வட மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அசாம், மேற்குவங்கம், பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை கிழக்கு அசாமின் ஆளுநர் பன்வாரிலால் புரேஹித் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாமில் தற்போது மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளால் நிலைமை மோசமாக உள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களை நேரில் பார்வையிட்டேன் என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து ரயில்களும் வரும் 20-ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது.