யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/5/17

பிளஸ் 2 'மார்க் ஷீட்' பள்ளிகளில் கிடைக்கும்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, 12ல் வெளியானது. நேற்று முன்தினம் முதல், தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.

இன்று முதல், மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கு, தேர்வு மையங்களிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன?

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.


இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.

4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.

7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.

3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.

4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.

5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி

பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது. மாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.

பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் - W. P. NO - 25677/2010 in M. P. NO - 1 & 2 /2011, R. Yoga Priya Vs Director of School Education) சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

"Since the petitioner has already published her name change in the Govt. Gazette as stated Supra, the name is sufficient for all purposes ans everybody is bound to accept the same as the changed name of the petitioner. Hence there is no error in the order passed by the respondent i. e) Director of School education refusing top carry our the name (or) Initial Change in the Certificates in the Certificates as requested by the petitioner ".

சாதித் திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழின் படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் அவ்வாறான திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழே இறுதியானதும், ஏற்றுக்கொள்ளதக்கதும் ஆகும்.

பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதர அரசு துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம் வருவாய் நிர்வாக அலுவலர், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம், சென்னை - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.

உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலான தீர்ப்பின் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் அன்னார் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால், அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் சார்ந்த மேல்முறையீட்டு மனு உடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் கோரும் கருத்துக்களை பரிந்துரைக்கக்கூடாது.

வழக்குகளில் தலைமைச் செயலாளர் / கல்வித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் (One of the Department) அவர்களை நீக்கம் செய்திட (Deletion) மனு செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இதர துணைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.

பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்றவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் / ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்றவர் என்றால் ஆதிதிராவிட இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துக்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

முற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரிடையாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

இன்ஜி., கலை கல்லூரிகளில் பிளஸ் 1 பாடம் கட்டாயமானது

பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு நடத்தப்படாததால், கல்லுாரிகளில், பிளஸ் 1 பாடங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 


அதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இதை, தனியார் பள்ளிகள் தவறாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடங்களையே நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே நடத்தினர். 

அதனால், உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள், அங்கு அடிப்படை பாட அறிவு இல்லாமல், பருவ தேர்வில் தோல்வி அடைகின்றனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து, அண்ணா பல்கலையின் இன்ஜி., படிப்பில் சேர்ந்தவர்களில், முதல் செமஸ்டர் தேர்வில், 22 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. 

தேர்ச்சி பெற்றவர்களில் பலர், குறைந்த மதிப்பெண்ணே பெற்றனர்.இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கும், கட்டாய பொதுத்தேர்வு நடத்த வேண்டும். 

பிளஸ் 1 மதிப்பெண்ணையும், உயர்கல்விக்கான, ’கட் ஆப்’ மதிப்பெண்ணாக்க வேண்டும் என, அண்ணா பல்கலை சார்பில், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, பிளஸ் 1 படிக்காமல், பெரும்பாலான மாணவர்கள், பிளஸ் 2 முடித்துள்ளதால், அவர்களுக்கு, மீண்டும் பிளஸ் 1 பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக, அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளிலும், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், பிளஸ் 1 பாடம், கட்டாய தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 

முதல் செமஸ்டரில், 60 வகுப்புகளில், பிளஸ் 1 பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளை, இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், ’பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற முன் தயாரிப்பு வகுப்புகளில் நடத்தி முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 பாடம் தெரியாமல், எந்த மாணவருக்கும், இன்ஜினியரிங் பாடம் நடத்த வேண்டாம் என, பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகப் பள்ளிகளில் விரைவில் புதிய பாடத் திட்டம் - அதிரடி காட்டும் செங்கோட்டையன்

தமிழக பாடத் திட்டங்களில் மாற்றம், அரசுப் பள்ளிகளுக்கான புதுத் திட்டங்கள், நடப்பாண்டு தமிழகக் கல்வித் துறைக்கு ஒதுக்கியுள்ள நிதி போன்றவற்றைப் பற்றி தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு..!
அப்போது அவர், 'இதுவரை 40,000 பேர் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். வருகின்ற 26-ம் தேதி வரை இந்தத் திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கப்படும். இந்தாண்டு கல்வித்துறைக்காக  26,913 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் 12-ம் வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளிகள் 36,830 இருக்கின்றன. இந்த அரசுப் பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரவும், புதிய கட்டடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். 6 ஆண்டு காலத்தில் நபார்டு திட்டம் மூலம் 12,000 கோடி ரூபாய் பெற்று திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் ஆசிரிய அமைப்புகள் அரசு பள்ளிகளுக்கு முன்வந்து உதவிகளைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம். உதவி செய்ய விரும்புவோருக்கு ஏதுவாக ஒரு பிரத்யேக குழு அமைக்க உள்ளோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் திகழும். தூய்மையைப் போற்றும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களை பள்ளிகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்த உள்ளோம்.

ஏறத்தாழ 12 ஆண்டுகளாக பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை என்று கூறப்பட்டது. இன்னும் 3 ஆண்டுகளில் எந்த வகுப்புகளுக்கு எப்படி பாடங்களை மாற்றலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 2 நாள்களில் கொள்கை முடிவு எடுக்கப்படும். வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் வெளியிட்ட இரு நிமிடங்களில் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவவொரு ஆண்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். இதை கோடை விடுமுறையிலேயே நடத்தினால் ஆசிரியர்கள் புதிய பணியிடங்களில் பணியேற்க வசதியாக இருக்கும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.  கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக கோடை விடுமுறை திறந்த பின் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்த உத்தரவிட்டார்.


இதன்படி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுகக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற மே 19ந் தேதியும், நடுநிலைப்பள்ள தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் மே 22ந் தேதியும், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் 23ந் தேதியும் நடைபெற உள்ளது. 24ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், 25ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கான கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 26ந் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மே 29 மற்றும் 30ந் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல் இந்தாண்டு அனைத்து விபரங்களும் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள. எனவே விதி மீறல் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

கோடை  வெயில் வாட்டி வதைப்பதால் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது

கடந்தாண்டுகளில் நடந்த கல்தாய்வு இடங்களில் உரிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை;. குறிப்பாக கழிப்பிட வசதியில்லாததால் பெண் ஆசிரியர்கள் மிகவும் சிரமதிதிற்குள்ளாயினர். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் சுத்தமான குடி நீர் வசதியுடன் ஆசிரியர்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். கலந்தாய்வை நேர்மையாக நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை காலிப்பணியிடங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறிவிப்புகளையும் ஒலி பெருக்கியில் தெளிவாக அனைத்து ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் மேல் முறையீடுகளை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் உடனடியாக விசாரித்து கலந்தாய்வை தொய்வின்றி நடத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின் விவரங்களை http://www.deetn.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய
தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

17/5/17

6 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு சிக்கல் !!

ஐ.டி. நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்குள் 6 லட்சம் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது._

_பெங்களூருவைச் சேர்ந்த ஹெட் ஹண்டர்ஸ் என்ற முன்னணி நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மிகாந்த், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த ஆண்டு 56 ஆயிரம் ஐ.டி. பணியாளர்கள் 
வேலைஇழக்க இருப்பதாகத் தெரிவித்தார். உண்மையில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணியாளர்கள் முதல் 2 லட்சம் பணியாளர்கள் வரையில் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இதன் மூலம் 5 லட்சம் முதல் 6 லட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்._

_மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத ஐ.டி. ஊழியர்களே பணியிழக்க நேரிடும் என்றும் லக்ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்._

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன??

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை 
(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.

4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.

7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.

3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.

4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.

5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் பள்ளிகல்வித்துறை செயலாலர் திரு. உதயசந்திரன் !!

எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்.  உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.ப அவா்கள்.

 பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப்  பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..

56,000 ஐ.டி ஊழியர்கள் வேலை பறிபோகும் அபாயம்" : என்னதான் காரணம்?

இந்தியாவைச் சேர்ந்த 7 முன்னணி ஐ.டி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 56,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளன.
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், விப்ரோ,டெக் மகேந்திரா,காக்னிசண்ட்,டி.எக்ஸ்.சி டெல்னாலஜிஸ், கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களில் சுமார் 1.24 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4.5 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப அந்த நிறுவனங்கள் தற்போது முடிவெடுத்துள்ளன. அதாவது கிட்டத்தட்ட 56,000பேருக்கு லே ஆஃப் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 டி.எக்ஸ்.சி நிறுவனம் தங்களிடம் வேலை பார்க்கக் கூடிய 1,70,000 ஊழியர்களில் 10,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக, பிரஷர்ஸ் எனப்படும் புதிய, சம்பளம் குறைவாக பெறக் கூடிய பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர்.

இந்த வேலை நீக்க நடவடிக்கையின் முதல் கட்டமாக, லே ஆஃப் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஊழியர்கள் ”பக்கெட் 4 ”என்ற பெயரில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உயர் பதவிகளில் உள்ள 3000 மேலாளர்களும் அடக்கம்.ஆனால் இந்த வேலை நீக்க நடவடிக்கைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடியது எனவும் பெர்பார்மென்ஸ் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறும் எனவும் ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் முன்னேறி வரும் தொழில் நுட்பம் மற்றும் வியாபார நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள, இந்த லே ஆஃப் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என இந்திய ஐ.டி நிறுவனங்கள் காரணம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.17-இல் (உள்ளூர் வரி தவிர்த்து) இருந்து ரூ.68.26-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.60.71-இல் இருந்து, ரூ.58.07-ஆக விலை சரிந்துள்ளது.
இதேபோல், தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.09-இல் இருந்து ரூ.65.32-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.57.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.54.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.72க்கும், டீசல் ரூ.60.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.21-க்கும், டீசல் ரூ.57.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததால், இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FLASH NEWS : போக்குவரத்து ஊழியர்கள் மீது "எஸ்மா" சட்டம் - ஐகோர்ட் உத்தரவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் சட்டவிரோதம் ஆனது. உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடன் சென்னையில் இன்று (16.05.2017) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!!.

1. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த முடிவு. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் ஈடுபடுத்த முடிவு.

2. தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பதிவுத்தாள் (RECORD SHEET) பதில் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படும் ( ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு).

3. வரும் ஆண்டுமுதல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் சிறப்பான திட்டமிடலுடன் வழங்கப்படும்.

தகவல்:-பெ.பரமசாமி,
மாநில தலைவர்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

தமிழகத்தில் 7வது ஊதியக்குழு இன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது

**7வது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

**இதில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம்,ஓய்வூதிய விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

**மேலும் வரும் மே 26,27 மற்றும் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட  மற்றும் அங்கிகரிக்கப்படாத அலுவலர் மற்றும் ஓய்வூதிய நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

7/5/17

GPF/TPF Account Statement-Now Available for the year 2014-15 & 2015-16

உங்கள்  TPF  கணக்கை  
நீங்களே   சரிபார்க்க  வேண்டும்.நீங்கள்உடனடியாக 
செய்யவேண்டியவை :



www.agae.tn.nic.in   என்ற   முகவரிக்குச்   சென்று ,

download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option  ஐ  click  செய்யுங்கள் .


Log in page  வரும் ,  அதில்

GPF no : ( உங்கள்  TPF  எண் .)

Dob :(  உங்கள்   பிறந்த   தேதி ).

Suffix : PTPF

என   கொடுத்து  login  செய்யுங்கள் .


உங்கள்   பெயருடைய  AG  பக்கம்   தோன்றும் .  அதில்

view account slip  ஐ  click  செய்தால்  financial year கேட்கும் ,  அதில் 2014-15 / 2015-16 select  செய்து  view account slip ஐ  click  செய்தால் 2014-15 / 2015-16 ஆம்   ஆண்டிற்கான  account slip download ஆகிவிடும் .  அதை  print  எடுத்துக்கொள்ளுங்கள் .


Print out  செய்த  account statement  ல்  -

1)  உங்கள்   பெயர்

2) TPF  கணக்கு   எண்

3)  பிறந்த   தேதி

4)  கருவூலத்தின்   பெயர்

5)  வட்டிவீதம்

6) 12  மாத   சந்தா   பிடித்தம்   பதிவுகள் ,  கடன்  செலுத்தியபதிவுகள் ,  பெற்ற   கடன்   பதிவுகள்

7) opening/closing balance

8)  விடுபட்ட   சத்தா   விவரங்கள்

9)  கணக்கு   அதிகாரியின்   கையொப்பம் .

என   எல்லா   விவரங்களையும்  சரிபார்த்துக்கொள்ளுங்கள் .



Mobile update  சென்று   உங்கள்  mobile  எண்ணை  பதிவுசெய்யுங்கள் .   கடைசியாக  logout  கொடுத்து  வெளியேறுங்கள் .

நீட்’ தேர்வு; மூக்குத்தி, மோதிரம், பைஜாமாவுக்கு தடை

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ’நீட்’ நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்போர், மூக்குத்தி, மோதிரம் போன்ற ஆபரணங்களும், குர்தா, பைஜாமா போன்ற உடைகளும் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், ’நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், ’நீட்’ தேர்வு நாடு முழுவதும், நாளை நடக்கிறது. 

தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர், இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார், திருநெல்வேலி உட்பட, நாடு முழுவதும், 103 நகரங்களில், ’நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடியும்; 9:30 மணி வரை மட்டுமே, தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வருவோருக்கு அனுமதி இல்லை. தேர்வு மைய வாசலில், ’நீட்’ இணையதள நேரப்படி இயங்கும் கடிகாரம் இருக்கும். 

அந்த நேரப்படியே தேர்வுகள் நடக்கும் தேர்வறைக்குள், பாஸ்போர்ட் வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ஹால் டிக்கெட்; போஸ்ட்கார்டு வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ’புரோபர்மா’ படிவம் மற்றும் தேர்வறையில் பதிவேட்டில் ஒட்டுவதற்கு, ஒரு பாஸ்போர்ட் வடிவ புகைப்படம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தேர்வறையில் பேனா வழங்கப்படும்  காலை, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, தேர்வறையில் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9:30 முதல், 9:45 மணி வரை, ஹால் டிக்கெட் சோதனை நடக்கும். 9:45க்கு வினா, விடைத்தாள் உறை வழங்கப்படும். 

9:55க்கு உறையை பிரித்து, 10:00 மணிக்கு தேர்வை எழுதலாம் 
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில், வினாத்தாள்கள் வழங்கப்படும். 

எந்த மொழிக்கு, தேர்வர்கள் விண்ணப்பித்தார்களோ, அதில் வினாத்தாள் வழங்கப்படும்; அதே மொழியில் பதில் எழுதலாம்.
பேனா, பென்சில், எழுத்தை அழிக்கும் ரப்பர், எந்த விதமான வெற்று அல்லது எழுத்துகள் கொண்ட காகிதம், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள். 

மொபைல்போன், பேஜர், இயர்போன், ஹெல்த் பேண்ட் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை 
தொப்பி, கைப்பை, தோள் பை, பெல்ட், கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவற்றையும் கொண்டு செல்லக்கூடாது 
’ஹாப் ஸ்லீவ்ஸ்’ என்ற, அரை கை உடைய, மெல்லிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். 

பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்ற சிறப்பு அலங்காரம் கூடாது. சல்வார் மற்றும் பேன்ட் அணிந்து வர வேண்டும். ஹீல்ஸ் அதிகம் இல்லாத சாதாரண வகை, செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். ஷூ, சாக்ஸுக்கு அனுமதி கிடையாது.

அடையாள அட்டை அவசியம்

’நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் சிலர், புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றி பதிவேற்றியுள்ளனர். எனவே, ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறி வந்த தேர்வர்கள், தங்களின் அசல் ஆதார் அட்டை அல்லது அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தேர்வு மையத்துக்கு கட்டாயம் எடுத்து வரவேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

ஏழை மாணவர்களுக்கு இலவச ’அட்மிஷன்’;அலட்சியத்தால் ரூ.320 கோடி நஷ்டம்

இலவச மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு உத்தரவை, தனியார் பள்ளிகள் பின்பற்றாததால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2010 ஆகஸ்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள், தனியார் பள்ளிகளில்,கட்டணமின்றி சேர்க்கப்பட வேண்டும்.


தனியார் பள்ளியில் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை, இத்தகைய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டியது கட்டாயம். ஐந்து வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணமின்றி கல்வி வழங்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கும். 

தமிழக அரசு, அந்த நிதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும். மத்திய அரசு சட்டப்படி, ஐந்து வயது முடிந்த குழந்தைகள், ஒன்றாம் வகுப்பில், இலவசமாக சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த சட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகத்தில் மட்டும் குளறுபடியான நடைமுறை உள்ளது.

அதாவது, தமிழக தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு என்ற பெயரில், எல்.கே.ஜி.,யில், இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதிலும், மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் தான் சேர்க்கப்படுகின்றனர். 

இது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சகம், பலமுறை எச்சரித்துள்ளது. ஆனாலும், தமிழக பள்ளிக் கல்வித் துறை கண்டுகொள்ளவில்லை. அதனால், 2011 முதல், மத்திய அரசு நிதி வழங்கு வதை நிறுத்தியது. எனவே, ஒவ்வொரு ஆண்டும், இலவச மாணவர் சேர்க்கைக்காக, தமிழக அரசுக்கு, 120 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. 

இது குறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது

மத்திய சட்டப்படி, ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வகையில், தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன்பின், இலவச மாணவர்சேர்க்கைக்கான நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். ஆனால், தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. அதனால், இதுவரை, 320 கோடி ரூபாயை இழந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்ல புத்தகம் ஒரு வழிகாட்டி!

நான்காக பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு கை காட்டி நான்கு திசைகளையும் காட்டிக் கொண்டு நிற்கும்! இந்த திசையில் போனால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் போனால் அந்த ஊருக்குப் போகலாம் என்று, நமக்கு நான்கு திசைகளில் எங்கு, எங்கு போக முடியும் என்று நமக்கு வழி காட்டும்!


அது ஒரு தகவல் பலகை... நமக்கு வழி காட்டுவது தான் அதன் வேலை!  அதே, நம்மை அந்தந்த ஊர்களுக்கு கூட்டிக்கொண்டு போய் விடாது; அது போல் தான் புத்தகமும்!  நல்ல புத்தகம் ஒரு வழிகாட்டி! அதுவும் ஒரு தகவல் பலகை தான்!

மனிதன் சுயமாக எப்படி முன்னேறுவது என்று ஆயிரம் புத்தகங்கள் வந்து விட்டன. பல வீடுகளில் அலமாரி நிறைய இது போன்ற புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பார்கள்.

கோடீஸ்வரன் ஆவது எப்படி?
சுலபமாக தொழிலதிபர் ஆக வேண்டுமா?
ஆட்சியைப் பிடிப்பது எப்படி?
நீங்கள் டாக்டர் ஆக வேண்டுமா?
என்ற பல தலைப்புகளில் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தப் புத்தகங்களில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாளில் பட்ட அனுபவங்களை, நமக்கு வழி காட்ட எழுதி வைத்திருப்பார்கள். அது நிச்சயம் நமக்குப் பயன்படும்!

எவ்வளவு நல்ல புத்தகமாக இருந்தாலும், நாம் அதைப்  படிப்பதினால் மட்டும் எந்த பயனும் இல்லை. அந்த புத்தகத்தில், அறிஞர்கள் சொன்ன, நல்ல கருத்துகளை நாம் செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே, அது நமக்கு பலன் தரும்!

அதில் சொல்லப்பட்ட வழிகளைப் பின்பற்றி அயராது பாடுபட வேண்டும். எந்த தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்து விட்டு முன்னேற வேண்டும். கோடிஸ்வரன் ஆக வேண்டுமா? என்ற புத்தகத்தை வாங்கி, அதைப்படித்து விட்டு அட்டை போட்டு புத்தக அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் ஏ.டி.எம்., மிஷினில் போய் கார்டை சொருகி பணத்தை அள்ளிக் கொண்டு வந்து விட முடியாது!

அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழி முறைகளை கடைப் பிடிப்பதற்காக, நம்மையே நாம் அர்ப்பணிக்க வேண்டும். ‘ஏட்டுச் சுரைக் காய் கறிக்கு உதவாது’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதைப் பலர் தவறாக இன்று வரை பொருள் கொண்டிருக்கிறார்கள். ‘இது போன்ற புத்தகங்கள் எல்லாம் நம் வாழ்க்கைக்கு உதவாது’ என்ற அர்த்தத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான சுரைக்காய் மட்டும் கறி ஆகி விடுமா? அதே பொரியலாக மாறி உங்கள் தட்டிற்கு வந்து விடுமா? நிச்சயம் வராது. அதை சுத்தம் செய்து பொடிப் பொடியாக அரிந்து அதற்கு தேவையான பொருட்களைச் சேர்த்து அடுப்பில் வைத்து சமைத்தால் மட்டுமே அதை கறியாக, நம்மால் சாப்பிட முடியும்!

அது போல் தான் இந்த வகை புத்தகங்களும், நிச்சயம் கறிக்கு உதவும்! எப்பொழுது? அதைப் படித்தவுடன், அதில் சொன்ன விஷயங்களை, புரிந்து கொண்டு, செயல்படுத்தி பாருங்கள்! நிச்சயம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமையும்! 

-துடுப்பதி ரகுநாதன்

இடைநின்ற குழந்தைகள் அதிகாரிகள் கள ஆய்வு

அருப்புக்கோட்டை வட்டார வளமையத்தில், 6-14 வயதுள்ள இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் கள ஆய்வு நடந்தது. 


பாலவநத்தம், குல்லுர்சந்தை, செம்பட்டி, பாலையம்பட்டி, பந்தல்குடி, சுக்கிலநத்தம் ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு திட்டம், சைல்டு லைன் (1098), உமன் தொண்டு நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தியது.

இதுவரை 45 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திட்ட அலுவலர் நல்லதம்பி, ஒருங்கிணைப்பாளர் ஜெயஅனிட்டா ஆலோசனை வழங்கினர். 

ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், சைல்டு லைன், உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சங்கீதா செய்தனர்.