யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/16

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே யாமிருக்க பயமேன்! உளவியல் பயிற்சியளிக்கும் கல்வித்துறை

திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட அரசுப்பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை பயமின்றி எதிர்கொள்ள கல்வித்துறை சார்பில், உளவியல் ரீதியான ஆலோசனை பயிற்சிகள் துவங்கியுள்ளன. பள்ளி மாணவர்கள், தங்களை சுற்றி நடக்கும் பல வன்முறை சம்பவங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


இதன் விளைவாகவே, அச்சம்பவங்களை தங்கள் வாழ்விலும் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்கள், தங்களின் கோபத்தை வெளிப்படுத்த இடமின்றி பள்ளிகளில் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் வெளிப்படுத்துகின்றனர். வேறு சில மாணவர்கள், மனதளவில் பாதிக்கப்பட்டு, எதிலும் ஈடுபாடில்லாமல் இருப்பது, தேர்வில் தோல்வி, தோல்வியால் தற்கொலை முயற்சி என மாணவர்களே அவர்களின் தவறான வழியில் கொண்டு செல்கின்றனர்.நடமாடும் ஆலோசனை மையத்திட்டம்: இத்தகைய மனபோக்கை மாற்றுவதற்கும், மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், பல்வேறு சூழல்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கவும் நடமாடும் ஆலோசனை மையத்திட்டம் கொண்டுவரப்பட்டது.இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக அமைத்து, அதற்கு ஒரு உளவியல் நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தை உள்ளடக்கியது கோவை மண்டலம்.வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு, வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மனதில் புதிய சிந்தனைகள் குறித்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் உளவியல் நிபுணர் மூலம் ஆலோசனை வகுப்புகள் சுழற்சி முறையில் நடக்கிறது.கடந்தாண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 மாணவர்களுக்கு தேர்வு பயத்தை நீக்குவதற்கான சிறப்பு ஆலோசனை பயிற்சிகள் நடந்தன. இதனால், தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடப்பாண்டிலும் இப்பயிற்சி, இம்மாதம் முதல் துவங்கியுள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சுழற்சி முறையில் நடமாடும் ஆலோசனை மையம் செயல்படுகிறது.

'மனநிலையை அறிந்து ஆலோசனை'

உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறியதாவது: பாடங்களை நன்றாக படித்தாலும், தேர்வின் போது படித்த பாடங்களும் புதிதாக உள்ளது. திரும்ப திரும்ப படித்தாலும் மறந்து விடுகிறது என மாணவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மாணவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்கப்படுகிறது. சில மாணவர்கள் நீண்ட காலமாக பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்து, தற்போது வர துவங்கியுள்ளனர். அம்மாணவர்களுக்கு தனியாக ஆலோசனை வழங்கப்படுகிறது. நினைவாற்றலை அதிகரிப்பது, தேர்வின் போது ஏற்படும் பயத்தை நீக்குவது உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக