யும் இணைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இசை பள்ளிகள் கல்லூரிகளுடன் இணைக்கப்படுமா : பல்கலை சான்றிதழ் எதிர்பார்க்கும் மாணவர்கள்

தமிழகத்தில் இசை பள்ளிகள் கல்லுாரிகளுடன் இணைக்கப்பட்டு, பல்கலை சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்,' என இசை ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தினர்.

எல்லோரும் இசை கலையை கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நெல்லை, சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம் உட்பட 17 மாவட்டங்களில் இசை பள்ளிகள், மதுரை, திருவையாறு, கோவை, சென்னை ஆகிய நான்கு இடங்களில் இசை கல்லுாரிகள் செயல்படுகின்றன. பள்ளிகளில், குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், வயலின் உட்பட சான்றிதழ் படிப்புகளும், கல்லுாரிகளில் குரலிசை, தவில், வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் உட்பட டிப்ளமோ சான்றிதழ்களாகவும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர பள்ளி, கல்லுாரிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதி இருந்த நிலையில், கல்லுாரிக்கு மட்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என இந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிற்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர். இதன் மூலம் கோயில் அர்ச்சகர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இசை இன்ஸ்டிடியூட்களில் பணி வாய்ப்பு கிடைக்கின்றன. இசை ஆசிரியர்கள் தேவை, வெளிநாடுகளில் அதிகம் உள்ளன.

ஒரே வகை பாடத்திட்டம்: இசை மற்றும் கல்லுாரி சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்பிற்கான பாடத்திட்டங்கள், ஒரே மாதிரியாக உள்ளன. பள்ளியில் வழங்கும் சான்றிதழில் எந்த உயர் அலுவலரின் கையொப்பமும் இல்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தாலும், இசையில் உயர்நிலை படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் சம்பள விகிதத்திலும் அதிகம் மாற்றம் இல்லை. இதனால் இசைப் பள்ளிகளை, கல்லுாரிகளுடன் இணைத்து, தமிழ்நாடு அரசு கவின்கலை மற்றும் இசை பல்கலையின் உறுப்புக் கல்லுாரிகளாக இவற்றை மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இசை ஆசிரியர்கள், மாணவர்கள் கூறியதாவது: இசை பள்ளிகள் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., கல்லுாரிகள் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது என்பது தான் இரண்டிற்குமான வித்தியாசம். பாடத்திட்டங்கள், ஆசிரியர் சம்பள விகிதம் உட்பட பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இதனால் பள்ளிகள், கல்லுாரிகளுடன் இணைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கவின் கலை மற்றும் இசை பல்கலையின் கீழ் செயல்பட்டால் இப்படிப்புகளுக்கு இன்னும் மவுசு அதிகரிக்கும். சாதாரண சான்றிதழுக்கு பதில், பல்கலை அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்பட்சத்தில், இப்படிப்பிற்கான எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வெளிநாடுகளில் மதிப்பு அதிகரிக்கும். இப்பள்ளி, கல்லுாரிகள் கலை பண்பாட்டுத்துறை உதவி, துணை இயக்குனர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இவர்களுக்கு, இசை அறிவு என்பதை கூடுதல் தகுதியாக்க வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் இசை படிப்புகளுக்கான எதிர்காலம் சிறக்கும், என்றனர்.

TRB:உதவி பேராசிரியர் பணி 20ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், தமிழ் வழிக்கான ஒதுக்கீட்டிற்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அரசு இன்ஜி., கல்லுாரிகளில்,
காலியாக உள்ள, 192 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2016 அக்., 22ல், எழுத்துத் தேர்வை நடத்தியது. இதில், 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 
தேர்ச்சி பெற்றோருக்கு, இட ஒதுக்கீட்டு விதிகள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில், ஜன., 19, 20ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், தமிழ் வழியில் படித்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, வரும், 20ல், டி.ஆர்.பி., அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை.

50 ஆண்டுகளாக இயங்கும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 
சில பள்ளிகள், அப்பகுதியினரின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுகின்றன. இதில், ௫௦ ஆண்டுகள் பழமையான பள்ளிகளும் உண்டு; இப்பள்ளிகளை கவுரவிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இப்பள்ளிகளை தேர்வு செய்வதற்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மேற்பார்வையாளராகவும், தொடக்கக் கல்வி அலு
வலரின் நேர்முக உதவியாளர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்; உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என, 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

7/4/17

அண்ணா பல்கலையின்,இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு ஆதார் கட்டாயமாகிறது.

