யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/15

மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை

ராமநாதபுரம்,:மத்திய அரசுத்துறைகளில் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதித்துறையில் மட்டும் 46 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மத்திய அரசில் 56 துறைகள், யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில் 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் சென்ற ஆண்டு வரை 33.01 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் 12,503 பணியிடங்களில் 5,823 காலியாக உள்ளன. இத்துறையில் அதிகபட்சமாக 47 சதவீதம் காலியாக இருக்கின்றன.
நிதித்துறையில் 1,76,260 பணியிடங்களில் 95,863 காலியாக உள்ளன. இது 46 சதவீதம். விமான போக்குவரத்துறையில் 44 சதவீதம், சிறுபான்மைத்துறை 41, பாதுகாப்புத்துறையில் 32, உணவு வழங்கல்துறை 31, வனத்துறை 37, வெளியுறவுத்துறை 34, கனரக தொழிற்சாலை 34, மனிதவள மேம்பாட்டுத்துறை 35 சதவீதம் என, அனைத்து துறைகளிலும் சராசரியாக 18 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விபரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அண்ணா பல்கலை. நுழைவுத் தேர்வு ரத்து

தொடர் மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

நவம்பர் 28-ஆம் தேதிக்குப் பிறகு சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதோடு, பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பவில்லை.

இதன் காரணமாக, டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடத்த இருந்த அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
இப்போது பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.எஸ். ஆராய்ச்சி படிப்புகள் சேர்க்கைக்காக சனிக்கிழமை (டிச.5) நடைபெற இருந்த நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறினார்.
இதற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது.
தற்போது அதே இடத்தில், புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.நேற்று காலை, 8:30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலுார் - 13; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் - 12; மதுரை மாவட்டம், பெரியாறு - 11; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும், 50 செ.மீ., மழை?'சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், அடுத்த இரு நாட்களில், மீண்டும் 50 செ.மீ., மழை பெய்யும்' என தனியார் வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தாம்பரத்தில் 49 செ.மீ., மழையும், சென்னை மற்றும் பிற சுற்றுப் பகுதிகளில், 29 - 36 செ.மீ., மழையும் பெய்தது, மிக அதிகபட்சமானது. இதுபோன்ற நிலை எதிர்பாராமல் நடப்பது. மீண்டும் இதேபோல மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது. தற்போது நிலவும் வானிலை நிலவரப்படி, மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு குடிநீர் பாக்கெட் ரூ.10; வாழைப்பழம் ரூ.20

வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் நிற்கதியாக தவிக்கும் நிலையில், ஒரு குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்க்கும், ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்க்கும் விற்கும் கொடூரம் சென்னையில் நடக்கிறது.
சென்னை, சைதாபேட்டை பகுதியில், நேற்று காலை, வழக்கமாக, ஒரு ரூபாய்க்கும் விற்கும் குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்; ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்; 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டன. அங்குள்ள ஓட்டல் மூடப்பட்டு, டோக்கன் கொடுத்து உணவுகள் தரப்பட்டன. இரண்டு இட்லி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் போல், நேற்றும், அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குடிநீர் கேன், 50 - 75 ரூபாய் வரை, அநியாயமாக விலை வைத்து வியாபாரிகள் விற்றனர். விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பாதிப்பு பகுதி மக்கள், இதுவாவது கிடைக்கிறதே என, வேறு வழியின்றி வாங்கிச் சென்றனர்.
'ஆபத்து நேரத்தில் மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வதை விட்டுவிட்டு, இதுபோன்று கூடுதல் விலை வைத்து விற்பது மனிதாபிமானமற்ற செயல்' என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


முட்டை, பிரட் தட்டுப்பாடுமெழுகுவர்த்தியும் இல்லை

சென்னை முழுவதும் மின் தடை நீடிப்பதால், மெழுகுவர்த்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் இருந்த, 'ஸ்டாக்' ஒரு நாளுக்கு கூட போதுமானதாக இல்லை. எமர்ஜென்சி விளக்கு இல்லாத வீடுகள், குடிசைப் பகுதிகளில், சிம்னி விளக்கு ஏற்றக் கூட, கெரசின் கிடைக்கவில்லை. மழை பாதிப்பு பெரிதாக இல்லாத பகுதிகளில், சமையல் எண்ணெய், முட்டை, பிரட் உள்ளிட்ட பொருட்கள் எந்த கடைகளிலும் கிடைக்கவில்லை; நிலைமை சீராக, ஓரிரு நாளாகும் என, வணிகர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய வசதி

சென்னையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இணைந்து, தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்காக, பல துறைகள் சார்பில் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

இவற்றைத் தொடர்பு கொள்வதிலும், இங்கு வரும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக கிடைப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரங்களை, துறை அதிகாரிகள் அறிந்துகொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 15 பேர் சேர்ந்து, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், பிரத்யேக தகவல் தொடர்பு மையத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், திண்டுக்கல் எஸ்.பி., சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் இணைந்து உள்ளனர்.
இந்த மையத்துக்கு தகவல் தெரிவிக்க, 080400 01000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தகவல் தெரிவிக்க, 98806 55555 எண்ணிலும், 'டெலிகிராம்' ஆப் வாயிலாக தொடர்பு கொள்ள, 72597 60333 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு


வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நவ., 7 முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆற்று ஓரங்களில் இருந்த வீடு, தொழிற்சாலைகளில், தண்ணீர் உட்புகுந்துள்ளது. சாலைகளில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கின.

இதையடுத்து, வாகனம், வீடு உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் செய்த பாலிசிதாரர்கள், இழப்பீடு கோரி அதிகளவில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர்.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழையால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களின் வசதிக்கு, சென்னையில் உள்ள அரசு பொது காப்பீட்டு நிறுவன அலுவலகங்களில், தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது மற்றும் தனியார் துறையில் உள்ள, 25 காப்பீட்டு நிறுவனங்களில், நவ., 7 முதல், நேற்று வரை, 2,000 பேர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளத்தில் மிதக்கும்அரசு அலுவலகங்கள்

கன மழையால், மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட, அரசு அலுவலகங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.சென்னை, கே.கே.நகரில், மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனரகம்; கிண்டி, திரு.வி.க., தொழிற் பேட்டையில் சமூக நலம், சத்துணவு திட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.

கன மழையால், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. பல அடி உயரத்திற்கு தேங்கி உள்ள தண்ணீரால், அலுவலகத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் சேதம் அடைந்தன. அடையாறு ஆற்றின் வெள்ள பெருக்கால், சமூக நலத்துறை அலுவலகத்தில் தண்ணீர் புகுந்து, முக்கிய ஆவணங்கள் நனைந்து உள்ளன.

தமிழக அரசு இணையதளம் முடக்கம்

சென்னை :தமிழக அரசு இணையதளம் நேற்று முடங்கியது.சென்னையில் மழை வெள்ளம் காரணமாக, மொபைல் போன் இணைப்புகள் செயல் இழந்துள்ளன. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளமும் நேற்று இயங்கவில்லை. இதனால், அரசு செய்திக்குறிப்புகளை மக்கள் பார்க்க இயலவில்லை. இதேபோல், பெரும்பாலான இணையதளங்களை, மக்கள் நேற்று பார்க்க இயலவில்லை.

நீங்க ஓ.கே.,வா?': 'பேஸ்புக்' அசத்தல்

சமூகவலைத் தளமான, 'பேஸ்புக்,' சென்னைவாசிகளுக்காக பிரத்யேக வசதியை, நேற்று ஏற்படுத்தியிருந்தது.சென்னையில், இரண்டு நாட்களாக, மொபைல்போன் சேவை செயல் இழந்துள்ள நிலையில், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்றவை மட்டும் வெளியுலக தொடர்பு சாதனமாக இருந்து வருகின்றன.
அதை உணர்ந்த, 'பேஸ்புக்' நிர்வாகம், சென்னையை சேர்ந்த தன் பயன்பாட்டாளர்களுக்கு, 'நீங்கள் ஆபத்தில் இருக்கீங்களா அல்லது பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்பதை, 'ஆர் யூ ஓ.கே.,?' எனக் கேட்டு தகவல் அனுப்பியது. அதற்கு, 'ஓ.கே.' என்று, 'கிளிக்' செய்தால், உடனே அவர்களின் பெயரை குறிப்பிட்டு, நட்பு வட்டாரங்களுக்கு, தகவல் அனுப்பியது. அதனால், தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், தங்கள் நேசத்துக்கு உரியோர் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை அறிந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இந்த வசதியை, 'பேஸ்புக்' ஏற்படுத்தி தருவது குறிப்பிடத்தக்கது

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது: 
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது. தற்போது அதே இடத்தில்,
புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.நேற்று காலை, 8:30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலுார் - 13; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் - 12; மதுரை மாவட்டம், பெரியாறு - 11; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும், 50 செ.மீ., மழை?'சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், அடுத்த இரு நாட்களில், மீண்டும் 50 செ.மீ., மழை பெய்யும்' என தனியார் வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தாம்பரத்தில் 49 செ.மீ., மழையும், சென்னை மற்றும் பிற சுற்றுப் பகுதிகளில், 29 - 36 செ.மீ., மழையும் பெய்தது, மிக அதிகபட்சமானது. இதுபோன்ற நிலை எதிர்பாராமல் நடப்பது. மீண்டும் இதேபோல மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது. தற்போது நிலவும் வானிலை நிலவரப்படி, மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மது குடித்ததால் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டமாணவியரை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல்:வகுப்பறையில் மது குடித்து, வாந்தி எடுத்து, மயங்கி விழுந்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, நான்குமாணவியரை, மீண்டும் இன்று பள்ளியில் சேர்க்க, கலெக்டர் தட்சிணாமூர்த்திஉத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், கடந்த, 21ம் தேதி நடந்தது. தேர்வு எழுதி கொண்டிருந்தபோது, பிளஸ் 1 மாணவியர், நான்கு பேர், வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.விசாரணையில், அவர்கள்,
மது அருந்தியது தெரிய வந்தது. மாணவி ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்காக, மாணவியர் மது அருந்தியது தெரிந்தது.மாணவியரிடம், தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, 'டிசி' எனப்படும், பள்ளியிலிருந்து வெளியே அனுப்புவதற்கான சான்றிதழை கொடுத்துள்ளார்; மூன்று மாணவியர் பெற்றுக்கொள்ளவில்லை.பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியருக்கு, 'கவுன்சிலிங்' எனப்படும் நல்லொழுக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, இன்று மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:இன்றைய மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்லது எது, கெட்டது எது என, பிரித்து பார்க்கத் தெரியவில்லை. சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தான் புரியவைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவு மட்டுமின்றி, நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். வகுப்பறையில் விழா கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்.

15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளனர். அவர்கள், அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து, ஏராளமானோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி, லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகின்றன. 

அவர்களுக்கு உதவ பலர் தயாராக இருந்தும், அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாமல் இருந்தனர்.இரு தரப்பினரை இணைப்பதற்காக, சென்னையில் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, ஒரு சிறிய அறையில், இன்டர்நெட் வசதியுடன் கூடிய, 10 லேப்டாப்கள், 'லேண்ட் லைன்' மற்றும் மொபைல்போன்கள் உதவியுடன், 24 மணிநேர கட்டுப்பாடு அறையை அமைத்துள்ளனர்.

உதவி தேவைப்படுவோரையும், உதவ விரும்புவோரையும் இணைத்து உதவிபுரிந்து வருகின்றனர். அவர்கள், மணிவண்ணன், அலெக்ஸ் பால் மேனன் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப்' எண் - 98806 55555, 'டெலிகிராம்' எண் - 72597 60333 மற்றும் 12 இணைப்புகள் கொண்ட, 080400 01000 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தங்களை தொடர்பு கொள்ளலாம்' என, கேட்டுக் கொண்டு உள்ளனர்.

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர், தொழில்நுட்ப அதிகாரி, என பொருளாதாரம், புள்ளியியல், சட்டம், சி.ஏ, சிவில், எலக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுமார் 115 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனினும், டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணபங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை சேர்த்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.600யும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், இது குறித்த விரிவான தகவலுக்கு சிண்டிகேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

டிசம்பர் 4ல் நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள்மீண்டும் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றது. இந்நிலையில்,

மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகதுணைவேந்தர் அறிவித்துள்ளார்.தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flash News - கனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (04/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை விடுமுறை 
*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை
*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை  

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:
சென்னையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்கள் பலத்த மழை கொட்டியது. கடந்த 2 நாட்களாகவும் இதேபோல் சென்னையில் பலத்த பெய்து வருகிறது.
வரலாறு காணாத இந்த மழைக்கு பூமி வெப்பம் அடைந்து வருவதே காரணம் என்று பாரீசில் நடந்து வரும் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை தலைமை இயக்குனர் சந்திரபூஷண் கூறுகையில், சென்னை நகரில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழைக்கு இந்த பூமி வெப்பமயமாகி வருவதுதான் காரணம். இத்தனைக்கும் பூமியில் ஒரு செல்சியசுக்கும் குறைவான அளவு வெப்பமே அதிகரித்து இருக்கிறது. அதற்கே இந்த மழை என்றால் 2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்என்றார்.
ஆக்ஷன் எய்ட் அமைப்பின் ஹர்ஜித்சிங் கூறும்போது, “காஷ்மீர் முதல் உத்தரகாண்ட் வரை கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நிலைமையை பார்க்கும்போது, இது நிச்சயமாக பூமியின் பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்பட்டது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டார்.

தமிழக சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் தீர்மானம்:

தமிழக சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் தீர்மானம்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக மருத்துவர்களே வழங்கிடும் முறை தொடர வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:சிறப்பு மருத்துவ இடங்கள் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மருத்துவர்களே என்ற நிலையை தமிழக அரசு எடுத்து வைக்க வேண்டும்.
 தமிழகத்துக்கு உள்ள நியாயமான உரிமைகளை காப்பாற்ற வேண்டும்.
 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கும் முறையை கைவிட வேண்டும். 
 இதற்கென்று தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருப்பதற்கு அரசியல் சட்டப்பிரிவின் அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகள் தொடங்கிட வேண்டும். இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். 
 குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை போதிய அளவில் தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:
வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதியில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலைகொண்டது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
இந்த நிலையில், வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே இடத்தில் நீடிக்கிறது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழையும் பெய்யும்.
5 நாட்களுக்கு மழை
காற்றழுத்த தாழ்வுநிலை மட்டும் அல்லாது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தற்போது நிலவியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா பகுதிகள், கோவை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வங்ககடலில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுநிலையினால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 7–ந் தேதி வரை மழை இருக்கும். கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும், அதன் பிறகு படிப்படியாக மழை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை வரும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகபட்சமாக தாம்பரத்தில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) பரவலாக நல்ல மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
*தாம்பரம் – 49 செ.மீ.
*செம்பரம்பாக்கம் – 47 செ.மீ.
*மரக்காணம் – 42 செ.மீ.
*செங்கல்பட்டு, பொன்னேரி – தலா 39 செ.மீ.
ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய இடங்களில் தலா 38 செ.மீ., சென்னை மீனம்பாக்கம் 35 செ.மீ., மகாபலிபுரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 34 செ.மீ., செங்குன்றம், அண்ணா பல்கலைக்கழகம் தலா 32 செ.மீ., தரமணி 30 செ.மீ., சோழவரம், நுங்கம்பாக்கம் ஆதலா 29 செ.மீ., தாமரைப்பாக்கம், மதுராந்தகம் தலா 28 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம் 27 செ.மீ., திருவள்ளூர், புதுச்சேரி 22 செ.மீ., பூண்டி, உத்திரமேரூர் தலா 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னைக்கு கனமழைக்கான வாய்ப்பு எப்படி?
வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், இதன் தொடர்ச்சியாக உள்மாவட்டங்களில் நிலவும் மேலடுக்கு சுழற்சியினால் மலைப்பகுதிகளில் மழை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.
இந்த நிலையில், சென்னையை நோக்கி கிழக்கில் இருந்து நிறைய மேகக்கூட்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கனமழையும் பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் இதுவரை பெற்ற சராசரி மழை அளவு 57 செ.மீ.
தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர்–டிசம்பர்) சராசரியாக 44 செ.மீ. மழை அளவை பெறும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28–ந்தேதி தொடங்கியது.
இதுவரை தமிழகத்தில் பெய்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, சராசரியாக 57 செ.மீ. மழை அளவை பெற்றுள்ளது. இது சராசரி அளவை விட 13 செ.மீ. அதிகம் ஆகும். சென்னையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 154 செ.மீ., மீனம்பாக்கத்தில் 175 செ.மீ. மழை பெய்து உள்ளது.
மிக கனமழை, கனமழை பெய்த மாவட்டங்கள் எவை?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் படி, நேற்று முன்தினம் முற்பகல் வரை பதிவான மிக கனமழை, கனமழை, மிதமான மழை பெய்த மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு:–
மிக கனமழை – கடலூர், காஞ்சீபுரம், புதுச்சேரி, விழுப்புரம்.
கனமழை – நாகப்பட்டினம், தஞ்சை, திருவள்ளூர், வேலூர்.
மிதமான மழை – அரியலூர், சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர்.
மழை பெய்யாத மாவட்டங்கள் – மதுரை, தேனி.

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:
சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10–ந்தேதி ஒரே நாளில் 26 செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை நேற்று முன்தினம் பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:
சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10–ந்தேதி ஒரே நாளில் 26 செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை நேற்று முன்தினம் பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.