பி.எட்., எம்.எட். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பது, மாணவர் சேர்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 30 முதல் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின் படி, பி.எட்., எம்.எட். ஆகிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளின் படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலை எதிர்த்து தமிழக சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், படிப்பு காலம் ஓராண்டாக இருக்குமா அல்லது இரண்டு ஆண்டுகளாக இருக்குமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதனால், பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கை தாமதமாகி வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக