வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:
வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதியில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலைகொண்டது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
இந்த நிலையில், வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே இடத்தில் நீடிக்கிறது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழையும் பெய்யும்.
5 நாட்களுக்கு மழை
காற்றழுத்த தாழ்வுநிலை மட்டும் அல்லாது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தற்போது நிலவியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா பகுதிகள், கோவை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வங்ககடலில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுநிலையினால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 7–ந் தேதி வரை மழை இருக்கும். கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும், அதன் பிறகு படிப்படியாக மழை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை வரும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகபட்சமாக தாம்பரத்தில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) பரவலாக நல்ல மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
*தாம்பரம் – 49 செ.மீ.
*செம்பரம்பாக்கம் – 47 செ.மீ.
*மரக்காணம் – 42 செ.மீ.
*செங்கல்பட்டு, பொன்னேரி – தலா 39 செ.மீ.
ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய இடங்களில் தலா 38 செ.மீ., சென்னை மீனம்பாக்கம் 35 செ.மீ., மகாபலிபுரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 34 செ.மீ., செங்குன்றம், அண்ணா பல்கலைக்கழகம் தலா 32 செ.மீ., தரமணி 30 செ.மீ., சோழவரம், நுங்கம்பாக்கம் ஆதலா 29 செ.மீ., தாமரைப்பாக்கம், மதுராந்தகம் தலா 28 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம் 27 செ.மீ., திருவள்ளூர், புதுச்சேரி 22 செ.மீ., பூண்டி, உத்திரமேரூர் தலா 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னைக்கு கனமழைக்கான வாய்ப்பு எப்படி?
வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், இதன் தொடர்ச்சியாக உள்மாவட்டங்களில் நிலவும் மேலடுக்கு சுழற்சியினால் மலைப்பகுதிகளில் மழை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.
இந்த நிலையில், சென்னையை நோக்கி கிழக்கில் இருந்து நிறைய மேகக்கூட்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கனமழையும் பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் இதுவரை பெற்ற சராசரி மழை அளவு 57 செ.மீ.
தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர்–டிசம்பர்) சராசரியாக 44 செ.மீ. மழை அளவை பெறும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28–ந்தேதி தொடங்கியது.
இதுவரை தமிழகத்தில் பெய்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, சராசரியாக 57 செ.மீ. மழை அளவை பெற்றுள்ளது. இது சராசரி அளவை விட 13 செ.மீ. அதிகம் ஆகும். சென்னையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 154 செ.மீ., மீனம்பாக்கத்தில் 175 செ.மீ. மழை பெய்து உள்ளது.
மிக கனமழை, கனமழை பெய்த மாவட்டங்கள் எவை?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் படி, நேற்று முன்தினம் முற்பகல் வரை பதிவான மிக கனமழை, கனமழை, மிதமான மழை பெய்த மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு:–
மிக கனமழை – கடலூர், காஞ்சீபுரம், புதுச்சேரி, விழுப்புரம்.
கனமழை – நாகப்பட்டினம், தஞ்சை, திருவள்ளூர், வேலூர்.
மிதமான மழை – அரியலூர், சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர்.
மழை பெய்யாத மாவட்டங்கள் – மதுரை, தேனி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக