யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/15

ஜனவரி 1 மட்டும் போதாது! தேர்தல் கமிஷன் கோரிக்கை

புதுடில்லி,:'இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்ய, ஜனவரி 1 என்ற தேதி மட்டுமே, 'கட்-ஆப்' தேதியாக உள்ளதை மாற்றி, மேலும் பல தேதிகளை அனுமதிக்க வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. தற்போது, நம் நாட்டில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களே, வாக்காளர்களாக,
தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும். இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில், புதிய வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 'ஜனவரி, முதல் தேதியில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும்' என, விதிமுறை உள்ளது. இதனால், ஜனவரி, 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட அடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்தால், 18 வயது பூர்த்தியானவர்கள் கூட, ஓட்டளிக்க முடியாத நிலை உள்ளது. இவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு, அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை 
நிலவுகிறது. இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்காக, 'ஜனவரி 1 என்ற, ஒரே ஒரு தேதியை மட்டுமல்லாமல், வேறு சில தேதிகளையும், கட்-ஆப் தேதிகளாக அறிவிக்க வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்டஅமைச்சகம் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இடையே, விரைவில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக