யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/1/18

வேலைவாய்ப்பு: மத்திய நீர் ஆணையத்தில் பணி!

                                            
                                             

மத்திய நீர் ஆணையத்தில் காலியாக உள்ள ஸ்கில்டு வொர்க் அசிஸ்டன்ட்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Skilled Work Assistant.

காலியிடங்கள்: 21

ஊதியம்: ரூ.18,000.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ.

கடைசித் தேதி ; 23.2.2018

மேலும் விவரங்களுக்கு http://www.cwc.nic.in/என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

TNOU-BEd ADMISSION -NO ENTRANCE EXAM-NEW METHOD FOR The Selection of candidates will be on the basis of the marks secured in the qualifying UG / PG Degree examination.

தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை!!!

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 
'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

 *தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்..  புதுமை!*

கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த
திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.
பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை
பயன்படுத்தப்படும்.

திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,
மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

*வருகைப்பதிவு எப்படி?*


புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,
ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஞாபகம் இருக்கிறதா?? தேர்வின் பெயர்களும் தேதிகளும்...

அரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணிபுரிந்து பணிதுறப்பு (Resign ) செய்து மற்றொரு அரசு உதவி பெரும் பள்ளியில் பணிமுறிவின்றி சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த பள்ளியில்பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து பெறலாம் -என்பதற்கான அரசாணை!!!

FLASH NEWS - SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENT REG SCHOOL TEAM VISIT & DISTRICT WISE SCHOOL LIST PUBLISHED...

30/1/18

ஸ்டார்ட்அப் திட்டத்தில் 60,000 கிராமங்கள்!

ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தில் 60,000 கிராமங்களை 
இணைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் ஐ.ஐ.டியில் நடந்த ஸ்டார்ட்அப் மாஸ்டர் கிளாஸ் திட்டம் குறித்த நிகழ்வில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உத்தரப்பிரதேசத்தில் உள்ள 60,000 கிராமங்களை ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கிராமங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு செல்லும். மேலும், கிராமப்புற மக்களுக்கு வீடுகளிலிருந்தே வேலை செய்யும் வகையிலான வாய்ப்புகளை இத்திட்டம் ஏற்படுத்தித் தரும். தொழில்நுட்ப வளர்ச்சிகளை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தவுள்ளோம். ஐஐடியில் பயிலும் மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் உள்நாட்டிலேயே தங்கி நம்நாட்டு மேம்பாட்டுக்குப் பணிபுரிய வேண்டும் என்று கூறினார்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் கங்கா நதியின் மாசுபாடு குறித்து பேசிய அவர், “கங்கா நதி நம் மாநிலத்தின் வழியாக அலகாபாத்தின் பிரயக்ராஜ்ஜை அடைகிறது. இந்த நதி மிகவும் மாசடைந்துள்ளது. ஐஐடி மாணவர்கள் பங்களிப்பு அளித்தால் நதியைத் தூய்மையாக்கலாம்” என்றார். ரூ.7,876.17ஞஞ கோடி செலவில் அங்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு இவ்வாறு பேசினார்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள்!

மாணவர்களுக்குத் தேவைப்பட்டால், சிபிஎஸ்இ வாரியம் அவர்களுடன் 
தொடர்புகொள்ள வரவேற்கிறது.

தேர்வு முடிந்தபின் வெளியே வரும் மாணவர்கள் கூட்டமாக ஒன்றாக கூடி வினாத்தாள் குறித்து விவாதிப்பார்கள். அதில், சில கேள்விகள் கடினமானதாகவும் சில எளிமையானதாகவும் இருக்கும். குறிப்பாக, ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் பரிந்துரைக்கப்பட்ட பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டவையாக இருக்கும். இப்படி, தங்களுக்குள்ளே பேசி குழப்பம் அடையாமல், சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது அதுகுறித்து சிபிஎஸ்இ வாரியத்திடம் கருத்து கேட்கலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது கேள்வித்தாளில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் அதுகுறித்த கருத்துகளை அனுப்ப அனுமதிப்பதற்கான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதிய 24 மணி நேரத்துக்குள் தங்களது கருத்துகளை அனுப்பலாம்.

இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களுக்கு வழிக்காட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி பிற முக்கிய வழிகாட்டுதல்களையும் கோடிட்டுக்காட்டுகிறது. சுற்றறிக்கையின்படி, மதிப்பீட்டுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆசிரியர் அதற்கு செல்லவில்லை என்றால், அந்தப் பள்ளிக்கூடம் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியத்தால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்நிக்தா ராணி பத்ரா கூறுகையில், “இதற்கு முன்பு, வினாத்தாளில் இருக்கும் பிரச்னை அல்லது பிழைகள் குறித்து தெரிவிப்பதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லை. தற்போது, கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம் எளிதாக நாங்கள் வாரியத்தை அணுக முடியும். விடைத்தாளின் மதிப்பீட்டின்போது அவர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதனால் மாணவர்களில் யாரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை” எனக் கூறினார்.

கழிவறை: பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளைப்
பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக தூய்மை நகரங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, தூய்மை நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பங்கேற்ற 434 நகரங்களில் சென்னை மாநகரத்துக்கு 235ஆவது இடம் கிடைத்தது. இந்தாண்டு தூய்மை நகர கணக்கெடுப்பு தொடங்கியிருக்கிறது. இது மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில், நகர உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் நேரடி கள ஆய்வு, பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் தூய்மை நகரம் தெரிந்தெடுக்கப்படும். இதற்கு மொத்தம் நான்காயிரம் மதிப்பெண்.

இந்த நிலையில், அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தோராயமாக 400 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த உத்தரவு குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும். இது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசின் அறிவுரையின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வருவாய்த் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

அரியலூரில் கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களை 
நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கில் வருவாய்த் துறை நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடையார்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘அரியலூர் மாவட்டத்தில் 24 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ராஜேந்திரனுக்கு வேண்டப்பட்டவர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டனர்’ எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலாளர், அரியலூர் மாவட்ட ஆட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் தாலுகா தாசில்தார்கள் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்குத் தள்ளிவைத்தார் நீதிபதி.

வேலைவாய்ப்பு: தாதுவள மேம்பாட்டுக் கழகத்தில் பணி!!!

                                    
தேசிய தாதுவள மேம்பாட்டுக் கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பராமரிப்பு உதவியாளர் 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பராமரிப்பு உதவியாளர்

பணியிடங்கள்: 44

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: 12.02.2018

மேலும் விவரங்களுக்கு www.nmdc.co.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

மார்ச் 17ல் தீக்குளிப்பு :ஆசிரியர்கள் அதிரடி!!!

திருச்சி:'தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவில், முதுநிலை ஆசிரியர்களுக்கு 
இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மார்ச், 17ம் தேதி, தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் விபரம்:தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவின், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின், எட்டாவது ஊதியக் குழுவிலும், முதுகலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில், மார்ச், 17ம் தேதி, 1,000 ஆசிரியர்கள் சென்னையில் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவர்.மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் புறக்கணிக்கப்படும். மேல்நிலை கல்விக்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பஸ் கட்டண குறைப்பு தமிழகம் முழுவதும் இன்று அமல்!!!

சென்னை: பஸ் கட்டண கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை 
கொஞ்சம் குறைத்துள்ளது.
உயர்வுக்கு, பல தரப்பிலும்
இதன்படி, கி.மீ.,க்கு, சாதா பஸ்களில், இரண்டு பைசா; விரைவு மற்றும் சொகுசு பஸ்களில், ஐந்து பைசா, அதிநவீன சொகுசு பஸ்களில், 10 பைசா, விரைவு, 'ஏசி' பஸ்களில், 10 பைசா என்ற அளவில், கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்ச கட்டணம், ஐந்திலிருந்து நான்கு ரூபாயாகிறது. இந்த கட்டண குறைப்பு, மாநிலம் முழுவதும் இன்று(ஜன.,29) முதல் அமலுக்கு வருகிறது.

டாட்டூ' இருந்தால் வேலை கிடையாது! இந்திய விமானப் படை உத்தரவு

புதுடில்லி: 'பச்சை குத்துவது போல் உடலில், '
டாட்டூ' வரைந்திருந்தால் வேலை கிடையாது என, இந்திய விமானப் படை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையே, விமானப் படையில் வேலையில் சேருவதற்காக தேர்வு எழுதி, மருத்துவப் பரிசோதனை முடித்த ஒருவர், பணியில் சேரும்போது, அவரது உடலில் டாட்டூ வரையப்பட்டிருந்ததால், பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதை விசாரித்த, உயர் நீதிமன்றம், 'விமானப் படையின் உத்தரவு செல்லும். வேலைக்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தபோது, டாட்டூ வரைந்திருந்தால், வேலை கிடையாது என கூறப்பட்டுள்ளது. அதனால், வேலை நியமனத்தை ரத்து செய்தது செல்லுபடியாகும்' என, தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகதளத்தில் போட்டோ போடாதீங்க! விவாகரத்து வழக்கில் உத்தரவு!!!

புதுடில்லி: மஹாராஷ்டிராவில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த, 
கணவன், மனைவிக்கு, விவாகரத்து வழங்கிய உச்ச நீதிமன்றம், எதிர்காலத்தில், தங்களுக்கு இடையிலான புகைப்படங்களை, சமூக வலைதளம் உட்பட எங்கும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இன்ஜினியருக்கும், அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்தனர். இருவரும், ஒருவர் மீது ஒருவர், விவாகரத்து உட்பட பல்வேறு வழக்குகளை தொடுத்தனர். இறுதியில், இவர்களின் விவாகரத்து வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களை முழுமையாக கேட்ட பின், நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மனைவியின் பராமரிப்பு செலவுக்காக, இரண்டு மாதங்களில், 37 லட்சம் ரூபாயை, கணவர் வழங்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில், தங்களுக்கு இடையிலான புகைப்படங்களை, சமூக வலைதளம் உட்பட எந்த இடத்திலும் வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர். இருவரும், பரஸ்பரம் தாக்கல் செய்த புகார் மனுக்கள் அனைத்தையும், நீதிபதிகள் ரத்து செய்து உள்ளனர்.

முறைகேடு பிரச்னையால் டி.ஆர்.பி., திணறல்; புதிய தேர்வுகள் தள்ளிவைப்பு!!!

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னை யால், பேராசிரியர் நியமனத்திற்கான 
தேர்வு நடத்துவதும், சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு களை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், செப்டம்பரில், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது; இதில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வில் பலர் முறைகேடாக மதிப்பெண் பெற்றிருப்பதாக, டி.ஆர்.பி.,க்கு
கடிதங்கள் வந்தன. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர், உமா விசாரணை நடத்தினார். அதில், பல தேர்வர்கள் முறைகேடு செய்து, மதிப்பெண்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, தேர்வு முடிவுகளை ரத்து செய்து, டி.ஆர்.பி.,யின் பொறுப்பு தலைவர், ஜெகனாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து, அனைத்து தேர்வர் களின் விடைத்தாள் நகல்களும், விடைக்குறிப்பு களும் இணையதளத்தில் வெளியிட பட்டன. முடிவில், தேர்வர்கள் தங்கள் விடைத் தாள்களை... தாங்களே மதிப்பிட்டு பார்த்ததில், 200 பேருக்கு, அவர்களின் விடைத் தாளில் உள்ளதை விட, பட்டிய லில் அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது.


இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பள்ளி ஆசிரியர், தனியார் தேர்வு பணி நிறுவன ஊழியர் உட்பட, ஐந்து பேரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துறை ரீதியாக விசாரணை நடத்த, டி.ஆர்.பி.,
தலைவர் பதவியில், சீனிவாசன் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், பாலிடெக்னிக் தேர்வு ஊழல் பிரச்னை முடியாததால், அரசு கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 1,883 இடங்கள் மற்றும் வேளாண் பயிற்றுனர் பணியிடங் களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர் பணியிடத்துக்கு நடந்த தேர்வின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு: திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பணி!

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக 
உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், காவலர்

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி

கடைசித் தேதி: 09.02.2018

மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/OA.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு!!!

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு

நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்

.
சிறப்பு பயிற்சி

தனியார் பள்ளிகளில், நுழைவு தேர்வுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 412 மையங் களில், இலவச நீட் பயிற்சி அறிவிக்கப்பட்டது; 100 மையங்களில் மட்டுமே, பயிற்சி அளிக்கப்படுகிறது.

வினாத்தாள்

எனவே, மற்ற பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்கில் சேர வசதியாக, அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங் களிடம், மாதிரி வினாத்தாள்களை பெற்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி தேர்வுகள் நடத்த, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆதார் எண் பெற சிறப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் பெற, சான்றிதழ் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போலி மாணவர்கள் பட்டியலை தடுப்பது, நலத்திட்டங்களை உரிய மாணவர்களுக்கு வழங்குவது, மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை சரியாக நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு, ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஆதார் எண் இல்லாத மாணவர்கள், ஆதார் பதிவு செய்ய, இன்று முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், வீட்டு முகவரியுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை, பள்ளிகள் வழங்கிய அங்கீகார சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை ஆவணமாக பயன்படுத்தலாம் என, வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.



போலியை நீக்க உத்தரவு

பள்ளிகளில், மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் இருந்து நீக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சரியான விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் உத்தரவிட்டுள்ளன.

இதன்படி, மாணவர்களின் பெயர், ஆதார் எண், பெற்றோர் பெயர், மாணவர்களின் மொபைல் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பான, 'எமிஸ்' இணையதள தொகுப்பில் சேகரிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல் தொகுப்பில், பல பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வாங்கி சென்ற மாணவர்களின் விபரங்கள், போலியாக இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, அனைத்து பள்ளிகளும், எமிஸ் விபரங்களை சரிபார்த்து, பள்ளிகளில் இருந்து வேறு இடங்களுக்கு சென்ற, மாணவர் விபரங்களை உடனே நீக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேசிய மாணவ விச்ஞானிகளாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு!!!

                                     

ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே: ஆதார் ஆணையம்!!!

புதுடில்லி: ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே
என ஆதார் ஆணையம், விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) சி.இ.ஓ., அஜய் பூஷன் பாண்டே டுவிட்டரில் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ஆதார் விவரங்களில் கை ரேகை பதிவு, கண் விழி படலம் மற்றும் புகைப்படம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் போலி அடையாள ஆவணம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும்.

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணக்கு விவரங்களை யு.ஐ.டி.ஏ.ஐ.,யால் பார்க்க முடியாது. ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே. வங்கி கணக்கை மத்திய அரசு முடக்கும் என்ற அச்சம் மக்களுக்கு வேண்டாம். ஆதார் தகவல்கள் எதுவும் கசியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.