யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/15

சென்னையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்வு 2 பெண் உள்பட மேலும் 6 பேர் சாவு:

சென்னையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்வு 2 பெண் உள்பட மேலும் 6 பேர் சாவு:
சென்னை நகரின் மழையால் நேற்றும், நேற்று முன்தினம் இரவும் 2 பெண்கள் உள்பட மேலும் 6 பேர் உயிர்ப்பலியானார்கள். இதையொட்டி மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளமோ வெள்ளம்
சென்னை நகரில் மழை ஒரு பக்கம் கொட்டோ, கொட்டு என்று கொட்டுகிறது. இன்னொரு பக்கம் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி போன்றவற்றிலிருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரும் வெள்ளமாக சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் ஓடுகிறது.
குறிப்பாக தென்சென்னை பகுதி முழுவதும் சாலைகளில் 10 அடிக்கு மேல் மழை தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நேற்றும் சென்னை நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
68 பேர் பலி
நேற்று முன்தினம் இரவிலும், நேற்று பகலிலும் 2 பெண்கள் உள்பட மழையால் மேலும் 6 பேர் பலி ஆனார்கள் இதனால் சாவு எண்ணிக்கை 68–ஐ தொட்டது.
நேற்று முன்தினம் இரவு ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமலஹாசன் அலுவலகத்தின் அருகே உள்ள எல்டாம்ஸ் சாலையில் ஜான்சன்(வயது 28) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருகிலுள்ள வங்கி அலுவலகத்திற்குள் அவர் நுழைந்தார். அலுவலக வாசலில் உள்ள கிரில் கதவை தொட்டபோது அதில் மின்சாரம் பாய்ந்து ஜான்சன் பரிதாபமாக இறந்து போனார். அந்த வங்கி அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மின்சார கசிவு ஏற்பட்டு கிரில் கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதைத் தொட்ட ஜான்சன் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
பெண்கள் பலி
பல்லாவரம் தர்கா ரோட்டை சேர்ந்த கவிதா (33) என்ற பெண் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். ரவி என்பவர் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அந்த பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவில் செல்லும்போது ஆட்டோ மீது திடீரென்று மரம் ஒன்று விழுந்து விட்டது. அதில் ஆட்டோ நசுங்கி கவிதா பரிதாபமாக இறந்து போனார். ஆட்டோ டிரைவர் ரவி அதிசயமாக உயிர் தப்பினார்.
தாம்பரத்தில் தங்கவேலு (57) என்பவர் வீட்டில் மின்சார விளக்கு சுவிட்ச்சை போட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் லட்சுமி (65) என்ற மூதாட்டி வீட்டில் நுழைந்த மழைத்தண்ணீருக்குள் சிக்கி உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
நேற்று பகலில் கீழ்ப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் மாண்டு போனதாக தகவல் வெளியானது. அவரது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆற்று வெள்ளத்திலும் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது பெயர் விவரங்களும் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக