யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/1/18

கழிவறை: பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளைப்
பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக தூய்மை நகரங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, தூய்மை நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பங்கேற்ற 434 நகரங்களில் சென்னை மாநகரத்துக்கு 235ஆவது இடம் கிடைத்தது. இந்தாண்டு தூய்மை நகர கணக்கெடுப்பு தொடங்கியிருக்கிறது. இது மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில், நகர உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் நேரடி கள ஆய்வு, பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் தூய்மை நகரம் தெரிந்தெடுக்கப்படும். இதற்கு மொத்தம் நான்காயிரம் மதிப்பெண்.

இந்த நிலையில், அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தோராயமாக 400 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த உத்தரவு குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும். இது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசின் அறிவுரையின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக