யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/3/18

குடந்தையில் மார்ச் 24-இல் வேலைவாய்ப்பு முகாம்


கும்பகோணம் அரசு ஆண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:

மார்ச் 24-ம் தேதி 

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி நடைபெறவுள்ள முகாமில் 50-க்கும் அதிகமான தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை அளிக்க உள்ளனர்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இலவசப் பயிற்சி வகுப்புக்காகப் பதிவுகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பப் படிவங்கள் வழங்குதல், தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவுகள், அயல் நாட்டு வேலைவாய்ப்பு பணிக்கான பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

முகாமில் 18 வயது முதல் 45 வரையிலான (இரு பாலர்) பணி நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் சுய விவரஅறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


வேலைவாய்ப்புச் செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள இந்த ஆப் பயன் உள்ளதாக இருக்கிறது.
 நீங்களும் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள் !https://play.google.com/store/apps/details?id=com.app.tnpscjobs

பள்ளியில் பேரிடர் மேலாண்மை பாடம்- ஆசிரியர் கருத்து!

அரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!!!

ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும்போது கவனமாக இருங்கள்;-ஆணையம் திடீர் எச்சரிக்கை!!!

மாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூடாது!!!

2% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில்!

தலைமைச் செயலக வட்டார செய்தி:



 2% அகவிலைப்படி உயர்வுக்கான கோப்பு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சில தினங்களில் முதல்வரின் உத்தரவுக்காக வைக்கப்படும் என தகவல்.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது: விடையளிக்க போதிய நேரம் இருந்ததாகவும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. 
பொறியியல் படிப்புக்கு முக்கியமாக கருதப்படும் கணித தேர்வு சற்று கடினமாக இருந்ததால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ? என்ற அச்சம் மாணவ-மாணவிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில், இயற்பியல் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவிகள் புனிதா, கவிநயா, காயத்ரி, திவ்யா, ஹேமலதா ஆகியோர் இயற்பியல் தேர்வு குறித்து கூறும்போது, “கணித தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டதால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன்தான் தேர்வுக்கூடத்துக்குச் சென்றோம். ஆனால், அவற்றுக்கு மாறாக தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 1, 3, 5, 10 மதிப்பெண் கேள்விகள் அனைத்துப் பிரிவுகளிலும் கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட பல வினாக்கள் தேர்வுக்கு வந்திருந்தன. விடையளிப்பதற்கு போதிய நேரம் இருந்தது” என்றனர்.“கணித தேர்வுடன் ஒப்பிடும்போது இயற்பியல் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்தது. குறிப்பாக 10 மதிப்பெண் வினாக்கள் மிகவும்எளிதாக இருந்தது” என்று சூளைமேடு கில்டு நகர் டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவி கரீனா தெரிவித்தார். பல்வேறு மையங்களில் தேர்வெழுதிய மாணவ-மாணவிகளும் இதே கருத்தை கூறினர். அதேபோல், நேற்று நடந்த பொருளாதார தேர்வும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது என்று பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருப்பதால் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோல, 200-க்கு195-க்கு மேல் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதனால், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப்மதிப்பெண் உயரலாம்.

பிதாகரஸ் தேற்றமா? அல்லது போதையனார் தேற்றமா?

பிதாகரஸ் தேற்றமா? அல்லது போதையனார் தேற்றமா?
இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.

கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.


இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.
"ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.

இரத்தினம் தாத்தா:
"இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"
அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"

இரத்தினம் தாத்தா: "சொல்றேன் கேள்,
இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, *போதையனார்* என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்

விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.

இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.

அமிர்தா: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
--------------------------------
இது வெறும் கதை அல்ல.
நிரூபணம்:
நீளம் = 4m, உயரம் = 3m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் = √(4^2 + 3^2) = 5

போதையனார் கோட்பாடு:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5 

School Team Visit - சேலம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை கோரி மனு

2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. குமார் அவர்கள் இன்னைறய தினம் பள்ளிகல்விதுறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களையும்.
மாற்றுதிறனாளி நலவாரிய ஆணையரையும் சந்தித்து முன்னுரிமை கோரி மனு அளித்துள்ளார்.

20/3/18

வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :
.
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
.
என்ன பதில் சொல்வது இதற்கு..?
.
லாஜிக்படி பார்த்தால் , எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் ..!
எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,"நீங்களே சொல்லுங்க ..!"என்றேன்.
.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :
# "புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்..!
இராமாயண காலத்தில் ....
ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்
.
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி
வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்
அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம்.
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்

# கதை சுவையாகத்தான் இருக்கிறது...!
.
நல்லது... வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள் :
.
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?
இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?
.
சிம்பிள் ..!
.
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
.
ஏன்..?
.
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்
இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
.
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்
இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
.
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது
 கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
.
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .
அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
.
இல்லை..!
.
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
.
ஆனால் ....
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,

அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி , அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை , 
இனி யார் வந்து திருத்துவது..?

அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!



1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.


2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
             துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR
       அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5)Govt Leter 248 P&AR dt 20.10.97
     தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.

6)Govt Leter no 35/N/2012-/9
P&AR  N Dept 03.04.2013
  ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.

7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
      அரசுஊழியரிடம்  பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8)Govt Leter No 12516 P&AR 2015
    அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது

19/3/18

புதிய அப்டேட்களுடன் வாட்ஸ் அப்!

உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலிருந்தே இரண்டிற்கும் பொதுவாக பல அப்டேட்களை வெளியிட்டு வந்துள்ளது. அதன்படி இந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் அதன் பொதுவான கருத்துக்களைப் பதிவிட, ஒரு குரூப்பின் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் அதற்கு சிறு விளக்கத்தை பதிவிடுவதற்கு ஏதுவாக description என்ற வசதியை புதிதாக இணைத்துள்ளனர். இதற்கு முன்னதாக பயனர்கள் ஸ்டேட்டஸ் மூலம் அவர்களின் நிலையை உணர்த்தும் விதத்தில் ஒரு வசதி செயல்பட்டு வருவதைப் போல் இந்த வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு குரூப்பில் உள்ள பயனரை தேடிக் கண்டறியும் வசதி மற்றும் வாய்ஸ் காலின் இடையே அதனை வீடியோ காலாக மாற்றம் செய்து கொள்ளும் வசதியையும் இதனுடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைத்துள்ளது. இந்த சோதனையை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் முதல் முயற்சி செய்து வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அப்டேட்டில் இந்த வசதிகள் வெளியாகி உள்ளது. வெர்ஷன் 2.18.54 பயன்படுத்தும் நபர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.

Blackboard Jungle. | ஆசிரியர் மாணவர் பற்றிய கதை :

நகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி.
போதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள்.
கல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்ட காலம்.
கற்பித்தலில் ஆர்வமுடன் புதிய ஆசிரியர் வருகிறார். டேடியே என்பது அவர் பெயர்.
மாணவர்களின் ஒழுங்கீனச்செயல்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது‌.
தலைமையாசிரியர் முதல் மூத்த ஆசிரியர்கள் அனைவருமே அவர் கூறுவதை ஏற்காமல் மாணவர்கள் அமைதியானவர்கள் என்று கூறுகின்றனர்.
வகுப்பிற்குப் போ. மாணவர்களைப் பார்த்து நின்று பாடம் நடத்திவிட்டு வந்துவிடு. அவர்களுக்கு உன் முதுகைக் காட்டிவிடாதே. வேறு எதையும் கவனிக்காதே. என்பது மூத்த ஆசிரியரின் அறிவுரை.

ஆசிரியர் மீது எதையாவது எறிவது, அவரின் பொருட்களை உடைத்தெறிந்து, பெண் ஆசிரியரை மானபங்கம் செய்ய முயல்வது என்று மாணவர்களின் செயல்கள் அனைத்துமே வன்முறையின் உச்சம்.

இருந்தாலும் தொடர்ந்த முயற்சியால் மாணவர் மனங்களை மாற்ற முடியும் என்று டேடியே நம்புகிறார்.

ஆசிரியருக்கு வேறு தொடர்பு இருக்கிறது என்று அவர் மனைவிக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. பார்த்து எழுதக்கூடாது என்று எச்சரிக்கும் போது ஒரு மாணவர் கத்தியைக்காட்டி மிரட்டுகிறார்.
கத்தியைப் பறிக்கும் போராட்டத்தில் ஆசிரியரின் கையில் வெட்டுக்காயம் ஏற்படுகிறது.
சிறிய கண்டிப்புடன் அவனையும் அவனது நண்பரையும் ஆசிரியர் மன்னிக்கிறார்.
மாணவர்களிடையே மாற்றம் மலர்கிறது.

வகுப்பறை ஒரு வித்தியாசமான போர்க்களம். குழந்தைகளின் வயதுக்கேற்ற சேட்டைகளைச் செய்கிறார்கள். ஆசிரியர் தமது பக்குவத்திற்கேற்ப செயல்படவேண்டும். மாற்றம் என்பது நொடியில் மலர்வதல்ல. தொடர்ந்த முயற்சியின் கனி என்பதைச் சொல்லும் படம்
கரும்பலகைக்காடு.

முக்கியக் குறிப்பு.
இந்தப்படம் வெளியான  ஆண்டு 1955.
நாம எவ்வளவு பின்தங்கி இருக்கோம்! நம்ம பசங்க இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க!

- கலகல வகுப்பறை சிவா

பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழக அரசு திரும்பி பார்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம்!!!

கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை :

நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.நாகை, அக்கரைப்பேட்டை டாடா நகரில், ஊராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம்வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. கிராம மக்கள் பங்களிப்பாக 1.50 லட்சம் மற்றும் அரசு நிதியாக மூன்று லட்சம் என, 4.50 லட்ச ரூபாய் மதிப்பில், இவை அமைக்கப்பட்டன.மேலும், கிராம மக்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும், 'லேப்டாப்' மற்றும் ஒரு வகுப்பறைக்கு குளிர் சாதன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, ஸ்மார்ட் வகுப்புகளையும், 'ஏசி' வகுப்பறையையும் துவக்கி வைத்தார். 

புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

வரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் 100 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு, நேரடி நியமனம்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரையில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படும். அதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 250 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 450 காலியிடங்களும் (மொத்தம் 700 காலியிடம்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.ஏற்கெனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண்

எனவே, தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் உருவாகும் காலியிடங்களைச் சேர்த்து கணிசமான இடங்கள் தகுதித்தேர்வு வெயிட் டேஜ் மதிப்பெண் முறையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட் டித் தேர்வு மூலமாகவும் (முதுகலை ஆசிரியர்கள்) நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்வு வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். 

2018-2019 ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற கல்வி நிலையங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31

உதவித் தொகை
சிறுபான்மையினர் மாணவர்கள் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ITI, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், M.Phil ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த, சீக்கிய, ஜெயின், பார்லி மதத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அனைத்து கல்வி நிலையங்களும் இணைய தளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீடு பெற்றதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே 2018 - 2019 ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற முடியும்.

கல்வி உதவித் தொகை பெற பதிவு செய்ய CLICK HERE

10, 11ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் பதில்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.