யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/16

மத்திய அரசு பணிகளில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 11 சதவீத இடங்களே நிரப்பப்பட்டுள்ளன: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சம்


மத்திய அரசு பணிகளில் ஒபிசி வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் 11 சதவீத இடங்களே நிரப்பப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.மண்டல் கமிஷன் பரிந்துரை யின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதஇடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 


இந்த இடஒதுக்கீடு மத்திய அரசு பணியில் கடந்த 1993-ல் இருந்தும் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறு வனங்களில் 2008-ல் இருந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசு பணிகளில் ஓபிசி வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டிவகுப்பின ரின் பிரதிநிதித்துவம் தொடர்பான தகவல்களை அளிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த பொறியி யல் பேராசிரியர் இ.முரளிதரன் என்பவர் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் விண் ணப்பித்திருந்தார். (மத்திய அரசு பணிகளில் எஸ்சி வகுப்பினருக்கு 15 சதவீதமும், எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது)அதன் அடிப்படையில், மத்திய அரசின் 9 அமைச்சகங்கள், 9 துறை களில் 1.1.2015-ன் படி குருப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி பணிகளில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, ஓசி வகுப்பினரின் பிரதிநிதித்துவம் தொடர்பானதகவல்களை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அவருக்கு அளித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

ஓபிசி வகுப்பினர் குரூப்-ஏ பணிகளில் 12 சதவீதம் குரூப்-பி பணிகளில் 7சதவீதம் குரூப்-சி பணிகளில் 17 சதவீதம் குரூப்-டி பணிகளில் 16 சதவீதம் என ஒட்டு மொத்தமாக 11 சதவீதம் பேர் இருக் கிறார்கள். எஸ்சி வகுப்பினரை பொருத்தவரையில், குரூப்-ஏ பணிகளில் 13 சதவீதமும் குரூப்-பிபணிகளில் 15 சதவீதமும் குரூப்-சி பணிகளில் 20 சதவீதமும் குரூப்-டி பணிகளில் 29 சதவீதமும் ஒட்டு மொத்தமாக 17 சதவீதமும் உள்ளனர்.எஸ்டி வகுப்பினர் குரூப்-ஏ பணிகளில் 6 சதவீதமும் குரூப்-பி பணிகளில் 6சதவீதமும் குரூப்-சி பணிகளில் 6 சதவீதமும் குரூப்-டி பணிகளில் 11 சதவீதமும் ஒட்டு மொத்தமாக 6 சதவீதமும் இருக் கிறார்கள். பொதுப்பிரிவினர் (ஓசி) குரூப்-ஏ பணிகளில் 69 சதவீதமும் குரூப்-பி பணிகளில் 71 சதவீதமும் குரூப்-சி பணிகளில் 57 சதவீதமும் குரூப்-டி பணிகளில் 44 சதவீதமும் ஒட்டுமொத்தமாக 65 சதவீதமும் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக