அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, ‘குரூப் – 4’ தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வு, 2018 பிப்., 11ல் நடக்க உள்ளது. இதற்கான, ‘ஆன்-லைன்’ பதிவு, நவ., 14ல் துவங்கியது; டிச., 13ல் முடிகிறது. இதுவரை, கிராம நிர்வாக அதிகாரியான, வி.ஏ.ஓ., பதவிக்கு, தனியாக தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை, குரூப் – 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; தேர்வுக்கான பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு அளவில், சமூக அறிவியல், ஆங்கிலம், வரலாறு, பொது அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, வினாக்கள் இடம் பெறும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், குரூப் – 4 தேர்வு எழுத விரும்பும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 10ம் வகுப்பு பாட புத்தகங்கள் தேவை.
அவர்கள் பள்ளிக்கல்வித் துறையின் பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகம் வாங்க சென்றால், அங்கு புத்தகம் இருப்பு இல்லை என, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
ஆனால், தமிழக பாடநுால் கழகத்தில், சொற்ப எண்ணிக்கையில் புத்தகம் இருப்பு உள்ளதாகவும், அதையும் மாணவர்களுக்கே வழங்க உள்ளதாகவும், பாடநுால் கழகத்தினர் தெரிவித்துஉள்ளனர்.
தமிழக பாடத்திட்ட புத்தகங்கள், தனியார் கடைகளில் விற்பனை செய்யப் படாததால், குரூப் – 4 தேர்வர்களால், தனியாரிடமும், புத்தகம் வாங்க வழியில்லை. அதனால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், புத்தகம் வாங்குவது எப்படி என்ற தவிப்பில் உள்ளனர். சிலர், பழைய புத்தக கடையில் சென்று, 10ம் வகுப்பு புத்தகங்களை தேடி வருகின்றனர். எனவே, குரூப் – 4 தேர்வுக்கு, போதிய பாடப் புத்தகம் வழங்கும்படி, பாடநுால் கழகத்தை, டி.என்.பி.எஸ்.சி.,யும், அரசும் அறிவுறுத்தும்படி, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..