யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/15

நன்கொடை வசூலிக்கும்இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ரத்து

மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை கட்டணம் வசூலிக்கும் இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், எட்டு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. எனினும், பல அரசு கல்லுாரிகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் கல்லுாரிகளில் இடங்கள் இல்லாமல், மாணவர்கள் வேறு கல்லுாரிகளை தேடும் நிலை உள்ளது.

இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., விசாரித்ததில், சரியான தேர்ச்சி காட்டாத கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளன. தேர்ச்சி காட்டிய தனியார் கல்லுாரிகள், மாணவர்களிடம், அதிகளவுக்கு மறைமுக கட்டணமும், நன்கொடை கட்டணமும் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, மத்திய மனிதவள அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அனைத்து தொழில்நுட்பக் கல்வி பல்கலைகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், 'மத்திய அரசு அமைத்த ஸ்ரீ கிருஷ்ணா கட்டண கமிட்டியின் அறிவுறுத்தல்படி, தனியார், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகள் நன்கொடை கட்டணம் வசூலிக்கக் கூடாது. இதை மீறும் நிறுவனங்கள் குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, இ - மெயில் மூலம் புகார் அளிக்கலாம். புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக