யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/15

வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு


வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நவ., 7 முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆற்று ஓரங்களில் இருந்த வீடு, தொழிற்சாலைகளில், தண்ணீர் உட்புகுந்துள்ளது. சாலைகளில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கின.

இதையடுத்து, வாகனம், வீடு உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் செய்த பாலிசிதாரர்கள், இழப்பீடு கோரி அதிகளவில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர்.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழையால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களின் வசதிக்கு, சென்னையில் உள்ள அரசு பொது காப்பீட்டு நிறுவன அலுவலகங்களில், தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது மற்றும் தனியார் துறையில் உள்ள, 25 காப்பீட்டு நிறுவனங்களில், நவ., 7 முதல், நேற்று வரை, 2,000 பேர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக