யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/9/15

14-இல் துணை மருத்துவ படிப்புகளுக்கான 2-ஆம் கட்டக் கலந்தாய்வு

துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
 2,104 இடங்கள் காலி: பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், அரசு கல்லூரிகளில் 555 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 6,621 என மொத்தம் 7,176 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து 555 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 4,517 என மொத்தம் 5,072 இடங்கள் நிரம்பின. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எஞ்சியுள்ள 2,104 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 14, 15, 16, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
 சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். மேலும் விவரங்களுக்கு: www.tnhealth.org.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக