- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
18/11/17
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் அறிவித்தனர்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
நீதிமன்ற தலையீட்டால் போராட்டம் நிறுத்தப்பட்டது.பின்னர் கடந்த அக்டோபர் மாதம், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இந்தப் பரிந்துரை அடிப்படையில் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அது தொடர்பான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்தக் கூட்டத்தில், 21 மாத நிலுவைத் தொகையை தர வேண்டும். நீதிபதியை விமர்சித்ததாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.24-ம் தேதி தாலுகாதோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், வரும் 22-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடக்கும் வழக்கு விசாரணை முடிவு அடிப்படையில், அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதேபோல் ஜாக்டோ -ஜியோ கிரெப் சார்பில் நடந்த மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில், நவ.18-ம் தேதி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது என்றும், டிசம்பர் 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை விளக்ககூட்டம், டிச.7-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம், ஜனவரி 6-ம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
SG PAY - JACTTO GEO வழக்கில் Affidavit தாக்கல்
தோழமையுடன்,_
*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்
டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும்
செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
இந்தஇரண்டாம் கட்ட ஆய்வில் முறையாக பரமரிக்கபடாத பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்து உள்ளார். அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் உரிய தலைமை ஆசிரியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து
வருகிறது.
தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தசம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.
நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.
அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

17/11/17
பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கான மதிப்பெண் 100 ஆக குறைப்பு, அக மதிப்பீடு, வருகைப்பதிவுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய நடைமுறைகளும் 11-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வினாத்தாள் அமைப்பின்படி, மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மாதிரி வினாத்தாளின்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் வகுத்து பயிற்சி அளிக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
புதுடில்லி: மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
குரூப்- 4 தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா?
அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, ‘குரூப் – 4’ தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வு, 2018 பிப்., 11ல் நடக்க உள்ளது. இதற்கான, ‘ஆன்-லைன்’ பதிவு, நவ., 14ல் துவங்கியது; டிச., 13ல் முடிகிறது. இதுவரை, கிராம நிர்வாக அதிகாரியான, வி.ஏ.ஓ., பதவிக்கு, தனியாக தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை, குரூப் – 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; தேர்வுக்கான பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு அளவில், சமூக அறிவியல், ஆங்கிலம், வரலாறு, பொது அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, வினாக்கள் இடம் பெறும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், குரூப் – 4 தேர்வு எழுத விரும்பும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 10ம் வகுப்பு பாட புத்தகங்கள் தேவை.
அவர்கள் பள்ளிக்கல்வித் துறையின் பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகம் வாங்க சென்றால், அங்கு புத்தகம் இருப்பு இல்லை என, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
ஆனால், தமிழக பாடநுால் கழகத்தில், சொற்ப எண்ணிக்கையில் புத்தகம் இருப்பு உள்ளதாகவும், அதையும் மாணவர்களுக்கே வழங்க உள்ளதாகவும், பாடநுால் கழகத்தினர் தெரிவித்துஉள்ளனர்.
தமிழக பாடத்திட்ட புத்தகங்கள், தனியார் கடைகளில் விற்பனை செய்யப் படாததால், குரூப் – 4 தேர்வர்களால், தனியாரிடமும், புத்தகம் வாங்க வழியில்லை. அதனால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், புத்தகம் வாங்குவது எப்படி என்ற தவிப்பில் உள்ளனர். சிலர், பழைய புத்தக கடையில் சென்று, 10ம் வகுப்பு புத்தகங்களை தேடி வருகின்றனர். எனவே, குரூப் – 4 தேர்வுக்கு, போதிய பாடப் புத்தகம் வழங்கும்படி, பாடநுால் கழகத்தை, டி.என்.பி.எஸ்.சி.,யும், அரசும் அறிவுறுத்தும்படி, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை!!!
சென்னை: ‘நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது’ என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், ‘பல்கலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இது குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக் கூடாது. பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இது குறித்து, டிச., 3க்குள், செயல்படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாநில உயர் கல்வித் துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும், யு.ஜி.சி., விதிகளின்படி, எந்த தனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக் குறிக்குள், ‘பல்கலைக்கு இணையாக கருதப்படும்’ என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.
அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற் கான ஆதாரத்துடன், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை!!!
புதுடில்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, பல படிநிலைகளில் வெற்றி பெறும் தேர்வாளர்களுக்கு, அதன் பின், பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் செய்யவும், தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்யவும், பஸ்வான் கமிட்டி, ஆக., 2016ல், யு.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை ஆராய்ந்த, யு.பி.எஸ்.சி., மார்ச்சில், தன் தரப்பு பரிந்துரை அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், பஸ்வான் கமிட்டி, யு.பி.எஸ்.சி., அறிக்கைகளின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகள் மற்றும் தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி வழக்கு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த இடைநிலை பணிமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் ெசய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
">ஆசிரியர் தகுதித் தேர்வு உத்தரவிற்குப் பிறகு கடந்த 2012 நவம்பர் 12ம் தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தரப்படும் ஊதியத்திற்கும் 2009 ஜூன் 1ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.
இந்த முரண்பாடுகளை நீக்குமாறு தமிழக அரசுக்கு மனு கொடுத்தோம். எங்கள் மனு ஏற்கப்படவில்லை. எனவே, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களையுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் தருமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்: உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது
தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது.
இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசுதேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.
அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும்மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும்.இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் பழைய ஆவணங்களை தேடிப்பிடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னரே மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்று அளிக்கப்படும்.
அண்மைக் கால சான்றிதழ்களை தேர்வுத்துறையினர் விரைவில் கண்டறிய முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களாக இருப்பின் பழைய ஆவணங்களை தேடிப்பிடிப்பதே மிகப்பெரிய பணியாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மைத்தன்மை சான்று கிடைக்க காலதாமதமாகும். இதன் காரணமாக, அவர்கள் தகுதிகாண் பருவம் முடிப்பதும், பணிவரன்முறைபெறுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவர்கள் பல்வேறு பலன்கள் பெறுவதும் பாதிக்கப்படலாம்.
காலதாமதத்துக்கு முற்றுப்புள்ளி
இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்கிஉள்ளது. அதன்படி, கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரையில் ஒரு கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அந்த அதிகாரி மேலும் கூறும்போது,"டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் பிரத்யேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசிய எண்) வழங்கப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைனிலையே ஒருநொடியில் ஆய்வு செய்துவிட முடியும். மேலும், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்தமாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் மூலம் ஆன்லைனில் எப்போதுவேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - தமிழக அரசிற்கு உத்தரவு!!!
2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி SSTA அமைப்பு சார்பில் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு பற்றி செய்தி பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்களில் தற்போது வெளிவந்திருக்கின்றன. ஒரு சில சேனல்களில் சில தவறுகளோடு செய்திகள் வந்ததை மாநில ஒருங்கிணைப்பாளர் அந்தந்த தொலைக்காட்சியின் பொறுப்பாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளதால் அந்த பிழைகளை சரிசெய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)