யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/16

பள்ளித் தேர்வு அறிவிப்பு: ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிவழங்குவதை தவிர்க்க வலியுறுத்தல்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தீபாவளிப் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பள்ளிகளுக்கு அதிக நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. மழைக்குப் பிறகு,பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மீலாதுநபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என 9நாள்கள் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டன. 

தற்போது இந்த விடுமுறை நாள்கள்முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், வருகிற 11-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. மேலும், பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதியும் தொடங்குகின்றன.இந்நிலையில், பத்தாம் வகுப்பு தமிழாசிரியர்களுக்கு இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்த 3 நாள் பயிற்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இந்த பயிற்சி வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் (ஜன.7,8,9) பாப்பாகோயில் தனியார் கல்லூரி, மயிலாடுதுறையில் என 2 இடங்களில் நடைபெறுகிறது.

நிகழ் கல்வியாண்டை பொருத்தவரை மாணவர்கள் இயற்கை இடர்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கிடையே தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. இதுபோன்ற நேரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாற்றுப் பணி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக