யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/6/17

திறந்தவெளி கழிப்பிடம்: அரசின் புள்ளிவிவரத்தில் சறுக்கல்!

மத்திய அரசு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்கள் என்று அறிவித்ததில் 25 சதவிகிதக் கிராமங்களில் முழுவதுமாகக் கழிவறை கட்டி முடிக்கப்படவில்லை என்று மத்திய அரசின் ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால், மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று ஜூன் 19ஆம் தேதி ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘நாட்டில் 6,05,828 கிராமங்களில் 33 சதவிகித கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அண்மையில் மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நாட்டில் மொத்தம் 2,00,959 கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் 52,593 கிராமங்களில் 100 சதவிகிதம் கழிவறைகள் கட்டி முடிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அதனால், அனைத்து மாவட்ட அலுவலர்களும் 100 சதவிகிதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக மாற்ற தீவிரமாக செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது

ஐ.நா.,வின் டி.ஐ.ஆர்., கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!!!

ஐ.நா.,வின், டி.ஐ.ஆர்., கூட்டமைப்பில், 71வது நாடாக, இந்தியா இணைந்துள்ளது.

ஐ.நா.,வின் சர்வதேச சாலை போக்குவரத்து கூட்டமைப்பான, ஐ.ஆர்.யு., சர்வதேச தரத்தில், சரக்கு போக்குவரத்தை கையாள்வதற்கான, டி.ஐ.ஆர்., விதிமுறைகளை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது.


இது குறித்து, ஐ.ஆர்.யு., செகரட்டரி ஜெனரல் உம்பர்டோ டி பிரிட்டோ கூறுகையில், ''தரமான சரக்கு போக்குவரத்தை ஊக்குவித்து, வர்த்தக வளர்ச்சிக்கும், தெற்காசிய நாடுகளின் முன்னேற்றத்திற்கும், டி.ஐ.ஆர்., உதவுகிறது. இக்குடும்பத்தில், இந்தியா ஐக்கியமாகி உள்ளதை வரவேற்கிறேன்,'' என்றார்.

இந்த ஒப்பந்தம் மூலம், மியான்மர், தாய்லாந்து, வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன், ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து வசதிகளை, இந்தியா பெறும். அத்துடன், ஈரானின் சபஹர் துறைமுகம் மூலம், ஆப்கானிஸ்தான் மற்றும் யூரேஷியா பிராந்தியங்களுக்கும், சுலபமாக சரக்குகளை அனுப்ப முடியும். சீனா, 2016 ஜூலையில், டி.ஐ.ஆர்., விதிமுறைகளை பின்பற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதன் உறுப்பு நாடாக சேர்ந்தது.

ரேஷன் நுகர்வோருக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்'எப்போது: மாவட்டவாரியாக தயார் செய்வதால் தாமதம்!!!

சென்னையில் அச்சிடும் பணி நடப்பதால் மதுரை மாவட்டத்தில் தற்போது பயன்பாட்டிலுள்ள ரேஷன்கார்டுகளுக்கு பதில் 'ஸ்மார்ட் கார்டுகள்'
வழங்குவது தாமதமாகிறது.
இம்மாவட்டத்தில் ஒன்பது லட்சம் ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் 1387 
ரேஷன்கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் தற்போது பயன்பாட்டிலுள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதில் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கும் பணி நடக்கிறது. இதற்காக ஆதார் மற்றும் அலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்டங்களாக 3.95 லட்சம் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்பட்டுள்ளன. நேற்று நான்காவது கட்டமாக 48 ஆயிரத்து 500 'ஸ்மார்ட் கார்டுகள்' வந்துள்ளன. அவற்றை பத்து தாலுகாவிற்கும் பிரித்து அனுப்பும் பணியில் மாவட்ட வழங்கல் அலுவலர் பொன்ராம் தலைமையில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஆதார் மற்றும் அலைபேசி பதிவு செய்தவர்கள் 'ஸ்மார்ட் கார்டு' கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மதுரை உட்பட தமிழகத்தின் ஒன்றரை கோடிக்கும் மேலான ரேஷன்கார்டுகளுக்கு பதில் 'ஸ்மார்ட் கார்டுகள்' அச்சடிக்கும் பணி சென்னையில் நடக்கிறது. அவர்கள் மாவட்ட வாரியாக தேர்வு செய்து அச்சடிப்பதால் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்குவது தாமதமாகிறது.
இதற்கிடையில் வழங்கப்பட்டுள்ள 'ஸ்மார்ட் கார்டுகளில்' பெயர், போட்டோ மாறியிருப்பதாக கூறி, அதை மாற்ற கோரி ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்த அனைவருக்குமே 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படும். ஒரே நேரத்தில் மாநிலத்திலுள்ளவர்களுக்கு கார்டுகள் அச்சிடப்படுவதால் தாமதமாகிறது. இருப்பினும் இவற்றை விரைந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து 'ஸ்மார்ட் கார்டுகள்' வந்தவுடன் உடனடியாக நுகர்வோருக்கு வழங்குகிறோம். ஆதார் எண் பதிவு செய்யாதவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படாது.
ஆதார் மற்றும் அலைபேசி எண்கள் விடுபட்டவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும். 'ஸ்மார்ட் கார்டுகளில்' திருத்தம் செய்ய நினைப்பவர்கள் உணவுப்பொருள் வழங்கல் துறை இணையதளம் அல்லது அரசு பொது இ சேவை மையங்களை அணுகலாம். திருத்தம் செய்த பிறகு புதிய கார்டுகளை கட்டணம் செலுத்தி இ சேவை மையங்களில்
பெறலாம், என்றார்.

மாணவர்கள் சேராததால் 11 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது !!

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்கள் போல பெருகிவிட்டன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் படித்து வெளியேறுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பில் நுணுக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பது தெரியாது.


நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் கலை, அறிவியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். பி காம், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல் உள்ளிட்ட படிப்புகளை தேடி படிக்கின்றனர்.


கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் படுமோசமாக இருந்தது. அந்த கல்லூரிகளின் பட்டியல் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.


கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் பெரும்பாலும் அரசு கல்லூரிகளையே தேர்வு செய்து படிக்கின்றனர். குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்தான் தனியார் கல்லூரிகளில் அதிகம் பணம் செலவு செய்து படிக்கின்றனர்.


தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் இவற்றில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அடிப்படை வசதியில்லை. இவற்றில் படித்து வெளியேறும் மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை அறிவோ இன்றிதான் இருக்கின்றனர். இவற்றை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது. கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதனிடையே மாணவர்கள் சேராததால் வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தாங்கள் நடத்தி வந்த கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலையில் கல்லூரிகளை மூடுவதற்கும் அனுமதி கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பின.


சென்னையில் மேக்னா பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம்பாள் கட்டட வடிவமைப்பு கல்லூரி மூடப்படுகின்றன. கோவையில் விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி, சசி பிஸினஸ் ஸ்கூல் மூடப்படுகின்றன. மேலும் மகாராஜா பிரித்வி பொறியியல் கல்லூரியும் மூடப்படுகின்றன.


திருச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரி, ஆர்.வி.எஸ்- கே.வி.கே நிர்வாக கல்லூரி, திருச்சியில் சுவாமி விவேகானந்தா நிர்வாகவியல் கல்லூரியும் மூடப்படுகிறது. மதுரை சி.ஆர் பொறியியல் கல்லூரி, மைக்கேல் மேலாண்மை கல்லூரி மூடப்படுகிறது. நெல்லையில் ஜோ சுரேஷ் பொறியியல் கல்லூரியும் மூடப்படுவதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் உறுப்பினர்கள், மருத்துவ கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வின் முடிவில், தண்டலம் மாதா மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் அன்னை மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவ அறிவியல் ஆய்வு மையம், பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இரண்டு ஆண்டுகள் செயல்படுவதற்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டிஸ் !!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் 
இயக்குனர், தமிழக தலைமை, சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் ஜூலை 12 க்குள் பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் ஓட்டுநர்உரிமம் நிரந்தரமாக ரத்து: தமிழக அரசு முடிவு !!

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும்என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். 
ஹெல்மெட் அணியாமல் சென்றால் உரிய அபராதத்தை வசூலிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ, அதிவேகமாக வாகனத்தை இயக்கினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம்.செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதரடி முடிவெடுத்துள்ளது. சோதனை அலுவலர்கள் ஆய்வின் போது அசல் உரிமத்தை வாகன ஓட்டிகள் காண்பிக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு!!!

ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் !!

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.

பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)


(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

 (ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)

தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)

பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)

முன் ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.

(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)

(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)

(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)

பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு

ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)

குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்

 கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது

தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))

தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்

ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.

Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.

இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.

ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)

பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)

(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)

தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்

முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.

ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு

1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)

ஊதிய உயர்வுக்கு சேரும் காலம் –

பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல் பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)


 ஊதிய உயர்வுக்கு சேராத காலம்

மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)
அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்
C.P. சரவணன், வழக்கறிஞர்.  9840052475
www.sstaweb.com

SSLC Examination June /July - 2017 Hall Ticket download !!
Posted: 21 Jun 2017 07:30 AM PDT
Directorate of Government Examinations -SSLC Examination June /July - 2017 Hall Ticket download
http:http://210.212.62.109/dge/tndge/examprvht/prvappsht.aspx?C=INSTANT_SSLC
dge/tndge/examprvht/prvappsht.aspx?C=INSTANT_SSLC

20/6/17

இன்றைய (19.06.2017) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் !!

பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்"


110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.

அவை,

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம்.

* எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு

* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு

* 2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

* 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலை., உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.

* காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும்.

* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும்.

பிறதுறை அறிவிப்புக்கள் :

* மாதவரத்தில் ரூ.25 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

* வனத்துறை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.


* கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 43 அரசு கல்லூரிகளில் எம்ஜிஆர் பெயரில்
கட்டிடங்கள் கட்ட ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 

 புதிதாக 7 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேசுகையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்  

Flash News:பள்ளிகளில் வை-பை வசதி: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்
அளித்துள்ளார்.

 11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

SSA - 'INSPIRE AWARD' பதிவு செய்ய 30.06.2017 அன்று கடைசி நாளாகும் - இயக்குனர் செயல்முறைகள்

M.Phil Admission ( Part Time ) Notification | 2017 - 18

கோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா?

சென்னை : பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால்
ஆசிரியர்களின் விடுமுறைபற்றி விளக்கம் தர வேண்டும் என ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும், விடுமுறை எப்போது ஆரம்பிக்கும்? என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை மாணவர்களுக்கு மே மாதம் 1ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், மே மாதம் 7, 8, 9, 10, 11, 21 ,22, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றால், அதில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? அப்படி கலந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறை என்பது இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.


இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தலைமை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.

நில ஆவணத்தில் "ஆதார்" எண்ணை இணைக்காவிடில் "பினாமி" சட்டத்தின் கீழ் நடவடிக்கை!! - மத்திய அரசு!

CRC - PRIMARY & UPPER PRIMARY CRC- REG PROCEEDINGS.

UPPER PRIMARY CRC ON 01.07.2017& PRIMARY CRC ON 24.06.2017- திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

TRANSFER COUNSELLING FOR "BRTE" SOON

வட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நடைபெறும் - ARGTA

🌺 *இன்று (19.06.2017) நமது அனைத்து வளமைய பட்டடதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்  ( ARGTA for BRTEs )* சார்பில்

✳ *தலைவர்  மா.ராஜ்குமார்*

✳ *மாநில பொதுச் செயலாளர் தா.வாசுதேவன்*

✳ *மாநில பொருளாளர் நவநீதக்கிருஷ்ணன்*



ஆகியோர் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலருடன் இணைந்து நமது

✳ *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் (அ.க.இ) அய்யா*

✳ *மதிப்பிற்குரிய இயக்குநர் (ப.க.து) அய்யா*

✳ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் ( மே.நி.க) அம்மா*

ஆகியோரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகளை அளித்தோம்.


✅  *SPD அய்யா* அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக படித்து நீண்ட நேரம்  கந்துரையாடல் மேற்கொண்டார். அதிவிரைவில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். மாவட்ட ARGTA நிர்வாகிகள் தங்களை சந்திக்க விருப்பப்படுவதை மாநில நிர்வாகிகள் அன்புடன் கேட்டுக்கொண்டோம். இதனை ஏற்று CONFERENCE HALL இல் அனைவரையும் பார்த்து கந்துரையாடினார். மேலும் CONVERSION &COUNSELING குறித்து 90 % பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவை முடிந்ததும் அதிவிரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதியளித்த
*மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

✳ *மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அய்யா* அவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

✅ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் (மே.நி.க) அம்மா* அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க இரண்டாவதாக பெயர் பட்டியல் பாடவாரியாக தாயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் கந்தாய்வு நடைபெறும் என உறுதியளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

✳இன்று நிதி உதவி வழங்கிய மாவட்டங்கள்

✅ *திண்டுக்கள்       ₹53,500*
✅ *கரூர் ₹53,500*
✅ *வேலூர் ₹43,900*
✅ *தர்மபுரி ₹22,500*
✅ *இராமநாதபுரம் ₹20,000*
✅ *புதுக்கோட்டை ₹18,500*
✅ *விழுப்புரம் ₹11,500*
✅ *நீலகிரி ₹5,000*
✅ *பெரம்பலூர் ₹3,400*

✳ *இன்று சென்னைக்கு வருகைபுரிந்த ஒவ்வொரு மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*🙏🙏🙏🙏

🗣🗣🗣 *குறிப்பு புதியதாக தரம் உயர்த்தப்படும் உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்ட சில தினங்களுக்குள்ளோ /முன்னறோ நமது எண்ணம் நிறைவேறும்*🙏🙏🙏🙏


🙏 *STATE & DISTRICT  LEAVEL BEARERS,ARGTA.

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு !!

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு உருவாக்கி அதில் லட்சகணக்கானவர்களை குடியேற உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜூன் 16, 2017

நாம் வசிக்கும் இந்த பூமியில் 196 நாடுகள் உள்ளன, தற்போது இன்னொரு நாடு உதயமாக உள்ளது.

ஆனால் பூமியில் இல்லை, பூமிக்கு வெளியே விண்வெளியில் இந்த புதிய நாடு உருவாக உள்ளது.


ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நேஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு ‘அஸ்கார்சியா’ என பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் உருவாகும் புதிய நாடு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பாரீசில் அறிவித்தார். அதில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சர்வதேச அளவில் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். அறிவிப்பு வெளியிட்ட 20 நாளில் இவ்வளவு பேர் மனு செய்து இருந்தனர்.
அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி காலனியில் குடியேற அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விண்வெளி நாடு உருவாக்க கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அடிக்கல் அகார்சியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் மூலம் வருகிற செப்டம்பரில் அனுப்பபட உள்ளது. அது ஒரு ரொட்டி போன்ற அமைப்பில் 20 செ.மீ. நீளம் இருக்கும். 2.3 கிலோ எடை இருக்கும்.

தற்போது இந்த புதிய நாடு உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த புதிய நாடு விண்வெளியில் செலுத்தப்பட்டு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திடுக--வாசன் !!

பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்றுதமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சர்வ சிக்ஷா அபியான் (SSA) - அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 
2012 ஆம் ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதில் 5,904பணியிடங்கள் - தொழிற்கல்விக்கும் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், தையல், தோட்டக்கலை, வாழ்க்கைக் கல்வி, கட்டிடப் பணி), 5,392 பணியிடங்கள் உடற்கல்விக்கும், 5,253 பணியிடங்கள் ஓவியப் பாடத்திற்கும் (கலை கல்வி) ஒதுக்கப்பட்டது.இவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் வாரத்தில் 3 அரை நாட்கள் பணி என்ற நியமனத்தில் மாதம் 12 நாட்கள் பணிபுரியும்போது மாதச் சம்பளமாக ரூபாய் 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது.

பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி 7 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.பகுதிநேர ஆசிரியர்கள் பகுதிநேரம் மட்டுமே பள்ளிக்குச் செல்வதால் சம்பளம் போதுமானதல்ல என்ற நிலையில் கூடுதலாக வேறு பணிக்கு செல்ல முயற்சிக்கும் போது அதுவும் கிடைக்கவில்லை. மிக குறைவான சம்பளம் அவர்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும்போது அவர்களின் குடும்ப செலவிற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.இச்சூழலில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும், பல கட்டங்களில் பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். ஆனால் இதனையெல்லாம் தமிழக அரசு முக்கியப் பிரச்சினையாக கருதவில்லை என்பது வேதனைக்குரியது.

மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அப்பேற்பட்டவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போதிய ஊதியம் கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களின் நியாயமானகோரிக்கைகளை ஆளும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாமல், நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியபோது, 700 ரூபாய் ஊதிய உயர்வும், பணியிட மாறுதலும் வழங்குவதற்கு கையொப்பம் போட்டுவிட்டேன் என்று தெரிவித்தார்.ஆனால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சட்டப்பேரவைகூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு வரவில்லை.

இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மேலும் மத்திய அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகையை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. இதனை முழுமையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இன்ஜி., கவுன்சிலிங் 'ரேண்டம்' எண் நாளை(ஜூன்,20) வெளியீடு !!

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்ப பதிவு நடந்தது.

இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்பி உள்ளனர். இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நாளை வெளியாகிறது. ஒவ்வொரு மாணவருக்கும், 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும். அதை, இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம்.

ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படும்.