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில், இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர், அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவர்.
இதற்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படும்.இந்த ஆண்டுக்கான, இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை செயலர், பேராசிரியர், இந்துமதி தலைமையிலான குழுவினர், அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.'ஆன்லைனில்' குழப்பம் இன்றி, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்ய, 'சாப்ட்வேர்' தயார் செய்யப்பட்டுள்ளது. இதை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், பல்கலை பதிவாளர் கணேசன் ஆகியோர், மேற்பார்வையிட்டு வருகின்றனர்.இந்நிலையில், இன்ஜி., கவுன்சிலிங்கில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாகிறது.இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.மத்திய அரசின், தேசியக் கல்வி சான்றிதழ் களஞ்சியம் என்ற, டிஜிட்டல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு இன்ஜி.,மாணவரின் சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்ய, அண்ணா பல்கலையை, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், கல்வி உதவித்தொகை பெறவும், ஆதார் எண் சேகரிக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விபரங்கள் உண்மையா என ஆய்வு செய்ய, ஆதார் எண் தேவை.இதன்படி, இன்ஜி., படிப்பில் சேரும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளதாக, உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கால்நடை பல்கலை தரவரிசையில் இறக்கம்

தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, அகில இந்திய தரவரிசையில், கடந்த ஆண்டை விட, இரு இடங்கள் கீழிறங்கியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 2016 முதல், நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 
அதில், தமிழகத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, கால்நடை பல்கலை, 36-வது இடத்தை பிடித்தது.இம்முறை வெளியான பட்டியலில், இரண்டு இடங்கள் கீழிறங்கி, தரவரிசையில், 38 வது இடத்துக்கு சென்றுள்ளது. எனினும், வேளாண் தொடர்புடைய பல்கலைகளில்சிறப்பிடம் பெற்றுள்ளது.

இது குறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ். திலகர் கூறியதாவது: நாட்டில் உள்ள கால்நடை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட தேசிய வேளாண் ஆய்வு பல்கலைகள் கீழ்இயங்கும், 72 கல்வி நிறுவனங்களில், ஒன்பது மட்டும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அதில், நான்காவது இடத்தை, நம் பல்கலை பிடித்திருப்பது சிறப்பு. கால்நடை பல்கலைகளில், தமிழக கால்நடை பல்கலை மட்டுமே இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு : கணினி ஆசிரியர்களின் அடுத்த 'செக்'

மதுரை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு செய்ய நாள் ஒன்றுக்கு வழங்கும் விடைத்தாள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கனவே பி.ஜி., ஆசிரியர்கள் சங்கம் ஒன்று, திருத்தும் பணியை புறக்கணிப்பதாக அறவித்தது.இதையடுத்து தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் நாள் ஒன்றுக்கு 22ல் இருந்து 20 விடைத்தாளாக குறைக்கப்பட்டது, திருத்தும் மதிப்பூதியம் உயர்த்துவது உட்பட ஆசிரியர்களின் கோரிக்கையை தேர்வுத் துறை நேற்று ஏற்றதால், புறக்கணிப்பு கைவிடப்பட்டது.இந்நிலையில், கணினி ஆசிரியர்களின் ஒரு கோரிக்கைகூட நிறைவேறாததால், திருத்தும் பணியை அவர்கள் இன்று முதல்புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் கூறியதாவது:பி.ஜி., ஆசிரியர்கள் போல் கணினி ஆசிரியர்களும் கல்வி செயலர், இயக்குனர் என தொடர்ந்து மனுக்கள் அளித்தோம். பிற பாடங்கள் ஆசிரியர் கோரிக்கைகளை தேர்வுத்துறை ஏற்றுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 20 விடைத்தாள் என்பதை 15 ஆக குறைப்பது, உழைப்பூதியம் 3.75 ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாக உயர்த்த வேண்டும் உட்பட கணினி ஆசிரியர்களின் எந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

இதனால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உள்ளோம், என்றார்.விடைத்தாள் திருத்தும் பணி துவக்க நாளான நேற்று முதன்மை மற்றும் கூர்ந்தாய்வாளர் திருத்தினர். இதில் கணினி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இன்று உதவி தேர்வாளர்திருத்தும் பணி துவங்குகிறது. இந்நிலையில் கணினி ஆசிரியர்களின் ஒரு சங்கத்தினர் புறக்கணிப்பால், கணினிஇயக்க செயல்பாடுகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்?

வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமானவரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.
‘ஆதார்’ எண் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே அது கட்டாயம்என்று கூறியுள்ளது. ‘ஆதார்’ எண் பதிவுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில்வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாககருதப்பட்டு, ‘ஆதார்’ எண் பெற தகுதி உடையவர்கள் என்றுஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இவர்களுக்கு மட்டுமேவருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

தமிழ், ஆங்கிலத்தில் 'சென்டம்' ரத்து : 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி.

சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கியது.
முதல் நாளில், விடைத்தாள்களை முதன்மை விடை திருத்துனர்கள் திருத்தி, விடை குறிப்புகளை ஆய்வு செய்தனர்.ஏப்., 2 முதல், உதவி திருத்துனர்கள் மூலம் திருத்தம் நடக்கிறது. முந்தைய ஆண்டுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் சரிவர எழுத சிரமப்பட்டதும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், தமிழில் திணறியதும் தெரிந்தது. எனவே, மொழி பாடத்தில், 'சென்டம்' மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.'சென்டம்' வழங்க, பல கட்ட மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. உச்சகட்டமாக, இந்த ஆண்டு, 100 மதிப்பெண் வழங்கு வதையே, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது.

அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்புபக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான கட்டம் மாற்றப்பட்டு, 99 என்ற இரண்டு இலக்கம் எழுதும் வகையில், மாற்றப் பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில், புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மற்ற பாடங்களுக்கு, 100 என்று எழுதும் வகையில், மூன்று கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலத்திற்கு, 'சென்டம்' மதிப்பெண் இருக்காது, என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெயில் தாக்கம்: பள்ளிகளுக்கு முன்கூட்டியே லீவு?

கோடை வெயிலின் உச்சத்தால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது.
பிளஸ் 1 மாணவர்களுக்கும்,தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 29 வரை தேர்வு நடத்தி, அதன்பின், விடுமுறை அறிவிக்க, திட்டமிடப்பட்டிருந்தது.

திட்டம் : ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,முன்கூட்டியே கோடை விடுமுறை விட, தனியார் பள்ளிகள் திட்டமிட்டன. பல பள்ளி வளாகங்களில், 'வர்தா' புயலால், மரங்கள் விழுந்து, நிழல் இல்லாமல், வெட்ட வெளியாக காணப்படுகின்றன. இதனால், வகுப்பறைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதேபோல், பெரும்பாலான மாவட்டங் களில்,தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதையும் சமாளிக்க முடியாமல், பள்ளி நிர்வாகங்கள் அவதிப்படுகின்றன. இந்த காரணங்களை பள்ளிகள் முன் வைத்ததால், கோடை விடுமுறையை முன்கூட்டியே விட,கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.

தேர்வுகள் : எனவே, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், ஏப்., 14க்குள் விடுமுறையை அறிவிக்க முடிவு செய்து, தேர்வுகளை விரைவுபடுத்தியுள்ளன. பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று முன் தினம் தேர்வுகள் துவங்கின. ஏப்., 21ல், தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படுகிறது.

தொடக்க பள்ளிகள் தவிப்பு : தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். இதனால், ஏப்., 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''கோடை வெயிலை கருதி, தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் சிறார்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை விட, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த பள்ளிகள், பெரும்பாலும் கிராமங்களில் இருப்பதால், மாணவர்கள் கோடை வெயிலில், நீண்ட துாரம் வந்து செல்வது தவிர்க்கப்படும்,'' என்றார்.

CPS : பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி

பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின்,கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தைஅரசு நீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இரு ஆண்டுகளுக்கு முன், தொடர் போராட்டம் நடத்தினர். 2016, சட்டசபை தேர்தலுக்கு முன், பிப்.,19ல், பழைய பென்ஷன் திட்டத்தைகொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு அமைக்கப்பட்டு, ஓர் ஆண்டை தாண்டிய நிலையில்,இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை, குழுவின் ஆயுட்காலம் முடிவதும், பின், ஆயுள் காலத்தை நீட்டிப்பதும் வழக்கமாக உள்ளது. வழக்கம் போல், டிச.,25ல், குழுவின் ஆயுட் காலம் முடிந்தும், நீட்டிக்கப்படவில்லை. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், குழுவின் ஆயுட்காலத்தை, மூன்று மாதங்கள் நீட்டித்து, மார்ச், 7ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அவகாசமும் முடிந்து, 11 நாட்கள் ஆகிறது. இன்னும், நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை; குழுவின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. அதனால், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு தொடருமா அல்லது அப்படியே கிடப்புக்கு போகுமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கவலையில் உள்ளனர்.

விடிவு கிடைக்குமா?

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, 2003 முதல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலானது. இதில், 4.55 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களில், ஓய்வு பெற்றோர், இறந்தோர், 6,000 பேர். அவர்களுக்கு இன்னும் பணப்பலன் கிடைக்கவில்லை

* திட்டம் அமலான பின், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பங்களிப்பு தொகைவசூலிக்கப்பட்டது. அவற்றின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.