யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/16

பள்ளி மாணவிகளுக்கு கற்றல் கையேடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தேர்வுக்கு தயாராகும் வகையில் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் ஆர்எம்ஜெயின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி அந்தோணி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் மோகன சந்திரன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சீதாலட்சுமி பங்கேற்று 10, 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் கற்றல் கையேட்டை வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்கள் தைரியமாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இந்த கற்றல் கையேடு வழங்கப்படுகிறது. மாணவர்கள் இந்தக் கையேட்டை முழுமையாகப் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளிகளின் துணை ஆய்வாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கே.சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக